கெடுதல் செய்பவர்களை உற்றுப் பார்க்கும்போது நம் எண்ணங்கள் “கெட்டவர்கள்” என்றுதான் எண்ணத் தோன்றுகிறது – அந்தக் கெட்டது நமக்குள் வராது தடுக்க வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை

Image

Soul protection method

கெடுதல் செய்பவர்களை உற்றுப் பார்க்கும்போது நம் எண்ணங்கள் “கெட்டவர்கள்” என்றுதான் எண்ணத் தோன்றுகிறது – அந்தக் கெட்டது நமக்குள் வராது தடுக்க வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை

 

இப்பொழுது  விஷத்தன்மையான உணர்வுகள் பரவியுள்ளதால்,. யாரிடமாவது வேகமாகச் சண்டை போட்டால் “இரண்டில் ஒன்று பார்க்கலாம்… போ..!” என்ற எண்ணம் வரும்.

 

அதைப்போலத்தான் கொலைகளும் கொள்ளைகளும் நடப்பது. அவன் செய்கிறான் என்று நினைக்க வேண்டாம். நம்மையும் செய்யத் தூண்டி விடும்.

 

அவன்தான் செய்கிறான் என்று எண்ண வேண்டாம்.

1.அதே உணர்வுகளை நாம் அதிகமாக நுகர்ந்தோமென்றால்

2.நம்மையும் அந்த நிலைக்கு ஆளாக்கும்.

 

அந்த நஞ்சுக்குள் இருந்து நாம் தப்ப முடியாது என்ற நிலைக்கு நாம் வருகிறோம். நாம் நினைக்கிறோம்… “அவன்தானே அப்படிச் செய்கிறான்” என்று,

 

இந்த உணர்வின் விஷத் தன்மையைப் பார்க்கப்படும்போது தன் நண்பனிடத்தில் பழகினாலும் அவன் விட்டுக் கொடுக்கவில்லை என்றால் “இரண்டில் ஒன்று தீர்த்துக்கட்டு…” என்ற உணர்வுதான் இங்கே வரும்.

 

அவனில் விளைந்த உணர்வுகள் என்ன ஆகிறது?

1.நமக்கு இடையூறு செய்கிறானா…!

2.”அரசனாக்கி அவனைத் தொலைத்துக்கட்டு” என்ற நிலைகளில் நமக்குள் இருக்கும் உணர்வுகள் உந்தும்.

 

“என்னமோ ஆகிவிட்டுப் போகட்டும்…. விடு…” என்கிற நிலையில் நம் நல்ல குணத்தை அழித்துவிடும்.

 

“எங்கோ நடக்கிறது…” என்று எண்ண வேண்டாம். நமக்குள் இருந்து நமக்குள் எதிரியாகி நம் நல்ல உணர்வைக் கொன்று இப்படித்தான் புசிக்கும்.

 

அன்று மகரிஷிகள் தனக்குள் தீமையை அகற்றும் நிலைகளைத் தனக்குள் வளர்த்து அந்தத் தீமையை அகற்றிய நிலைகள் கொண்டு அகற்றிய மெய்ஞானியின் உணர்வை அரசாக்கி “வேகா நிலை” என்ற முழுமை அடைந்தனர்.

 

இதைப்போன்ற நிலைகளைப் பெறுவதற்கு “சாமி நன்றாகச் சொன்னார்…” என்ற நிலைக்குப் போகாதபடி “நாம் இதைப் பின்பற்ற வேண்டும் என்ற நிலைக்கு” முற்பட வேண்டும்.

 

இதைக் கேட்டுணர்ந்தவர்கள் எல்லோரும் அந்தத் தீமைகளை அகற்றும் நிலைக்கு அதை முறைப்படிச் செயலாக்கும் நிலைக்கு வரவேண்டும்.

