இறக்கும் போது எந்த நினைவு கொண்டு உடலை விட்டுப் பிரிய வேண்டும்…?

Bhisma

இறக்கும் போது எந்த நினைவு கொண்டு” உத்தராயணத்தில் தான் உடலை விட்டுப் பிரிய வேண்டும்…?

  1. பீஷ்மர் – உயிர்

பீஷ்மர் தனக்குத் திருமணம் வேண்டாம் தன் தந்தைக்குச் சுகமான நிலைகள் வரட்டும் என்று சத்தியம் செய்து அதைக் கடைசி வரையிலும் காத்தவர்.

சகல வல்லமை பெற்ற.., “அவனும் தப்ப முடியவில்லை” என்று எவ்வளவு தெளிவாக ஞானத்தின் நிலைகளைப் போதிக்கின்றனர்.

இந்த உயிரான குரு மனிதனின் நிலைகளில் எத்தனையோ பகைமைகளைக் கொண்டு வந்தது.

“நான்.., எனது..,” என்ற அகந்தை கொள்ளும் போது பிறரைத் துன்பப்படுத்தித் துன்பத்தின் நிலைகளை நுகர நேருகின்றது.

கௌரவர்களுடைய நிலைகள் அவர்களுடைய தன்மையை இயக்குவதற்குச் சகலகலா வித்தைகளைக் கற்றுக் கொண்டவர்கள்.

இந்தக் கௌரவம் பிறர் வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்கும் தன்மை வரப்படும் பொழுது இந்த உடலை அமைத்த உயிரான குருவிற்கு “நம்மை அறியாமலேயே.., தீங்கு செய்கின்றோம்”.

இதன் தன்மை கொண்டுதான் “உத்தராயணம் வரும் வரை..,” இதை அனுபவித்தே ஆக வேண்டும் என்கிறார் பீஷ்மர். அந்தக் காலம் வரும்போது தான் ஜீவன் போகவேண்டும்.

அது வரையிலும், நான் செய்த தன்மைக்கு எவருடன் உறுதுணையாக இருந்தேனோ அந்த உறுதுணையால் விளைந்த வேதனையை என்னில் நீக்குவதற்கு அர்ச்சுனனுக்குத் தெரியும்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு எனக்கு நோவில்லாமல் செய்பவன் அவனே. “அவனைப்பற்றி நான் எண்ணும்பொழுது.., தீமைகள் அகலும் நிலை கிடைக்கும்” என்கிறார் பீஷ்மர்.

  1. பேடியால்தான் பீஷ்மர் வீழ்ச்சி அடைகின்றார் – விளக்கம்

சத்தியத்திற்காக வாழ்ந்த தன் தாத்தாவை.., “நான் எப்படிக் கொல்வது…!” என்று அர்ச்சுனன் எண்ணுகின்றான்.

அதே சமயத்தில் அவரை விட்டுவிட்டால் உன்னுடைய நல்ல குணங்கள் மடிந்துவிடுமே என்று கண்ணன் சொல்கின்றார். பீஷ்மரைக் கொல்வதற்குண்டான உபாயத்தையும் கண்ணன் சொல்கின்றார்.

“பேடி” என்ற நிலைகளை அவர் என்றைக்கும் தாக்குவதில்லை.  பேடி என்ற நிலை வந்தால் தன்னைத் தாழ்த்திக் கொள்வார்.

அதை மறைமுகமாக வைத்துக் கொள். ஆனால், “உன் வலிமையைப் பற்றி” அவர் சிந்திப்பார். உன்னைத் தாக்கமாட்டார்.

போர்க்களத்தில் அப்படிப் பேடியை பீஷ்மருக்கு முன் கொண்டு வந்ததும் எதிர்ப்பு இல்லை என்கின்ற பொழுது அர்ச்சுனன் தாக்கிவிடுகின்றார்.

பீஷ்மர் திருப்பப்படும் பொழுதுதான் அவர் விழ்ச்சி அடைகின்றார். வீழ்ச்சி அடைந்தபின் தன் உணர்வுக்குத் தக்கவாறு வேதனை (அம்புப் படுக்கையில்) அனுபவிக்கின்றார்.

சாதாரணமாக ஒருவர் நம்மைக் காட்டிலும் வலுவானவர் என்ற நிலைகள் இருக்கும்போது.., “நம்மை அவர் தாக்கி விடுவார்..,” என்று உஷாராக இருப்போம்.

