நெஞ்சுப் பகுதியில் படபடப்பு வருவதைத் தடுக்க எப்படித் தியானிக்க வேண்டும்…?
உதாரணமாக ஒரு பயமான உணர்வை நாம் சந்திக்க நேர்ந்தால் என்ன நடக்கின்றது?
கருவிழி ருக்மணி இங்கே எலும்புக்குள் உள்ள ஊனில் பதிவாக்குகிறது. பதிவாக்கியபின் அந்த மானிட்டர் (MONITOR) என்ன செய்கிறது?
1.பதிவானதும் இங்கே “பட.., பட..,” என்று இயக்கும்.
2.குணத்துக்குத் தகுந்தாற்போல் இங்கே உடலுக்குள் பார்க்கலாம்.
3.அதிகமாக ஆசை வந்து பணம் கிடைக்கும் என்று எண்ணினால் பட…பட… என்று ஆகிறது.
4.பயமானாலும் இங்கே பட…பட… என்று ஆகிறது.
5.சரக்கு எடுத்து அனுப்பிக் கொண்டிருக்கின்றோம், போகவில்லை என்றால் பட…பட… என்று ஆகிறது.
அதே மாதிரி சீக்கிரம் அனுப்ப வேண்டும் என்ற நிலையில் கொஞ்சம் கால தாமதமாகிவிட்டால் உடனே படபடப்பு வருவதைப் பார்க்கலாம்.
அப்பொழுது நம் சிந்தனை குறைந்து கோபம் வருவதைப் பார்க்கலாம். இழுக்கும் அப்படியே “பட…பட…” என்று இந்த உணர்வு இங்கே பதிவுக்குத் தக்கவாறு அந்த இயக்கங்கள் காற்றிலிருந்து அது இழுக்கின்றது.
அப்படி இழுப்பதற்குக் காரணம் யார் தெரியுமா? நம் கண்ணின் நினைவுகள் தான்.
கண்ணின் நினைவை நாம் எண்ணி இரண்டும் கலந்து என்ன செய்கிறது? காற்றிலிருந்து இழுக்கும். இவனுக்குச் சரக்கு அனுப்ப வேண்டுமே…! நேரத்துக்கு அனுப்ப வேண்டும்…! என்ற இரண்டும் கவர்கிறது.
இரண்டும் கவரந்து இங்கே பதிவாகப்படும் பொழுது இங்கே இழுக்கின்றது. இழுத்தவுடன் நுகர்ந்து உயிரிலே பட்டவுடனே என்ன செய்கிறது? கலக்க உணர்வுகள் வருகிறது.
சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா?
நாம் சாதாரண நடைமுறையில் இருப்பதில் இத்தனை விதமான வித்தியாசங்கள் இருக்கிறது. அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?
இந்தப் பதிவு அந்த மாதிரி வந்தாலும் கூட உடனே “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தை எடுக்கின்றோம். ரிக்கார்ட் செய்கிறோம்.
என்னிடம் வேலை செய்பவர்கள் நல்ல தைரியத்துடன் நன்றாக இருக்க வேண்டும். நல்ல ஊக்கமாக வேலை செய்ய வேண்டும். பொருள்களைத் தரமாக அந்த நேரத்திற்குள் உற்பத்தி செய்ய வேண்டும் என்று இப்படி எண்ணி எடுத்தோம் என்றால் அங்கே நல்லதாகின்றது
சரக்கை அனுப்பும்பொழுது உற்பத்தியாகும் பொருள்களைப் பார்த்து இந்தப் பொருள் வாங்குபவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற உணர்வைக் கலந்துவிட வேண்டும்.
இப்படி வேதனைப்பட்டதை மாற்றிப் பழகுதல் வேண்டும். இது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக். ஆனால்
1.நீங்கள் வேதனைப்பட்டுச் சரக்கை அனுப்பி வைத்தீர்கள் என்றால்
2.அதே சரக்கு அவனை அறியாமலேயே தவறு செய்ய வைக்கின்றீர்கள். (உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்)
3.அவர்களை அறியாமலேயே தவறு ஏதாவது ஒன்றிலே செய்து விடுவார்கள்.
4.அப்பொழுது வலு இழந்துவிடுகிறது.
முதலிலேயே நீங்கள் இஙகிருந்து சரக்கில் ரிக்கார்ட் பண்ணி அனுப்பிவிட்டீர்கள் என்றால் அவனையும் காக்கின்றது. நம் பொருளும் விற்பனையாகின்றது. பேரும் கிடைக்கும்.
