பூதம் காத்த புதையல் என்பார்கள்…!

புதையல்.jpg

பூதம் காத்த புதையல் என்பார்கள்…!

 

அன்று அரசர்கள் அரசப்போர் வரும்பொழுது தனது சொத்தைச் சேமிக்க பூமியில் மறைத்து வைக்கின்றார்கள்.

அடுத்த எதிரி வருவதற்கு முன் நாம் ஜெயித்துவிட்டால் எடுத்துக் கொள்வோம். நாம் ஜெயிக்காவிட்டால் இன்னார் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நினைவோடு பூமியில் புதைக்கின்றார்கள்.

அப்படிப் புதைத்தாலும் அன்றைய நிலைகளில் இதைச் சுரங்கமாகத் தோண்டி இதைப் புதைக்கச் செல்லும் பொழுது நான்கு பேரை அனுப்புகின்றார்கள்.

புதைத்த பின் அந்த நான்கு பேரையும் அவர்கள் மேல் குற்றத்தைச்சாட்டி அங்கேயே பலியிட்டு விடுகின்றார்கள்.

அதை மூடி மறைத்த பின் (அவர்கள்) பலியிட்டவர்கள் இங்கே வந்தபின் அவர்களைக் (நான்கு பேரை) கொலை செய்துவிட்டார்கள் என்று திட்டமிட்டு இவர்களையும் கொலை செய்துவிடுகின்றார்கள்.

இது எந்த அரசனால் ஆணையிடப்பட்டதோ அவர்கள் “தனக்கு மட்டும்தான் தெரியும்” என்று எண்ணம்.

இருந்தாலும் அரசன் இந்த நியதிகளைச் செய்தான் என்று கொலையுண்டவர்கள் உணர்வுக்குள் பதிவாகிவிடுகின்றது. இந்த பதிந்த உணர்வுகள் அரசாட்சியில் யார் அரசனாக இருந்தாலும் அவர் உடலுக்குள் செல்லுகின்றது.

சென்றபின், அரசன் உடலுக்குள் பழிதீர்க்கும் உணர்வுகள் வருகின்றது. அவன் ஆட்சிபுரியும் சட்டங்கள் எதுவாக இருந்தாலும்

1.அவன் உடலுக்குள் ஊடுருவி

2.அவனைக் கடும் வேதனைக்குள்ளாக்கின்றது.

அப்படி வேதனைக்குள்ளாக்கும் பொழுது அவனுடைய கடைசி சிந்தனை தன் பொருளின் ஆசையின் எண்ணங்கள் தோன்றி எங்கு புதைத்தார்களோ அந்தப் பொருளின் மேல் நினைவு வருகின்றது.

அந்த உடல் சுகம் எல்லாம் போய்விடுகின்றது.

இப்படி வைத்திருக்கின்றோமே தன் இனத்திற்குக் கிடைக்குமா? என்ற எண்ணத்தை வைக்கும் பொழுது இன்னாருக்குத்தான் இன்னது என்று சாசனங்களை எழுதி வைத்திருப்பார்கள்.

இவன் எண்ணம் அந்தச் சாசனத்தின் மேல் சென்றபின் அதைக் காக்கும் பூதகணங்களாகப் போய்விடுகின்றது. இவன் ஆசைப்பட்டான் ஆனால், மற்றவர்கள் மேல் போகின்றபொழுது பேயாகப் போகின்றது.

இவனுடைய ஆசையோ பூதகணங்களாகப் போகின்றது.

அந்த எல்லைக்கு யார் சென்றாலும் ஆசையின் உணர்வைத் தூண்டும். அந்த அரசன் எந்தெந்த நிலைகளில் மரணமடைந்தானோ அதே உணர்வுகள் இங்கே தூண்டச் செய்து ஆசையின் எண்ணங்கள் பெருகப்பட்டுப் “புதையல் இங்கு இருக்கின்றது” என்று பேசுவார்கள்.

1.இந்த மாதிரி இடங்களில் சிக்குண்டவர்கள்

2.நான் அந்தப் புதையலைப் பார்த்தேன்

3.அதை எடுக்க வேண்டும் என்று நிறையப் பேர் அலைவார்கள்.

ஆக அந்த அரசன் செல்வங்களையும் பொருள்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதைச் செய்தான். கடைசியில் பூதகணங்களாகத்தான் ஆகின்றான்.

அடுத்து மனிதனல்லாத உருவாகத்தான் செல்கின்றான். அதுமட்டுமல்லாது யார் யாரெல்லாம் இத்தகைய ஆசை கொண்டு செயல்படுகின்றார்களோ அவர்களுக்குள்ளும் இந்த உணர்வுகள் இயங்கி கடைசியில் எல்லாவற்றையும் இழந்து எல்லை கடந்து வேதனைக்குள்ளாகி ஈன சரீரமாகத்தான் பிறக்க நேருகின்றது.

இதையெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்துகின்றார்.

இந்த உடலும் நம்முடன் வரப் போவதில்லை. நாம் சேர்க்கும் எத்தகைய செல்வமும் நம்முடன் வருவதில்லை. நமக்குச் சொந்தமானது நம் உயிர் ஒன்று தான்.

அந்த மகரிஷிகள் காட்டிய மெய் வழியில்

1.உயிருடன் ஒன்றி வாழும் நிலையாக

2.அழியா ஒளியின் சரீரம் அடைவதே

3″மனிதனின் கடைசி எல்லை” என்பதை நாம் தெரிந்து கொள்வது நல்லது.

Leave a Reply