1.ஒருவன் பேடியாக (இரண்டுங்கெட்டானாக) இருக்கும்போது2.“அவன் பயத்தால் நம்முடன் வந்தால்..,3.இவன் என்ன செய்துவிடுவான்..,?4.“இவன் நம்மை ஒன்றும் செய்யமாட்டான்…!” என்று அசட்டையாக இருந்தால்5அவன் (தான்) எளிதில் நம்மைத் தாக்கிவிடுவான்.6.இந்த உணர்வைத் தெளிவாகக் காட்டுகின்றது மகாபாரதம்.

பேடியைப் போன்று நடிப்பவர் உணர்வுகளில் சூட்சுமத் தன்மைகளும் உண்டு. “அவனுள் தாக்கும் உணர்வுகளே இருக்கும்..,” என்றும் மனித வாழ்க்கையில் “பேடி.., என்று ஒதுக்கப்பட்டால்.., அதன் உணர்வுகள் என்ன செய்யும்?” என்றும் காட்டப்பட்டது.

ஒருவன் ஒன்றும் செய்ய மாட்டான். இவனிடம்.., என்ன சக்தி இருக்கின்றது? என்று நினைத்தால் அவன்தான் எளிதில் தாக்கும் நிலையாக வரும்.

வல்லமை கொண்டவன் பேடியை எதிர்க்க மாட்டான். “இவனுக்கென்ன..,?” என்ற நிலைகளில் ஒதுக்கப்படும் பொழுது இந்த உணர்வு வருகின்றது.

அப்பொழுதுதான் “குருவை மதிக்கின்றான்”.

பேடியால் தாக்கப்பட்ட உணர்வும் தான் தீமையின் சார்புடைய நிலைகளில் இருக்கப்படும் பொழுது “அதிலிருந்து” அர்ச்சுனன் எவ்வாறு காத்தான்? என்று மகாபாரதத்தில் காட்டப்பட்டது,

  1. துருவத்தின் நினைவு கொண்டுதான் (துருவ நட்சத்திரம்) உடலைவிட்டுப் பிரியவேண்டும்

அர்ச்சுனன் அவனுடைய உணர்வுகள் நீதியின் தன்மை வரப்படும் பொழுது.., “நீதிக்குள்.., எத்தனை சிக்கல் சிக்குகின்றான்..,?” என்று காட்டுகின்றனர்.

உணர்வுகள் இயக்கத்தால் அவன் உயிரின் தன்மையில் அவன் உணர்வுகள் எப்படி மாறுகின்றது என்ற நிலையையும் மகாபாரதத்தில் தெளிவாக்குகின்றனர்.

“உத்தராயணத்தில் நான் உடலை விட்டு போகவேண்டும்” என்று பீஷ்மர் கேட்டது போல் அருள் ஒளி பெற்ற அருள் ஞானியின் உணர்வின் நினைவு கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றபின் “பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை” என்று வியாசர் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார்.

அவர் கூறிய கூற்றை அவரவர் சுயநலங்களுக்காகக் காட்டப்பட்டு தங்கள் சுயநலங்களுக்கு ஒப்பத்தான் நூல்களை வடிவமைத்துவிட்டார்கள். அதைப் படித்தவர்கள் எல்லாம் இந்த வாழ்க்கைக்குத் தவறு செய்தே வாழ்கின்றனர்.

இந்தத் தவறிலிருந்து அனைவரும் உண்மையின் உணர்வை உணர்ந்து துருவனின் நிலையை நாம் நுகர்ந்து துருவ மகரிஷியின் உணர்வை நாம் நுகர்ந்து இந்த மனித உடலுக்குப்பின் பிறவியில்லா நிலையை அடைவோம்.

விஞ்ஞானத்தில் வரும் பேரழிவால் எந்த நிமிடத்திலும் நாம் உடலை விட்டுப் பிரியலாம்.

ஆனால் அந்த உத்தராயணம் அந்த துருவத்தின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் நினைவு கொண்டு இந்த உடலை விட்டுப் பிரிந்தால் “அந்த அகஸ்தியனுடன் ஏகாந்த நிலைகளில் வாழலாம்”.

இதைத்தான்.., மகாபாரதத்தில் “தான் செய்த தவறுகள் இருப்பினும்.., என்னுடைய நிலைகள் அர்ச்சுனனுக்குத் தெரியும்..,” என்று கூறப்பட்டது.

  1. அர்ச்சுனனுக்குக் கண்ணால் காட்டப்பட்டு
  2. தீமையினுடைய உணர்வுகளை அகற்றும் வலிமையான நிலைகள்
  3. தன்னைக் காக்கும் உணர்வுகள் அவனுக்குத் தெரியும்
  4. அதன்வழி கொண்டு என்னுடைய ஆன்மா எப்படி இருக்க வேண்டும்? என்று அவனுக்குத் தெரியும் என்று மகாபாரதத்தில் வியாசரால் கூறப்பட்டது.

