வான்மீகி மாமகரிஷி உரைத்த இராமாயணக் காவியத்தில் “அவர் கண்டுணர்ந்த பேருண்மைகள்”

vanmiki ramayana

வான்மீகி மாமகரிஷி உரைத்த இராமாயணக் காவியத்தில் “அவர் கண்டுணர்ந்த பேருண்மைகள்”

 

அகஸ்திய மாமகரிஷிகள் கண்டுணர்ந்து வெளிப்படுத்திய உணர்வின் தன்மைகளை வான்மீகி மகரிஷி தம்முள் பெற்றார்.

 

அவர் வானை நோக்கி ஏகி சூரியனின் இயக்கங்களையும் நாம் எப்படிப் பிறந்தோம்? என்பதையும் அறிந்தார். பல கோடிச் சரீரங்களைக் கடந்து பத்தாவது நிலை பெறும் உயிரையும் பற்றி அறிந்து கொண்டார்.

 

மனிதர் தமக்குள் பலவிதமான நிலைகள் வரும் பொழுது ஆசையின் உணர்வுகளால் கண் கொண்டு உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை தமக்குள் வரும் பொழுது எண்ணங்கள் தோன்றி அது தன் இனங்களாகப் பெருக்கும் பொழுது அதனின் நிலைகள் எத்தகையது? என்பதையும் தமக்குள் அறிந்தார்.

 

வசிஷ்டர் என்ற நிலையில் இந்த உடலான சபைக்குள் நாம் கவர்ந்து கொண்ட சக்திகளின் உண்மையின் தன்மையை உணர்த்தக்கூடிய நிலைகள் பிரம்ம குருவாகக் காட்டினார்.

 

வசிஷ்டர் என்றால்

1.தான் கவர்ந்து கொண்ட உண்மையின் சக்தியை

2.”உயிரான நிலைகளுக்கு உணர்த்தி” வழி காட்டும் நிலை வருகின்றது.

 

அதே போல் விசுவாமித்திரர் அதாவது கோபத்தின் தன்மை கொண்டு எதையும் சாதிக்கும் வல்லமையும் எதனையும் அடக்கிடும் வல்லமை கொண்டவர்.

 

இராமன் தமக்குத் துணையாக இருக்கவேண்டும் என்று வேண்டி அவர் வருகின்றார். அதாவது கோபத்தின் உணர்வின் தன்மையின் செயல் இது.

 

இராமன் அம்பை எய்தான் என்றால் கணைகளைத் திரும்பி வாங்கிக் கொள்வான் என்ற நிலைகொண்டு

1.கோபத்தின் உணர்வைக் கடுமையாக எடுத்தால் இதனின் உணர்வின் தன்மை

2.கேட்போரின் உணர்வுகளில் அதே கோபத்தின் உணர்ச்சிகளை ஊட்டி,

3.எதிரி என்ற நிலையை உருவாக்கும்.

 

விசுவாமித்திரர் அவர் தவம் செய்து எதையும் அடக்கி ஆட்சி புரியும் தன்மை கொண்டவர். கோபத்தின் தன்மை ஆட்சி செய்யும் நிலையாக வரும் பொழுது “அவருடைய எண்ணங்களே” அவருக்கு எதிரியாக வருகின்றது.

 

விசுவாமித்திரர் தனக்குள் அந்த அசுர உணர்வு வராதபடி இராமனைத் தமக்குத் துணையாக அழைத்துச் செல்ல விரும்புகிறார்.

 

1.இராமனின் சாந்த உணர்வின் தன்மை பெறவேண்டும் என்பதற்காக

2.சீதாராமனை எனக்கு உதவியாக அனுப்பு என்ற நிலையில்

3.சாந்த குணங்கள் பெறவேண்டும் என்று அதையே தவமிருந்தார்.

 

ஆனால், பிற்காலத்தில் வந்தவர்கள் இதை மாற்றியமைத்துவிட்டனர். அசுரர்கள் என்னைத் தாக்குகின்றனர். ஆனால் தாங்கும் உணர்வு தனக்கில்லை என்று திரித்துவிட்டனர்.

 

இராமனோ சாந்த உணர்வுகளின் தன்மை கொண்டு “தீமைகளை ஒடுக்கி… மகிழச் செய்யும்” தன்மையைத் தனக்குள் சேர்ப்பவன். அந்த எண்ணங்கள் பெறப்படவேண்டும் என்ற நிலையை இங்கே காட்டப்படுகின்றது.

 

இராமாயணத்தைப் பார்த்தால் அதில் தசரதன் ஆயிரம் வருடம் வாழ்ந்தார், ஆனால் புத்திரன் இல்லை. ஆகையால் அசுவமேத யாகம் செய்தார் என்று வான்மீகி காட்டுகின்றார்,

 

அதாவது இந்த உயிரான நெருப்பில் ஒவ்வொரு உணர்வை எடுத்து உணர்வின் சத்தாக மாற்றப்பட்டு பரிணாம வளர்ச்சியாகி இன்று மனிதனாகப் பிறந்தோம்.

 

பல உயிரினங்களை வென்று ஒன்றை ஒன்று கொன்று ஒன்றை ஒன்று விழுங்கி ஒன்றின் உணர்வுகள் மாறி பலவற்றையும் அறிந்திடும் உணர்வை மனித உடலில் பெற்ற இந்த உயிரால் உருவாக்கப்பட்டவன் (தசரதன்) என்று அங்கு வான்மீகி தெளிவாக்கினார்.

 

ஆனால் இந்த உண்மையின் தன்மைகள் வெளிவரவில்லை.

