“ஆகாதவர்களைக் கண்டால்…” கோபமும் பதட்டமும் நடுக்கமும் ஏன் வருகின்றது…?

Tension and frustration.png

“ஆகாதவர்களைக் கண்டால்…” கோபமும் பதட்டமும் நடுக்கமும் ஏன் வருகின்றது…?

ஒரு பையனை நாம் நல்லவன் என்று கருதி விட்டால் அந்த உணர்வின் சத்தை நாம் சுவாசிக்கின்றோம்.

நல்லவன் என்ற உணர்வுகள் நமக்குள் வந்தவுடனே நம் கண் அந்தப் பையனைப் பார்த்தவுடன் “வாப்பா… என் கண்ணு…!” என்ற நிலைகளிலே மகிழ்ச்சியாக அழைக்கின்றோம்.

ஆனால் அதே சமயம் அதே பையன் அவன் தவறு செய்கின்றான் என்ற எண்ணத்தை எண்ணி அந்த எண்ணத்தால் நாம் பார்த்தால் அவனைப் பார்த்தவுடனே என்ன சொல்கிறோம்?

இவன் ஆளைப் பார்…! “அசுரப் பயல்” என்கிற நிலையும் “அயோக்கியன்…” என்ற இந்த உணர்வுகள் நமக்குள் தோன்றி அந்த உணர்வின் சக்தி நமக்குள் ஆகி நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களெல்லாம் நடுங்கும்.

1.அவனைக் கண்டவுடனே இந்த உணர்வுகள்
2.நம் நல்ல குணங்களுக்கு எதிரியாகி
3.அவனை ஏசும்படி வைக்கும்.

நாம் எதை எண்ணுகின்றமோ அந்த உணர்வின் தன்மை கொண்டுதான் நம் கண் அதை வழி காட்டும். நாம் எதை எண்ணுகின்றமோ அதனின் உணர்வை நம் உயிர் இயக்கி நம் உடலாக இயக்கும்.

எதை…?

அதாவது கெட்டவனைப் பார்த்துப் பதட்டத்துடன் நாம் பார்ப்போம் என்றால் அந்த உணர்வுகள் வந்து
1.துரித நிலைகள் வேகமாக வேலை செய்யும் உணர்வுகளுடன்
2.(பதட்டமான உணர்வுகள்) கலந்து
3.நாம் வேகமாக வேலை செய்யும் நிலையை அது நடுங்கச் செய்யும்.

வேகமாக ஏதாவது செய்தால் அந்த வேலைகளைச் சரியாகச் செயல்படுத்தவிடாதபடி அது செயலாக்கிவிடும். ஒரு பொருளைத் தூக்கினால் அதிக வலு கொடுத்தால் நடுக்கங்கள் வரும்.

ஒருவனைப் பார்க்கப்படும் போது… “இப்படிச் செய்கிறான்…!” என்று அசுர உணர்வு கொண்டு பார்த்தோம் என்றால் நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அது நடுங்கும்.

உதாரணமாக உங்களுக்கு ஆகாதவரைப் பார்த்தவுடனே உங்கள் உடலிலே நடுக்கங்கள் வருவதைப் பார்க்கலாம். அந்தப் பதட்டம் கொடுப்பதைப் பார்க்கலாம்.

இவையெல்லாம் காரணம் உங்கள் கண்ணால் “வேண்டாதவன்…” என்று எண்ணும் போது எண்ணிய உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.

நாம் எண்ணியது அவர் மேல் பதியச் செய்த இந்த உணர்வுகள் அவனைப் பார்த்தவுடனே
1.நாம் முதலிலே எதனால் கோபப்பட்டு பதட்டப்பட்டோமோ
2.அந்த அலைகள் நமக்கு முன் நிற்கிறது
3.அது சூரியன் காந்த சக்தியால் கவர்ந்து நமக்கு முன் படர்ந்து கொண்டிருக்கின்றது.

அவனைப் பார்த்த பின் அதே உணர்வுகளை நாம் கவர்ந்து நமக்குள் பதட்டத்தையும் அதே சமயத்தில் சிந்தனையற்ற சொல்லையும் சொல்லச் செய்யும்.

அவனைக் கோபிக்கும் நிலையும் வரும்.

இந்த உணர்வுகள் நம் நல்ல குணங்களுக்கு அது வேண்டாத நிலையாகி அது உடலுக்குள் சேர்த்த பின்
1.நாம் ஏதாவது ஒன்றைச் சிந்தனை செய்ய நேர்ந்தால்
2,நமக்குள் பதட்டமும் அவசரமும் வரும்
3.அவசரப்படும் சொல்களைச் சொல்லச் சொல்லும்.

நம்முடைய எண்ணம் ஒரு பொருளை நல்ல விதத்தில் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணி அடுத்தவரிடம் சொல்வோம்.

ஆனால் அவசரப்பட்டு நாம் சொல்லும் வார்த்தையை அவன் சிறிது மந்தமாகச் செயல்பட்டால்
1.உடனே ஏசச் சொல்லும்… பேசச் சொல்லும்,
2.அவனை தள்ளிவிடச் சொல்லும்.
3.இந்த உணர்வெல்லாம் நமக்குள் உண்டாகும்.

இந்த உணர்வுகள் அவ்வாறு ஏற்பட்டால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கு அது தீமையே உருவாக்கும்.

இவையெல்லாம் நாம் சுவாசிக்கும் உணர்வுகளை “நம் உயிர் இயக்கும் நிலைகள் எப்படி…?” என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு உயிரும் கடவுள்
2.அவனால் உருவாக்கப்பட்ட ஆலயம் அந்த உடல்
3.மனித உடலை உருவாக்கிய நல்ல குணங்கள் அந்த உடலுக்குள் தெய்வமாக இருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

யாரும் தவறு செய்யவில்லை. நாமும் தவறு செய்யவில்லை.

நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் உயிரிலே பட்டபின் அதனின் உணர்ச்சிகளாகி அதுவே உடலை இயக்கச் செய்து சொல்களாகவும் செயலாகவும் வெளி வருகின்றது.

நம் வாழ்க்கையில் இருள் சூழ்ந்த நிலைகள் வரும் பொழுது அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் சுவாசித்தோம் என்றால் அந்த உணர்வின் இயக்கமாக நம் உயிர் இயக்கி இருளைப் போக்கி ஒளி என்ற நிலைகளாக நம் சிந்தனையைத் தெளிவாக்கும்.

பதட்டத்தையும் அவசரத்தையும் அடக்கிப் பொருளறிந்து செயல்படும் திறனாக சிந்தித்துச் செயல்படும் நிலைகளில் நம்மை இயக்கும்.
1.நம் செயல்கள் நமக்கு நல்லதாகவும்
2.மற்றவர்களுக்கும் நன்மை செய்வதாக அமையும்.

Leave a Reply