11. விஷ்ணு தத்துவம்

Image

Narasimha

  1. விஷ்ணு தத்துவம்

கடவுளின் அவதாரம் பத்து – 9.நரசிம்ம அவதாரம்

1.விஷமான உணர்வின் தன்மைகள் இரண்யன்

மனிதனான நாம் அன்பும் பண்பும் கொண்டு வாழ்கிறோம். நமது நண்பர்களோ அல்லது உறவினர்களோ வேதனைப்படுவதைப் பார்த்து நாம் அதை நுகர நேர்கின்றது,

அப்படி அதை நுகரும் பொழுது அந்த வேதனையான உணர்வுகளை நம்மிடத்தில் “வேதனையை உருவாக்கும் அணுவாக” உருவாக்கி விடுகின்றது நமது உயிர்.

அதே சமயம் உணர்வின் ஈர்க்கும் காந்தத்தால் மோதும் பொழுது அணுவின் தன்மையாக உருவாக்குகின்றது. அதே நிலைகள் மீண்டும் பிரம்மமாக்கிவிடுகின்றது.

வேதனையை உருவாக்கும் அணுக்கள் உடலுக்குள் சென்றபின் “அணுக்களைச் சிவன் அரவணைத்துக் கொள்கின்றான்”.

இதைத்தான் “பார்வதி பஜே நமச்சிவாய” என்று பாடினார்கள். அதாவது கண்களால் பார்க்கப்படும் தீமையின் உணர்வுகள் உயிரில் மோதும் பொழுது உணர்வின் தன்மை இயக்கப்பட்டு அந்த உணர்வின் இயக்கமாக “பஜே நமச்சிவாய”

இந்த உடலுக்குள்.., அதனின் உணர்வை இயக்கும்.., “உணர்வின் ஒலிகளை எழுப்பும்.., உடலாக அமைந்துவிடுகின்றது” என்பதை உணர்த்துவதற்காகப் பாடல்களாகப் பாடினார்கள்.

வேதனையின் உணர்வை நாம் நுகர்வதினால் விஷமான உணர்வின் அணுக்கள் நமது உடல் முழுவதும் படர்கின்றது. நல்ல காரியங்கள் செய்வதற்குத் தடை ஏற்படுகின்றது.

விஷமான உணர்வின் தன்மைகளை இரண்யன் என்று காண்பித்துள்ளார்கள்.

(நம்) உடலான இந்திரலோகத்திற்குள் விஷமான உணர்வின் தன்மைகளான இரண்யன் புகுந்து நல்ல செயல்கள் நடைபெறமுடியாதபடி தடை ஏற்படுத்துகின்றான் என்று ஞானிகள் நன்கு தெளிவாக்கியுள்ளனர்.

வேதனை உணர்வுகள் நமக்குள் அணுக்களாக விளைந்துவிட்டால் அவைகள் இந்த உடலில் தன் உணர்ச்சிகளை உந்துகின்றன.

அதாவது தீமைகளை விளைவிக்கும் உணர்வின் அணுக்கள் நம் உடலில் விளைந்துவிட்டால் அது நம்மிடத்தில் வேதனையை உருவாக்குகின்றது.

இதனால் நல்லதைச் செய்ய முடியாதபடி இருக்கின்றதே.., “சிவமே..,” என்று இந்த உடலில் உணர்ச்சிகளைத் தூண்டி அறிவிக்கின்றது “நமது இந்திரலோகத்து.., அவயங்கள்”.

இதனை ஞானிகள் “தேவர்கள்” சிவனிடம் முறையிடுவதாகக் காண்பித்தார்கள்.

அதற்குச் சிவன் “எனக்கு வருவதை அணைக்கத்தான் தெரியுமே தவிர.., வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது’’ என்று அவர்களுக்குப் பதிலளிப்பதாக ஞானிகள் நமக்கு தெளிவாக்கியுள்ளார்கள்.

அதன் பின் “வரம் கொடுப்பவன் விஷ்ணு…,” ஆகவே அவனிடம் செல்வோம் என விஷ்ணுவிடம் வருகின்றனர். உயிரிடம் வேண்டும்படி கேட்கின்றனர்.

நீங்கள் கொடுத்த வரத்தால் இந்திரலோகத்தினுள் இரண்யன் புகுந்து எங்களைச் செயலற்றதாக ஆக்குகின்றான் ‘’விஷ்ணுவே…!  பரந்தாமா…!