 

தசரதர் ஆயிரம் வருடம் வாழ்ந்தார். தமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதால் தவம் இருந்தார். அசுவமேத யாகம் செய்தார். புத்திர மேஷ்டி யாயம் செய்து விஷ்ணுவை வணங்கினார்.

 

யாகத் தீயிலிருந்து, விஷ்ணுவின் தூதுவர் பாத்திரத்தில் பாயாசம் கொண்டு வருகிறார். பாயாசத்தை முதல் மனைவிக்குக் கொடுத்ததால் மகன் இராமன் பிறக்கிறான். இரண்டாவது மனைவிக்குக் கொடுத்ததால் பரதன் பிறக்கிறான்.

 

மூன்றாவது மனைவிக்குப் பாயாசத்தைக் கொடுத்து எஞ்சியிருப்பதையும் இவளுக்கே கொடுத்ததால் சத்ருக்ணன் இலட்சுமணன் எனும் இரட்டைக் குழந்தைகள் மூன்றாவது மனைவிக்குப் பிறந்ததாகக் கூறுவது வான்மீகி இராமாயணக் காவியத்திற்கு மாறானது.

 

இயற்கையின் நிலைகள் எவ்வாறு என்று வான்மீகி தெளிவாகக் கூறினார். வான்மீகி மகரிஷிகள் தந்தருளிய உண்மைகளை மக்கள் அறிய முடியாதவாறு செய்து விட்டனர்.

 

ஆனால், இன்று வான்மீகி இராமாயணத்தைப் பார்த்தால், எவ்வளவு தூரம் அசுத்தம் என்ற நிலைகள் இருக்கின்றது. “அரச நிலைகளுக்காக” வான்மீகி உரைத்த காவியத்தை பிற்காலத்தவர்கள் மாற்றியமைத்து விட்டார்கள்.

 

“நமது உடலின் இச்சைக்கு” நம்முள் அசுர குணங்கள் ஏற்படுவதை பத்துத் தலையுடைய இராவணன் என்று காண்பிக்கின்றார்கள்.

 

இராவணனுடைய உணர்வுகள் சகோதரனாக வளர்ந்தாலும், நல்லவைகளை அவன் செய்தாலும் உடலில் வரக்கூடிய விஷம் கும்பகர்ணன்.

 

“நல்லது செய்யாது தூங்கினாலும்” இவன் எடுத்துக் கொண்ட அசுர உணர்வு எப்படி ஆட்டிப்படைக்கிறது? என்றும் காண்பிக்கின்றார் வான்மீகி.

 

பல உணர்வின் தன்மைகளையும் பல உடல்களில் கொன்று குவிக்கும் உணர்வின் தன்மைகளைத் தனக்குள் எடுத்து அசுர உணர்வு வரப்படும் பொழுது இவனுள் விளைந்த அந்த உணர்வின் எண்ணங்கள், இந்திரஜித்.

 

அவன் மாயமாகச் செல்வதும் மாயச் செயல்களைச் செய்வதும் இந்த உணர்வின் தன்மை அவன் எவ்வாறு செய்கிறான் என்றும் அவன் யாகத்தீயை வளர்த்து கொன்று புசிக்கும் உணர்வின் தன்மையை கொல்லும் பொழுது கொன்ற உணர்வு இவனுள் வந்து அசுர குணங்களாக இவனுள் எப்படி விளைகின்றது? என்றும் காட்டுகின்றார்.

 

ஒருவனை அழித்திடும் உணர்வின் எண்ணங்களை எப்படி உருவாக்குகிறான் என்றும் மறைந்திருந்து தாக்குவதும் இந்த உணர்வின் தன்மை மாயமாக மறைவதும் எவ்வாறு? என்ற நிலையை “இந்திரஜித்” என்று காண்பித்தார் வான்மீகி.

 

அதே சமயம் இராமாயணத்தில் அஞ்சநேயர் வாயுபுத்திரர் என்றும் நமக்குள் இருக்கும் உணர்வுகள் சொல்லாக வெளிப்படும் பொழுது எந்த உணர்வின் தன்மையோ அந்த உணர்வின் தன்மை வாயுவாகச் செல்கின்றது.

 

1.அதாவது ஒன்றை நுகர்ந்தபின் (சுவாசித்த பின்)

2.அது எந்த குணத்தின் தன்மை எதை நுகர்ந்ததோ

3.தாவிச் சென்று அந்த உணர்விற்குள் உணர்ச்சியை உருவாக்குகின்றது.

4.தாவிச் சென்று மற்றொன்றைச் செயல்படுத்தும் நிலை எனவே இதைக் குரங்கினமாகக் காண்பித்தார்கள்.

 

சுக்ரீவன் தீமையின் உணர்வின் தன்மையை வென்றிடும் வலிமை பெற்றவன், சூரியனின் ஒளியால் கவரப்பட்ட வலிமையின் தன்மை. ஆகவே சூரியனின் புத்திரன் சுக்ரீவன். அவன் எதனின் உணர்வின் தன்மையையும் வெல்லும் வலிமை கொண்டவன்.

 

இது போன்று ஒவ்வொரு குணத்திற்குத்தக்க அதனதன் இயக்கம் எவ்வாறு செயல்படுகின்றது என்று காட்டுகின்றார்.

 

இராமன் எனும் நிலைகொண்டு உணர்வின் எண்ணங்கள் எப்படிச் செயல்படுகின்றது என்றும், இந்த உணர்வுகளை சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்ற பொழுது சுக்ரீவன் என்றும் காட்டுகின்றார்.

 

எந்த வலுவின் தன்மை வருகின்றதோ அதன் செயலாக்கம் எப்படி வருகிறதென்றும் வான்மீகி தமது காவியத்தின் மூலம் மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

Leave a Reply