மனிதனாகப் பிறந்த நாம் செலுத்த வேண்டிய காணிக்கை…

Siva family.jpg

மனிதனாகப் பிறந்த நாம் செலுத்த வேண்டிய காணிக்கை…

நம் தாய் நாம் கருவிலிருக்கும் பொழுதும் குழந்தையாக இருக்கும் பொழுதும் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள் என்று கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

தன் வேலைகளை எல்லாம் செய்கின்றது. பெருமூச்சு இடுகின்றது. குழந்தை மேல் பாசமாக இருப்பதால் வேதனைகளைத் தாங்கிக் கொள்கின்றது.

எத்தனையோ வேதனைகளைப் பட்டாலும் தன் குழந்தையின் ஆசையை  நிறைவேற்றி அதன் சந்தோஷத்தில் தாயும் மகிழ்கின்றது.

தாய் தன் அன்றாட வாழ்க்கையின் நிலைகளில் உணவினைச் சமைப்பதும் தொழில் செய்வதும் இப்படி எல்லாவற்றையும் செய்து அதிலுள்ள அத்தனை கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு தன் குழந்தை மேல் உள்ள பாசத்தால் அது வளர்க்கின்றது.

குழந்தை பிறக்கும் பொழுதும் தாயிற்கு வேதனை. குழந்தை வளரும் பொழுதும் தாய் எத்தனையோ வேதனைகள் படுகின்றது.

நாம் பல குறும்புத்தனங்கள் செய்வோம். அதனால் வயிற்று வலி வந்திருக்கும். தலை வலி வந்திருக்கும்.

தாய் இதையெல்லாம் உற்று நோக்கி என் குழந்தைக்கு இப்படி இருக்கிறதே என்று எண்ணி வேதனைப்படும். நாம் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தாய் வேதனைப்படுகின்றது.

தாய் படும் வேதனையில் தந்தையும் பங்குகொள்கின்றார். இதைப் போன்ற எத்தனையோ வேதனைகளை நம் தாய் தந்தையர் அனுபவித்தார்கள். நம்மை வளர்ப்பதறாகப் பல இன்னல்களை அவர்கள் பட்டார்கள்.

அவர்கள் உயிர் கடவுளாக நின்று நம்மை மனிதனாக உருவாக்கி  தெய்வமாக நம்மைக் காக்கின்றார்கள்.

அதே சமயம் நாம் தவழ்ந்து நடக்கும் பருவத்தில் குருவாக நின்று இது நல்ல வழி நீ இந்த வழியில் இப்படிச் செல் என்று முதல் குருவாக இருந்து வழி காட்டியதும் நம் தாய் தந்தையர் தான்.

1.அத்தகையை குருவாக இருந்த தாய் தந்தையரை எப்படி மதிக்க வேண்டும்?
2.அவருக்குச் செய்யவேண்டிய காணிக்கை என்ன” என்பதை ஞானிகள் விநாகர் தத்துவத்தில் காட்டியுள்ளார்கள்.

எனக்காக அல்லும் பகலும் விழித்து என்னைக் காத்தருளிய தெய்வங்களான அன்னை தந்தையர் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.

அவர்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும். அவர்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்,

என்னை வளர்ப்பதற்காக அவர்கள் வாழ்க்கையில் பட்ட வேதனைகளால் உருவான நஞ்சுகள் அனைத்தும் நீங்க வேண்டும். அவர்கள் உடல்களில் உள்ள தீய வினைகள் அனைத்தும் அகல வேண்டும்.

என் அன்னை தந்தையர் என்றுமே மகிழ்ச்சியாக வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று இந்த உணர்வின் தன்மையை ஓங்கிச் செலுத்துதல் வேண்டும்.

1.விநாயகர் சிலையை நாம் பார்த்து
2.இத்தகையை வினைகளை நமக்குள் சேர்த்து
3.இதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி
4.தாய் தந்தைருக்குக் காணிக்கையாகச் சேர்க்கும்படி விநாயகர் தத்துவத்தில் சொல்லியிருக்கின்றார்கள்.

எங்கள் அன்னை தந்தையர் குருவாக இருந்து காட்டிய நல் வழியில் நாங்கள் செயல்பட வேண்டும்.

அவர்கள் காட்டிய பாதையில் மகிழ்ந்திடும் நிலைகள் நாங்கள் பெறும்போது “எங்கள் செயலைக் கண்டு…, என் அன்னை தந்தையர் மகிழ்ந்திட வேண்டும்.., ஈஸ்வரா” என்று உயிரை வேண்டுதல் வேண்டும்.

