அகஸ்தியன் எப்படித் துருவ நட்சத்திரமானான்…?

lightning

அகஸ்தியன் எப்படித் துருவ நட்சத்திரமானான்…?

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் வாழ்ந்த அகஸ்தியன் தன் ஐந்தாவது வயதில் நம் பூமியின் துருவத்தின் ஆற்றலை அறிந்தான்.

அவன் செய்யும் அதிசயமான செயல்களைக் கண்டு அவனுடன் வாழ்ந்தவர்கள் “காட்டு ராஜா” என்றே அவனைக் கொண்டாடுகின்றார்கள்.

புவிக்குள் உருவாகும் தாவர இனங்களுக்கு உணவு எங்கிருந்து வருகிறது என்று உற்று நோக்குகின்றான். அவனுக்குள் விளைந்த உணர்வுகள் அவ்வாறு அவனைச் சிந்திக்கும்படி செய்கின்றது.

வானுலக ஆற்றல் நம் பூமிக்குள் துருவப் பகுதியின் வழியாக எப்படி வருகின்றது என்பதை அறிகின்றான்.

துருவத்தின் வழியாக வரும் உணர்வுகள் விஷத் தன்மையாக இருந்தாலும் இவன் நுகரப்படும் பொழுது அந்த விஷத்தின் ஒளிக் கதிர்களை மாற்றுகின்றான்.

இன்றும் நாம் விண்ணிலே “மின்னல்களைப் பார்க்கலாம்”.

அதாவது நட்சத்திரங்கள் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் எதிர் நிலையானால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அது சுக்குநூறாகி அலைகள் மாறும்.

அலைகளாக மாறி வருவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வரும் பொழுது அதனுடைய கலவைகளில் பல வித்தியாசமாக வரும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை “மின்னலைப் பாருடா மின்னலைப் பாருடா..,” என்று சொல்வார்.

எனக்குப் பயமாக இருக்கிறது. என் கண்கள் குருடாகிவிடும் என்று சொல்வேன். எனக்கும் அவருக்கும் இதனால் தர்க்கமாகும்.

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளை அடக்குகின்றது. அதே சமயத்தில் அந்த மின்னல்கள் கடும் விஷத் தன்மை கொண்டது

1.ஆனால், அகஸ்தியன் அவனுக்குள் இதை அடக்கிடும் உணர்வை எடுத்து ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவன்.
2.அகஸ்தியன் மின்னலின் அலைகளைத் தனக்குள் கவர்ந்து எப்படி அடக்கினான்?
3.மின்னல் எப்படி அவனுக்குள் அடங்குகிறது? என்பதனை அங்கே உணர்த்துகின்றார் குருநாதர்.

அந்த நட்சத்திரங்களிலிருந்து வருவது எதற்குள் இந்தக் கலவைகள் சேருகின்றதோ அதற்குத்தக்கவாறு அந்த உணர்ச்சிகளை ஊட்டி அது செயல்படுத்தும் சக்தி பெற்றது என்று காட்டுகின்றார்.

குருநாதர் என்னை அந்த மின்னலையும் பார்க்கச் சொல்லி அகஸ்தியன் எப்படி விஷத்தை அடக்கினான் அந்த மின்னணுவின் தன்மையைத் தனக்குள் ஒளியாக்கினான் என்பதையும் காட்டினார்.

செடியின் மேல் மின்னல் தாக்கினால் செடி கருகிவிடுகின்றது. அதிலுள்ள சத்தை எடுத்துவிடுகின்றது. இதே போல
1.விஷத்தை ஒடுக்கிடும் உணர்வு வரப்படும் பொழுது
2.கதிரியக்கப்பொறிகளாக வருவதை அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும் இதை ஒடுக்கி
3.அவனுடன் ஒளியாக மாற்றும் அணுத்தன்மையாக மாற்றுகின்றான்.
4.இதையெல்லாம் குருநாதர் எமக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

அப்படி மாற்றியமைத்த அவன் உடலில் உருவானதுதான் அகண்ட அண்டத்தில் வரும் எதையுமே மாற்றிடும் சந்தர்ப்பம் வருகின்றது.

அகஸ்தியன் துருவன் என்று வரப்படும் பொழுது 27 நட்சத்திரங்களிலிருந்து வரும் பல கோடி மின்னல்களையும் பார்க்கின்றான்.

அதையெல்லாம் அடக்கி “ஒளியின் அணுவாகத் தனக்குள் மாற்றும் நிலை” பெறுகின்றான்.

அகஸ்தியன் “பல கோடி மின்னல்களைக் கவர்ந்து” அவனுடன் ஒளியாக மாற்றும் அணுத்தன்மையாக மாற்றினான்…, துருவ நட்சத்திரமானான்

அகஸ்தியன் எப்படி ஒளியாக மாற்றினான் என்ற அந்த உணர்வின் சத்தை உங்களுக்கு ஊட்டுகின்றோம். அதை நீங்கள் பெற்றால் உங்கள் வாழ்க்கையிலும் அவன் நஞ்சை மாற்றி ஒளியாக ஆனது போன்று மாற்றிடும் ஆற்றல் பெறுவீர்கள்.

அகஸ்தியன் ஈர்ப்பு வட்டத்தில் நாமும் இணைந்து வாழலாம்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன நிலைகளை உங்களுக்குள் தெளிவாக்குவதற்கே இதைச் சொல்கின்றேன்.

 

Leave a Reply