உடல் தான் நமக்குச் சொந்தமா… அல்லது உயிரா…!

Gnaguru sarguru.jpg

உடல் தான் நமக்குச் சொந்தமா… அல்லது உயிரா…! 

அனுபவம் பெறுவதற்காக ஒரு சமயம் என்னை குருநாதர் இமயமலைக்குச் செல்லச் செய்தார். அப்பொழுது நான் அங்கே செல்லும் பொழுது எத்தனையோ விபரீத நிலைகள் ஏற்படுகின்றது.

அப்பொழுது எனக்குள் பயம் உருவாகின்றது.

என் பெண்டு பிள்ளைகளெல்லாம் ஊரில் இருக்கின்றதே. அவர்களை நான் எப்படிப் பாதுகாப்பது..? அவர்கள் என்ன ஆனார்களோ…? என்ற இந்த எண்ணம் வந்துவிட்டது.

இமயமலையிலே பனி உறையும் தன்மையிலே குருநாதர் என்னை இருக்கச் செய்திருக்கின்றார். ஆனால் அதே சமயம் குருநாதர் சொன்ன நிலையை மறந்த பின் எனக்குள் குளிர் தாங்க முடியவில்லை.

இமயமலைக்குச் செல்லும் போது குளிர் என்னைத் தாக்காது இருப்பதற்காக அவர் சொன்ன உணர்வை ஒரு நட்சத்திரத்தின் உணர்வை நான் எடுத்தேன் என்றால் என்னைப் பாதுகாக்கும் சக்தி வருகின்றது.

ஆனால் குடும்பப் பற்றை நான் எடுக்கும் பொழுது இந்த குளிரின் தன்மை அதிகமான பின் உடலே இறையத் தொடங்கிவிட்டது.

இன்னும் ஒரு நொடியானால் என் இரத்தமே உறைந்துவிடும். பின் யாம் மடிந்துவிடும் நிலை வருகின்றது.

ஆனால் என் ஆசை எதிலே நிற்கின்றது? என் குழந்தை நன்றாக இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும்.., இப்படி இருக்கவேண்டும்.., என்று எண்ணுகின்றேன்.

ஆனால் அவ்வாறு எண்ணிக்கொண்டு இருக்கும் நேரத்தில் குருநாதர் என்னிடம்..,
1.நீ இதையெல்லாம் எண்ணுகின்றாய்… இந்த உடலை விட்டுப் போய்விட்டால் நீ எதைச் செய்யப் போகின்றாய்…?
2.முன்னாடி இருந்தவர்கள்…, வாழ்ந்தவர்கள்.., ஆசைப்பட்டவர்கள் எல்லாம் இருக்கின்றனரா?
3.இந்த வாழ்க்கையில் உனக்குப் பொன்னடி பொருளும், எது சொந்தமாகின்றது?
4.எதுவுமே சொந்தமில்லை…
5.ஆகவே “சொந்தமில்லாததற்கு ஏன் இந்த மனதை நீ வாட்டுகின்றாய்…?” என்று வினாக்களை எழுப்புகின்றார்.

மேலும் குருநாதர் எனக்குத் தெளிவாக்கினார்.

அவர்கள் நலம் பெறவேண்டும்.., அருள் ஒளி பெறவேண்டும்.., அவர்கள் வாழ்க்கையில் உயரவேண்டும்.., என்ற உணர்வை உனக்குள் உயர்த்து.

இந்த உணர்வின் நினைவாற்றல் அவர்களை இயக்க உதவும். அது வலுவான நிலைகளை அங்கே அவர்களுக்குள் உருவாக்கும்.

நீ இங்கிருக்கும் நிலைகள் வேதனையும் வெறுப்பும் கொண்டு எண்ணினால் உன்னைச் சார்ந்தவர் உணர்வுகளிலும் இது பாயும்.

நண்பனுக்குள் நன்மை செய்தான் என்று எண்ணும்போது விக்கலாகின்றது.., அப்பொழுது நன்மை நடக்கின்றது.

நண்பனுக்குள், பகைமை என்ற உணர்வுகள் தோன்றும் பொழுது எனக்குத் துரோகம் செய்தான்…, உருப்படுவானா…? என்று எண்ணினால், உணவு உட்கொண்டாலும் புரை ஓடுகின்றது. ஒரு தொழில் செய்தாலும், அங்கே சீராகச் செய்யாதபடி தவறுகள் நடக்கின்றது.

ஆகவே உன் உயர்ந்த உணர்வின் தன்மை உன் மக்கள் அனைவரும் பெறவேண்டும் அருள் ஒளி பெறவேண்டும் என்று அருளை நினை. அதை உனக்குள் பெருக்கு.., அந்த உணர்வைப் பாய்ச்சு.

இந்த உடல் உனக்குச் சொந்தமில்லை.., அவர்களுக்கும் சொந்தமில்லை.

செல்வம் தேடி வைத்தாலும் இப்பொழுது உன் உயிர் இறைந்தது. நீ இந்த உடலை விட்டுப் போய்விட்டால் இந்தப் பொன்னடி பொருளைப் பற்றி நீ நினைக்கப் போகின்றாயா…? அல்லது அவர்களைக் காக்கப் போகின்றாயா…?

இந்த உணர்வை நீ இழுக்கப்படும் பொழுது எதை  நிலை கொள்ளவேண்டும்? எவ்வாறு நீ இயக்க வேண்டும்? என்பதை குருநாதர் அங்கே தெளிவாக காட்டுகின்றார்.

இந்த உடல் வாழ்க்கையில்..,<
1.சொந்தமில்லாத உடலுக்காக
2.நாம் சொந்தம் கொண்டாட வேண்டியதில்லை.

சொந்தம் கொண்டாட வேண்டியதெல்லாம் அருள் ஒளி என்ற உணர்வை இணைத்து இந்த உடலே “உணர்வுடன் ஒளியின் உணர்வாகப் பெறும்” அதைச் சொந்தமாக்க வேண்டும்.

ஆகவே அனைவரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வைச் செலுத்து அவர்களை இயக்க உதவும் என்று உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

 

Leave a Reply