நம் அன்னை தந்தையருக்கு இதைக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும்.
1.குருவின் காணிக்கை அதுதான்.
2.தெய்வத்திற்குப் பணிந்து செய்வதும் அது தான்.
3.கடவுளுக்குச் செய்யும் சேவையும் அது தான்.

விநாயகர் தத்துவப்படி நாம் இதைச் செயல்படுத்தி தாய் தந்தையர் மகிழ்ந்திடச் செய்ய வேண்டும் என்று நம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அகஸ்தியன் அவர் மனைவி அவர் தாய் தந்தையர் நான்கு பேரும் இணைந்து உருவானது தான் துருவ நட்சத்திரம். அந்த அகஸ்தியனால் உருவாக்கப்பட்டது தான் “விநாயக தத்துவம்”.

நம் சாஸ்திரங்கள் காட்டிய வழியில் இன்று நடக்கின்றோமா…! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

“கங்கா சேர் வான்”

 

Lord siva, Ganga.jpg

“கங்கா சேர் வான்”

குழம்பு வைக்கும் பொழுது ஒரு பொருளுடன் மற்றொரு பொருளைச் சேர்த்து ருசியாக ஆக்குகிறோம்.

நம் வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் கோபம் ஆத்திரம் சலிப்பு சஞ்சலம் வேதனை இதைப் போன்ற உணர்வுகளை நுகர நேருகின்றது. அப்பொழுது அந்த உணர்வுகள் நம் நல்ல குணங்களுடன் கலந்து விடுகின்றது.

அப்படிக் கலந்த தீமையான உணர்வுகளை நீக்கவில்லை என்றால் நம் நல்ல குணங்கள் வலு குறைந்துவிடும். அதை மாற்றியமைக்க வேண்டுமல்லவா.

அதற்காகத்தான் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளின் உணர்வைப் பதிவாக்குகின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கும் பொழுது நல்ல அணுக்களாக மாற்றிவிடுகிறது.

1.நல்ல அணுக்களை மீண்டும் வலுப் பெறச் செய்யவேண்டும் என்றால்

2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இதற்கு மேல் சேர்த்து மாற்றவேண்டும்.

3.தீமையான உணர்வுகள் நமக்குள் இரண்டறக் கலந்ததை அடிமையாக்க வேண்டும்.

4.“கங்கா சேர் வான்…” மாதிரி நாம் செயல்படுத்த வேண்டும்.

நமக்குள் ஒவ்வொரு உணர்வு வரும் போது “அணுவுக்குள் அணு…, ஓமுக்குள் ஓ…ம்…, ஓமுக்குள் ஓ…ம்” என்று ஒவ்வொன்றும், பிரணவ தத்துவத்தைக் கொண்டு வருகிறது.

அந்தப் பிரணவத் தத்துவம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்  ஒவ்வொரு அணுவையும்  நுண்ணிய அணுக்களாக மாற்றி மாற்றி  அந்த உணர்வின் தன்மை கொண்டு சேர்த்துதான் உடலாக மாற்றுகிறது.

இந்த உடலின் அணுக்கள் பரிணாம வளர்ச்சி அடைந்த பின் தான் அதற்குத்த் தக்க மனித உறுப்புகளை உருவாக்கும்.

மனித உறுப்புகளை உருவாக்கியபின், கொஞ்சம் கொஞ்சமாக விஷத் தன்மையை நாம்  மனித உடலில் உள்ள அணுக்களை மாற்றினால், ரூபங்களை மாற்றி அதற்குத் தக்கவாறு உண்டாக்கிவிடும்.

நாம் புழுவிலிருந்து சேர்த்துக் கொண்ட உணர்வுக்குத் தக்க இந்த உறுப்புகள் மாறுகிறது. அப்படிப் படிப்படியாக வரும்போது எல்லாவற்றையும் கழிக்கக்கூடிய உடலின் உறுப்புகள் அமைகின்றது.

இந்த உறுப்புகள் உடலில் அமைந்தபின் நாம் அந்த அருள் ஒளியை, கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும். “உயிர் ஒளியானது” ஒவ்வொன்றிலும் தனுஷ்கோடி.

1.எல்லாவற்றையும் சேர்த்து

2.உயிர் எப்படி ஆனதோ ஒன்றாக அமைத்ததோ

3.இதுதான் “தனுஷ்கோடி” என்று சொல்வது.

இப்பொழுது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா?