இதுவெல்லாம் எலக்ட்ரானிக்தான் (நம்முடைய உணர்வலைகள் உணர்ச்சிகளாக இயக்கும் நிலைகள்)
இதில் உள்ள நிலைகளை நீங்கள் போட்டு எதை நீங்கள் தியானத்தில் எடுத்துக் கொடுக்கின்றீர்களோ நமக்கு மட்டுமல்ல
1.எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற இந்த நல்ல உணர்வு அங்கே விளையப்படும் போது
2.அந்த மனித உடலிலிருந்து வரக்கூடியது இதனால் விளைகின்றது.
நம் சொல் தான். ஆனால் இங்கே விளைகிறது. அந்த உணர்வு என்ன செய்கிறது? அலைகளாக மாறுகின்றது. அப்பொழுது இந்த கூட்டமைப்புகள் இந்த மாதிரி வரக்கூடிய நிலைகள் இந்தக் காற்றுமண்டலத்தில் தான் பதிவாகின்றது.
நாம் எல்லோரும் சேர்ந்து தியானம் செய்கிறோம் தியானத்தை எடுக்கும் பொழுது இரத்த நாளங்களிலிருந்து எல்லா உறுப்புகளுக்கும் தோல் மண்டலம் வரை கொண்டு போகின்றோம். வலு பெறச் செய்துவிடுகின்றோம்.
அப்பொழுது காற்றிலிருந்து பிரித்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது. ஒரு பழக்கத்திற்கு வந்தால் ரொம்ப அற்புதமாக இருக்கும்.
ஒன்றும் சிரமம் இல்லை. சிரமப்பட்டு அந்த மந்திரத்தை அப்படி ஆயிரம் தடவை சொல்ல வேண்டும், இந்த மந்திரத்தை இரண்டாயிரம் தடவை சொல்ல வேண்டும். மறந்து விட்டால் எல்லாம் போய்விட்டது என்ற நிலை இல்லை.
உடனுக்குடனே அந்த ரிக்கார்டை துருவ நட்சத்திரத்தை எடுத்து அந்த உணர்வை மாற்றிக் கொண்டே வாருங்கள். இந்தக் கணக்கு கூடும். உடல்களில் உள்ள எல்லா செல்களிலும் இந்த உணர்வு ரெக்கார்ட் அதிகமாக ஆகின்றது.
ஆக, இப்படி துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஒவ்வொரு நாளும் காலையில் எடுத்தோம் என்றால் எல்லாவற்றிற்கும் கொண்டு வந்து விடுகின்றோம்.
எல்லா அணுக்களிலும் சேர்த்துக் கொண்டு வரப்படும்போது உயிரைப் போலவே நம் உடலில் ஜீவ அணுக்களை ஒளியாக மாற்றிக் கொண்டே வருகின்றது.
ஏனென்றால்
1.அந்தந்தக் காலங்களில் விதைகளைப் போட்டு வைத்தோம் என்றால்
2.அவைகள் முளைத்து பின் விளைந்து
3.அந்தந்தக் காலத்திற்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
இதே போல்தான் நம் உடலில் வரக்கூடிய அந்த உணர்வுகளை இப்படி எல்லாம் மாற்றி பழக வேண்டும்.
இது உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் இந்த உண்மையை நான் அனுபவித்துச் சொல்கிறேன்.
“சொல்கிறேன்…” என்றால் இங்கு விளைந்துள்ளது. அதைச் சொல்லாகச் சொல்கிறேன். நீங்கள் கேட்கின்றீர்கள்.
1.கேட்கும் போது உங்களுக்குள் பதிவாகின்றது.
2.நினைக்கும்போது மீண்டும் அதை எடுக்கக்கூடிய சக்தி கிடைக்கின்றது.
3.இவ்வளவுதான் ஒன்றும் சிரமப்பட வேண்டியது இல்லை.
பெரிய அதிசயம் இல்லை.
திட்டுகிறவனைப் பற்றி எண்ணிக் கொண்டேயிருந்து அவனை நினைத்தாலே நமக்குக் குழப்பம் வருகிறது. வியாபாரத்தில் இதே போல ஏமாற்றிவிட்டார்கள் என்றால் கோபம் வருகிறது.
இதே மாதிரித்தான் எல்லாவற்றிலும் நமக்குள் “அந்தப் பதிவு தான்” மீண்டும் நினைவாகின்றது.
ஆகையினால் நீங்கள் மிகச் சக்தி வாய்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் நினைவைக் கொண்டு வர வேண்டும்.