தூக்கணாங்குருவி – மின் மினிப் பூச்சி

Fire fly

தூக்கணாங்குருவி – மின் மினிப் பூச்சி

 

மின் மினிப் பூச்சி உடலிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மை அந்த ஒளிக்கற்றைகல் பட்ட பின் சிறு அணுக்கள் விலகிச் சென்றுவிடும். அதன் மூலம் இலையிலுள்ள அந்த நுண்ணிய அணுக்களை உணவாக உட்கொள்ளும்.

 

மின் மினிப் பூச்சி வந்ததென்றால் ஒரு தூக்கணாங்குருவி என்ன செய்யும்?

 

இந்த மின் மினிப் பூச்சியைப் பிடித்துக் கொண்டு தன் கூட்டில் களி மண்ணை ஒட்ட வைத்து அதில் இந்த மின் மினிப் பூச்சியை ஒட்ட வைத்துக் கொள்ளும்.

 

எதற்காக?

 

தன் கூட்டில் வெளிச்சத்திற்காக அதை ஒரு விளக்காக (LIGHT) வைத்துக் கொள்கிறது.

 

தூக்கணாங்குருவி இருக்கும் கூட்டுக்குள் பார்த்தால் களிமண் இருக்கும். பறந்து செல்லும் மின்மினிப் பூச்சியைக் கொத்தித் தன் கூட்டிற்குள் ஒட்ட வைத்துத் தன் குஞ்சுகளுக்கு வெளிச்சத்தைக் காட்டி வழி கொடுக்கின்றது.

 

குஞ்சுகள் இருட்டுக்குள் தவிக்காதபடி இந்த உணர்வின் தன்மை அஞ்சிடாமல் சப்தமிடாமல் இருப்பதற்காகவும் சப்தமிட்டால் மற்ற எதிரிகள் இங்கே வந்துவிடும் என்பதற்காகவும் இவ்வாறு செய்கின்றது.

 

தூக்கணாங்குருவி கனமான இடத்தில் அது கூடு கட்டாது.

 

ஏனென்றால் எலியோ மற்ற தன் எதிரிகளோ அந்த இடத்திற்குள் வந்துவிடாமல் இருப்பதற்காக மரத்தில் அந்த இலை நுனியில் வைத்துத்தான் தன் கூட்டைக் கட்டும்.

 

இலை நுனியில் ஏன் கூட்டைக் கட்டுகிறது?

 

பலவீனமான இடத்தில் கூடு இருப்பதால் அங்கே வேறு எதிரிகள் வந்து உட்கார்ந்தால்

1.உடனே தெரிந்துவிடும்.

2.கூடு கட்டியிருக்கும் இடத்தின் வலு குறைந்துவிடும்.

3.இவ்வாறு அதற்குண்டான ஞானத்தைக் கொண்டு செயல்படுத்துகிறது.

 

தன் அறிவின் தெளிவு கொண்டு ஒரு மரத்தில் கூட்டைக் கட்டி மின்மினிப் பூச்சியை ஒட்ட வைத்து அதன் வெளிச்சத்தால் குஞ்சுகள் சப்தம் எழுப்பாதபடி செய்கிறது.

 

ஏனென்றால் வெளிச்சம் இல்லாத பொழுது குஞ்சுகள் சப்தங்களை எழுப்பும். அந்த உணர்வின் ஒலிகளைக் கேட்டுப் பூனையோ அதைப் போன்று வௌவாலோ வந்து குஞ்சுகளை இரையாக்கி கொள்ளும்.

 

வௌவாலெல்லாம் தன் உணர்வின் ஒலி கொண்டு குஞ்சுகளைக் கொன்று தன் உணவாகப் புசித்துவிடும்.

 

இதைப் போன்ற நிலைகளிலிருந்து தன் குஞ்சுகளைக் காக்க குஞ்சுகளிடமிருந்து அந்த ஒலிகள் வராதபடி தடுப்பதற்காக அதனின் சப்தத்தை அமுக்க மின் மினிப் பூச்சியை ஒளியாக அங்கே வைக்கின்றது.

 

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இயற்கையின் தன்மை வரப்படும் பொழுது

1.ஒவ்வொரு உயிரினமும் எவ்வாறு விளைந்தது?

2.அதனின் ஞானம் எப்படி இருக்கிறது?

3.”அதை நீ உற்றுப் பார்…” என்று காட்டினார் குருநாதர்.

 

அந்த உணர்வின் அறிவாக விளைந்த நிலை தான் மனிதனின் அறிவு. அவ்வாறு உருவாக்கப்பட்டு ஆறாவது அறிவு பெற்று

1.“கார்த்திகேயா” எதையும் நீ அறிந்து கொள்ளும் நிலையாக விளைந்து

2.மனிதனாக வந்தாய் என்று தெளிவாகக் காட்டினார்.

 

அதைத்தான் நான் உங்களிடம் நான் சொல்கிறேன்.

 

தூக்கணாங்குருவி இரவிலே இரை தேடச் செல்ல முடியாது. அது வரையிலும் மின்னிக் கொண்டிருக்கும் அந்த வெளிச்சத்தைப் பார்த்துக் குஞ்சுகள் அப்படியே ஏங்கிக் கொண்டிருக்கும்.

 

அந்த நிலையிலேயே உறங்கிவிடும்.

 

குருநாதர் காட்டிய வழி கொண்டு இரவு முழுவதும் தூக்கணாங்குருவி என்ன செய்கிறது? அதனின் எண்ணங்கள் எப்படி இருக்கிறது? குஞ்சுகள் என்ன செய்கிறது? என்று இரவு முழுவதும் பார்த்த்துக் கொண்டிருந்தேன்.

 

1.இதை அறிவால் அறியக் கூடிய நிலை இருந்தாலும்

2.அதை உணர்வால் எப்படி நீ அறிய வேண்டும்? என்று குருநாதர் காட்டிய நிலைகள் தான் இது.

Leave a Reply