அரளிப் பூவிற்குண்டான மருத்துவ குணம்

arali.jpg

“அரளிப் பூவிற்குண்டான மருத்துவ குணம்”

நூறு சதவீதம் ரோஜாப்பூவும் நூறு சதவீதம் வேப்பிலையும் நூறு சதவீதம் விஷச் செடியும் இதெல்லாம் கலந்தால் “அரளிச் செடியாக..,” மாறுகின்றது.

அரளி விதையை நாம் “சாப்பிட்டோம் என்றால்” ஆளைக் கொல்கின்றது. அரளிப் பூவின் “மணத்தை நுகர்ந்தால்’ தீயதை மாற்றுகின்றது.

சிலர் கால்கள் இரண்டும் ரொம்ப நாளாக வலிக்கின்றது என்பார்கள், சிலருக்குக் காலையில் எழுந்தவுடன் குதி கால்களில் நடக்க முடியாது. சிலருக்குக் காலில் நீர் வடியும்.

அரளிப் பூவை இலேசாக ஒரு ஓட்டில் போட்டு வறுத்து தேங்காய் எண்ணையில் போட்டு காலில் நீர் வடிபவர்களுக்குப் போட்டோம் என்றால் அந்த விஷ நீரை எடுத்துவிடும். கால்களில் இருக்கும் விஷ நீர் எல்லாவற்றையும் எடுத்துவிடும். கால் வலி பறந்து போகும்.

ஆனால், அரளி விதையைச் சாப்பிட்டால் ஆளைக் கொன்றுவிடும். இதைப் போன்று “ஒவ்வொரு உணர்வுகளும்., எப்படி இயக்குகின்றது..,? என்பதனை குருநாதர் அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொன்றையும் நேரடியாகக் காட்டிய நிலைகளைத்தான் உங்களிடம் சொல்கின்றோம்.

அதையெல்லாம் வாக்குடன் கொடுக்கின்றேன், புரிந்து கொள்ளுங்கள். யாம் சொன்னதை அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த நம்பிக்கையோடு செய்யவேண்டும். கொஞ்சம் முயற்சி செய்யவேண்டும்.

சாமி சொல்கிறார்.., இதையெல்லாம் செய்தால் சரியாகுமா…? அதெப்படி சரியாகும்..,? என்ற மனது வந்துவிட்டால் என்னவாகும்?

இரண்டு நாளைக்குப் பார்ப்பார்கள். மூன்றாவது நாள் விட்டுவிடுவார்கள். சோம்பேறித்தனம் வந்துவிடும். ஏனென்றால், இந்த மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம்.

சரியாகப் போகும் என்று மனதில் எண்ணினால் இதெல்லாம் சரியாகிவிடும். நீங்கள் செய்து பாருங்கள்.

இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் என்றால் நீங்களும் நமது குருவைப் போல பிறருடைய தீமைகளைப் போக்கும் ஞானிகளாக மாற வேண்டும்.

இந்த உணர்வுகளைக் காற்றிலே பரவச் செய்யவேண்டும். நமக்குள் வரும் விஷத் தன்மைகளை அகற்ற வேண்டும்.

மனிதனுக்குள் இனம் மதம் மொழி என்ற பேத நிலைகளில் பரவிக் கொண்டிருக்கும் அசுர உணர்வுகள் அனைத்தும் உங்கள் மூச்சலையால் நீக்கிடல் வேண்டும்.

ஒவ்வொருவரு மனிதனையும் சிந்தித்துச் செயல்படும் ஞானிகளாக மாற்ற வேண்டும். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எப்படித் தீமைகளை மாற்றினாரோ அதைப் போல நீங்கள் ஒவ்வொருவரும் குரு வழியில் உங்களுக்குள் தீமைகள் புகாது தடுத்தல் வேண்டும்.

பிறருக்குத் தீமைகள் புகாது தடுத்தல் வேண்டும். இந்த உணர்வின் அலைகள் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் படரவேண்டும்.

உயர்ந்த ஞானிகளாக மாறவேண்டும்.

 

Leave a Reply