 

அடுத்தவர்களுடைய தீமையான உணர்வுகள் நமக்குள் வளராது தடுக்கும் எண்ணம் வர வேண்டும். அப்பொழுது அவருக்குள் விளைந்த தீயவினைகள் நமக்குள் விளையாது தடுக்கலாம்.

 

இந்த உணர்வு பரவப் பரவ நம் மீது அவர் எண்ண எண்ண அவர் உணர்வுகள் மாறும். மாறி விட்டதென்றால் அவனுள் விளைந்த தீமைகளை அடக்கவும் அவனால் முடியும்.

 

எல்லா நெல்லும் அரிசியாகும்போது முழுவதாக வரவில்லை. ஒரு நெல்லைப் போடுகிறோம் விளைகிறது. ஒன்று கருக்காயாகப் போய் விடுகிறது. ஒன்று  வெறும் சோடையாகப் போய் விடுகிறது.

 

எல்லாம் ஒரே செடியில்தான் அதையும் மிஞ்சி வருவதுதான் நல்லவைகளாக வருகிறது.

 

“அது என்னடா…? ஞானத்தைப் பெறவேண்டும் என்று இந்த வழியில் வருகிறார்கள். வந்த பின் இந்த மாதிரிச் செய்கிறார்கள்…! என்கிற நிலை வரப்படும்போது இதில் இரண்டு கருக்காயாகும் நிலை வரும்.

 

இவன் அயோக்கியத்தனம் பண்ணிக் கொண்டிருந்தான். இவன் போய் இந்தத் தியானத்தில் சேர்ந்திருக்கிறான், அங்கே இவரைச் சேர்த்துக் கொண்டார்கள் என்று ஒரு கற்பனை.

 

ஒருவர் தவறு செய்கின்றார். அவர் திருந்த வேண்டுமென்று இங்கே வருகிறார்.

 

அவன் அயோக்கியத்தனம் செய்தான். “பார்…” இவர்களுடன் சேர்ந்து கொண்டு இருக்கிறான். “இவனுக்கு எப்படிப் பக்தி வரும்” என்று இப்படிச் சிலர் சொல்வார்கள்.

 

ஆனால் அவர்கள் செய்யும் அயோக்கியத்தனம் அதை வலுப்படுத்தி, அதை அரசனாக்குகிறது. இவர் இதைத்தான் சுட்டிக் காட்டுவார்.

1.அவர் அவருக்குள் நல்லதை வளரவிடவில்லை.

2.நல்லதைப்பற்றி வளர்ப்பதற்கு எண்ணமும் இல்லை.

3.நல்லவராக ஆகவேண்டுமென்ற எண்ணமில்லை.

4.எண்ணியது அவருடைய நிலைகளில் “அவர் கெட்டவர்” என்றுதான் எண்ணுகின்றார்.

 

கெட்டவர் என்ற நிலைகளில் நாம் எண்ணும் போதெல்லாம், ஒருவன் வேதனைப்படுவதைப் பார்த்து அதை ரசித்துச் சாப்பிடுபவர்கள் போன்றுதான்.

 

இந்த மாதிரிச் சொல்பவர்கள் எல்லோருக்கும் மனம் எப்படி இருக்கும்…! ஒருவர் அடிக்கடி கஷ்டப்பட வேண்டும். இவர்கள் அவர்களைப் பார்த்து ரசிப்பார்கள்.

 

ஆனால் கடைசியில் இவர்கள் எங்கே போவார்கள்?

 

தெரியாது…!

 

இன்று மனிதனாக இருக்கிறோம். எல்லாம் தெரிந்து கொண்டோம் என்றிருப்போம்.

1.அசல் பாம்பாகத்தான் செல்வார்கள்,

2.அல்லது “கடு…கடு…” என்று இருந்தால் தேள் இனமாகத்தான் செல்வார்கள்.

3.நிச்சயம் அவர்கள் உயிர் அங்கேதான் கொண்டு செல்லும்.

 

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.