அதுதான் கோடிக்கரையில் இருக்கிறோம். எல்லாவற்றையும் இந்த கோடிக்கரை என்று ஒன்றாகச் சேர்கக வேண்டும் என்ற நிலையில் நாம் இன்று இருக்கிறோம். நேரமாகிவிட்டது என்று இராமன் என்ன செய்கிறான்? மணலைக் கூட்டிச் சேர்க்கிறான்.

இது ஒரே நாளில் முடியுமோ?

இந்த கோடிக்கரையில் இருந்து நாம் எல்லாவற்றையும் உயிரைப் போன்று உணர்வின் ஒளியாகி நீங்கள் எல்லோரும் நல்லவராக வேண்டும் என்ற உணர்வை என்னுடன் இணைத்து விடுகின்றது.

உங்களில் தீமை என்ற உணர்வை நீக்கத்தான் அருள் ஒளி என்ற உணர்வை உங்களில் சேர்க்கிறோம் அதே சமயத்தில் “எல்லோரும் அதைப் பெறவேண்டும்” என்று எண்ணுகிறோம்.

1.அவர்கள் அதைப் பெற்றால் பரவாயில்லை.

2.பெறவில்லை என்றால் “அவர்கள் பெறவேண்டும்” என்ற உணர்வு என்னுள் உள்ளது. என் உடலுக்குள் அந்த உணர்வுகள் பெருகுகின்றது.

3.நீங்கள் பெறவேண்டுமென்று யாம் எண்ணுகிறோம். இந்த உணர்வுகள் எனக்குள் வளர்கிறது.

ஒருவர் திட்டினார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களைத் திட்டியவர்களை எண்ணினால் புரை ஓட வைக்கின்றது. இங்கிருந்து தானே போகின்றது. யார் உடலில் விளைந்ததோ அங்கே போகிறது.

அப்படி உங்களை நினைக்கும்போது அந்த துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வை நாங்கள் பெறவேண்டும் என்று நீங்களே இதைப் பெற்றிடவேண்டும்.

1.அதாவது, மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.

2.எங்கள் உடல் முழுவதும் பெறவேண்டும்

3.எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று எண்ணிவிட்டு,

4.அவர்களுக்குள் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்,

5.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது.., “இந்த உணர்வு நமக்குள் வருகிறது”.

6.முதலில் அவர்கள் உணர்வு நமக்குள் பதிவாகிறது. இதனுடன் கலந்து இதை யாம் இப்படி மாற்றிவிடுகின்றோம்.

7.அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளை இங்கே இணைத்துவிடுகிறோம். உள்ளே கெட்டது போகாமல் மாற்றிவிடுகிறோம்.

8.இந்த உணர்வு இரத்தத்தில் கலக்கிறது. இரத்தத்தில் கலந்தவுடன் அதை எடுப்பதற்கு வழிவேண்டுமல்லவா!

9.பிறருடைய தீமை செய்யுன் உணர்வுகள் அது கலந்தவுடன் அதை மாற்றிவிட்டு  துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இதை முந்திக் கொடுத்துவிடுகிறோம்.

10.அதைக் கொடுத்தவுடன் நாம் கலந்து போவதை எடுத்துப் பழக வேண்டும்.

11.ஒன்றில்லாது ஒன்றில்லை. எதுவுமே, ஒன்று இணைந்தால்தான், அது வளரும்.

ஏனென்றால், வடதுருவத்தில் இருப்பது  இழுக்கும்.  தென் துருவத்தில் இருப்பது தள்ளும்.  ஏனென்றால், தென் துருவம் சூரியனைப் பார்த்து இருக்கின்றது. வட துருவம் மேலே இருந்து இழுக்கிறது.

காந்தத்தில் மற்றொரு காந்தத்தை வைத்தால் தள்ளிக் கொண்டே போகும்.

இதை போன்று நாம் நமது வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொன்றிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை சேர்த்துக் கொண்டே வரவேண்டும். அப்படிச் சேர்க்கும் பருவத்தை ஏற்படுத்துவதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்றிக் கொண்டே வந்தோம் என்றால் அழுக்கு நீர் குறைந்து கடைசியில் முழுவதும் நல்ல தண்ணீராக மாறிவிடும்.

அதைப் போன்று தான் நம் உடலில் உள்ள இரத்தத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை கலந்து கொண்டே இருக்க வேண்டும். நம் உடலை உருவாக்கிய அனைத்து அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

அப்பொழுது நம் உடலை உருவாக்கிய அணுக்கள் ஒளியின் அணுக்களாக மாறும். ஒளியின் சரீரம் பெறமுடியும். அந்த மகரிஷிகள்  சென்று அடைந்த எல்லையை நாம் எளிதில் அடையலாம்.

இது எல்லோராலும் முடியும்.