புறத் தூய்மையும் மனத் தூய்மையும்

Mindful bliss

புறத் தூய்மையும் மனத் தூய்மையும்

 

உதாரணமாக அப்பொழுது தான் குளித்து முடித்துத் தூய்மையாக வந்திருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது அந்த நேரத்தில் ஒருவர் நம்மைச் சந்தித்துத் தன்னுடைய வேதனையான நிலைகளைச் சொல்கிறார் என்றால் நாம் குளித்து விட்டு வந்திருந்தாலும் அதைக் கேட்ட சிறிது நேரத்தில் உடலில் “பிசு…பிசு…” என்று ஆகிவிடும்.

அவர் சொல்வதைக் கேட்கும் பொழுது சலிப்பு சஞ்சலம் என்ற நிலைகள் இப்படி வேதனையாகப் பேசுகின்றார்களே என்ற உணர்வு வரும். அந்தச் சலிப்பு வந்த பின் உங்கள் உடலில் பிசு பிசுப்பு வரும். நீங்கள் பார்க்கலாம்.

அப்பொழுது குளித்ததனால் என்ன பயன்?

1.ஒருவன் கோபமாகத் திட்டியிருப்பான். அதை நாம் பார்த்திருப்போம்.

2.அந்தக் கோப உணர்வுகள் “நம் ஆன்மாவில் (நாம் சுவாசிக்கும் நம்முடைய ஈர்ப்பு வட்டம்) இருக்கும்”.

3.உடலில் அழுக்குடன் இருக்கும் பொழுது இது தெரியாது.

4.குளித்து விட்டு வந்தபின் பார்க்கலாம்…, “நம் ஆன்மாவில் இருப்பது எரியுதே… எரியுதே…, என்று எரிச்சலாவதைப் பார்க்கலாம்”.

எத்தனை குளித்தாலும் இந்த ஆன்மாவில் பட்ட எரிச்சலைப் போக்க முடியாது. எரிச்சலைப் போக்க வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா. எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா. எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஒரு பத்து நிமிடம் தன் உடலுக்குள் இதைச் செலுத்தித் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும் நாங்கள் பெறவேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடமாவது எண்ணுதல் வேண்டும்.

பின் எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்தல் வேண்டும்.

ஏனென்றால் மனம் அமைதியாக இல்லை என்றால் புறத் தூய்மை செய்து பல நறுமணங்களைப் போட்டாலும் புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டாலும் மகிழ்ச்சி காணாமல் போய்விடும்.

ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் தூய்மை செய்யும்  பழக்கம் வந்து விட்டால் நம் மனதைப் பாதிக்கும் நிலைகளிலிருந்து விடுபடலாம்.

Leave a Reply