அழியாச் செல்வம் வேண்டுமா? அழியும் செல்வம் வேண்டுமா? முடிவு செய்துகொள்ளுங்கள்

Divine wealth.jpg

அழியாச் செல்வம் வேண்டுமா? அழியும் செல்வம் வேண்டுமா? முடிவு செய்துகொள்ளுங்கள்

சாமி செய்யும் சாமியார் செய்வார் மந்திரம் செய்யும் யந்திரம் செய்யும் ஜோசியம் செய்யும் என்று இந்த எண்ணத்தில் செயல்படுவார்கள். பின் ஜோசியக்காரர்களிடத்தில் செல்வார்கள்.

அதன் பிறகு வாஸ்து சாஸ்திரம் இருக்கிறது. ஆகையினால் வாஸ்து சாஸ்திரக்காரர்களிடம் செல்வார்கள்.

அவர்களிடம் சென்றவுடன் உங்கள் வீட்டை இப்படி இடித்துக் கதவை இப்படி மாற்றி வைத்துவிடுங்கள் என்று கூறுவார்கள்.

1.வீட்டு உரிமையாளரோ ஆரம்பக் காலத்தில் நன்றாகத்தான் இருந்திருப்பார்.

2.ஆனால் தற் சமயத்தில்தான் இந்தக் கஷ்டம் வந்திருக்கும்.

3.வாஸ்து சாஸ்திரக்காரர் வீட்டை வந்து பார்த்தவுடனே

4.இந்தச் சுவரை இடித்து அறையை மாற்றி வைத்தீர்கள் என்றால் சரியாகும் என்று கூறுவார்கள்.

அதை விட்டால் “நியூமராலஜி” – உங்களுடைய பெயரின் எழுத்தை மாற்றி வைத்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்குப் “புதிய சக்தி” வரும் என்று கூறுவார்கள்.

1.ஜோதிடம் பார்ப்பவர்கள் வாடிக்கையாளரின் எண்ணத்திற்கேற்ப சொன்னவுடனே

2.கேட்பவர்கள் அதையும் செய்வார்கள்.

3.அப்பா அம்மா அவர்களுக்கு முதலில் வைத்த பெயர் நன்றாக இருக்கும்.

4.ஆனால் அவர்கள் சொல்லைக் கேட்டு பெயரில் உள்ள எழுத்துக்களை மாற்றிக் கொள்வார்கள்.

ஆக ஜோதிடம் வாஸ்து, நியூமராலஜி என்று ஒவ்வொருவரையும் சந்திப்பார்கள். இப்படி நமது மனித வாழ்க்கையில் மனித உடலுக்காகத்தான் பெற முயற்சிக்கின்றோம்

இந்த மனித வாழ்க்கையில் இருளை அகற்றி உடலுக்குப்பின் நாம் பிறவியில்லா நிலை அடையவேண்டும் என்ற எண்ணம் பெரும்பகுதி யாருக்கும் வருவதில்லை.

ஞானிகளோ, மகரிஷிகளோ “யாரும்” உடலோடு இல்லை.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இவ்வளவு பெரிய சக்தி பெற்றாரே.., அவர் உடலோடு இருக்கின்றாரா? இல்லை.

ஆனால் ஒளியின் உடலாக சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியமாகி வாழுகின்றார். “மனித உடலில்” இல்லை.

1.நாம் இந்த மனித வாழ்க்கையில் (உடலில்) பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

2.ஞானிகளும், மகரிஷிகளும் துன்பம் என்ற விஷத்தை ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

3.இன்றும் குடும்பமாக விண்ணிலே மகிழ்ந்து வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அப்படிப்பட்ட அழியாச் செல்வம் வேண்டுமா? அல்லது அழிந்து போகும் இந்தச் செல்வம் (உடல் வாழ்க்கை) வேண்டுமா?

நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

1.அழிந்து போகும் செல்வம் – சாகாக்கலை

2.அழியாச் செல்வம் – வேகாநிலை

இன்றைக்கு நம்முடைய ஆசையின் நிமித்தம் ஒன்று கிடைக்கவில்லை என்றால் நமக்குள் வேதனை வருகின்றது. வேதனை அதிகமாகிவிட்டால் நம் ஆசைகள் அனைத்தும் அழிந்து நாசமாகிப் போகிறது.

மரணம் அடையும் தருவாயில், “ஐயோ..அம்மா.. அம்மா…அம்மா..,” என்ற வேதனைகளை எடுத்துத்தான் மரணமடைகிறோம்.

1.நம் உடலில் நோய் வந்துவிட்டால்

2.நல்ல துணிமணிகளைக் கொடுத்து அணியச் சொன்னால் அணிகின்றோமா?

3.”தூக்கி…, எறி..!” என்று சொல்கிறோம்.

ஆனாலும் இதன் மீது தான் மீண்டும் பற்று வருகிறதே தவிர பேரின்பத்தின் மீதான பற்று யாருக்கும் வருவதே இல்லை.

இன்றைய மனிதர்களிடத்தில் வாழ்வா..? சாவா..? என்ற நிலைதான் உள்ளது. ஒன்று வாழ்வோம். இல்லையேல் தற்கொலை செய்து கொள்வோம்  என்ற எண்ணம் பெரும்பகுதியானவர்களிடம் உள்ளது.

தான் எண்ணியவற்றைப் “பிடிவாதமாகச் செயல்படுத்தவேண்டும்” என்ற நிலைதான் வருகிறது.

1.நம்மை எது ஆட்டிப்படைக்கின்றது?

2.தீய உணர்வுகளிலிருந்து நாம் எவ்வாறு விடுபடவேண்டும்? என்று சிந்தித்துச் செயல்படவேண்டும்.

3.தீய உணர்வுகளுக்கு நாம் அடிமையாகிவிடக்கூடாது.

நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு தீய உணர்வுகளிலிருந்து விடுபட்டு தீய உணர்வுகளை ஒடுக்கி அருள் ஞானத்தை வெளிப்படச் செய்யவேண்டும் என்ற எண்ணங்களை நமக்குள் வளர்க்கவேண்டும்.

அதையெல்லாம் நீங்கள் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் தான் “அருள் ஞானத்தை” உங்களுக்கு யாம் கொடுக்கின்றோம்.

Leave a Reply