எல்லாவற்றையும் உருவாக்கும் நிலைகள் கொண்டு “நீ வரம் கொடுத்த தன்மையால்.., இரண்யன் தரும் துன்பங்களை எங்களால் தாங்க முடியவில்லையே…,’’ என்று கதறுகின்றனர்.

அதற்கு விஷ்ணு, “நான்.., என்ன செய்யமுடியும்…? என்னால்.., வரம் தான் கொடுக்க முடியும்” என்று சொல்லுகின்றார்.

‘’பிரம்மா தான் உருவாக்குகின்றான்’’ அவனிடம் செல்வோம், அவன் அதற்கு உபாயத்தைச் சொல்வான் என்று பிரம்மனிடம் செல்லுகின்றார்கள்.

அங்கே பிரம்மனிடம் சென்றாலோ.., ‘’என் தந்தை விஷ்ணுவால் உருவாக்கப்பட்ட நான்.., அவர் இட்ட கட்டளைகளைச் செய்தே ஆகவேண்டும்”.

நான் உருவாக்கவில்லையென்றால்.., “உலகம் உருவாகாது’’ என்று பிரம்மனும் சொல்கின்றார்.

நான் எண்ணினாலும் என் தந்தை சொல்லை மீறாமல் “என்னை எந்த வழியில் உருவாக்கினாரோ..,” அந்த குணத்தின் இனத்தை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கமுடியும்.

நான் என் பணியில் தவறினால் “உலகம் உருப்பெறாது.., வாழவைக்க முடியாது..,” என்று பிரம்மன் கூறுவதாக அங்கே தெளிவாக்குகின்றார்கள்.

இந்திரலோகத்திற்குள்.., “தீமையை விளைவிக்கும் உணர்வுகள் வரும்பொழுதும்.., நல்ல உணர்வின் தன்மை அழியப்படும்பொழுதும்.., சிவனும் விஷ்ணுவும் பிரம்மாவும் என்ன உபாயங்கள் செய்கின்றார்கள்…?” என்ற நிலைகளைக் கேள்வி பதில்களாக அமைத்து நாமெல்லாம் அறிவதற்குக் காவியத் தொகுப்புகளைத் தெளிவாக்கிக் காட்டுகின்றார்கள்

2.”கண்ணனுக்குத் தான்” எல்லாமே தெரியும்

இவையெல்லாம்.., “கண்ணனுக்குத் தான்” தெரியும். ஆகவே அவரிடம் சென்று கேட்போம். “அவர் சரியான உபாயத்தைக் கொடுப்பார்” என்பதை விளக்குவதற்காகக் காவியமாகக் காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.

ஏனென்றால்.., கண் தோன்றியபின் எதைக் கூர்மையாகப் பார்த்து உணர்வின் தன்மையைக் கவர்ந்ததோ அதன் வழி நமக்குள் இந்திரலோகத்தை பெரிய சாம்ராஜ்யமாக உருவாக்கப்பட்டது.

கண்களால் தான் இந்த உலகையே சிருஷ்டிக்கும் வல்லமை கொண்ட “மனிதனின் ஆறாவது அறிவாகவும்.., தீமைகளை வென்றிடும் மனித உருவை உருவாக்கியது..,” என்ற நிலைகளை அங்கே தெளிவாக்குகின்றார்கள்.

அப்போதுதான் “கண்ணனிடம்” செல்கின்றார்கள்,

கண் தான் தோன்றியதிலிருந்து ஒவ்வொன்றையும் காத்தருளும் உணர்வை அறிவாக ஊட்டி அதனிலிருந்து விலகிச் செல்வதும் நுகர்ந்த உணர்வுகள் தனக்குள் வளர்வதற்கும் மூலகாரணமாக இருப்பது அவனே.

மனிதன் வரையிலும் வளர்த்தது.., “இந்தக் கண்களே”. ஆகையினால் அனைத்தும் அவனுக்குத் தெரியும். அவனிடம் செல்வோம். அவனிடம் உபாயம் கேட்போம்.

அவன் காட்டும் வழியில் நாம் செல்வோம் என்ற நிலைகளில் பிரம்மாவும் சிவனும் விஷ்ணுவும் அவனிடம் செல்கின்றார்கள்.

யாரிடம்…?

“நமது கண்களிடம்” உணர்வின் நிலைகளை முறையிடும்படிச் செய்கின்றார்கள்.

இந்திரலோகமாக உடலின் செயலாக்கங்களை மனிதன் தமது ஆறாவது அறிவின் துணை கொண்டு “எப்படித் தெளிவாக்க வேண்டும்?” என்று நமது காவியங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதை நாம் யாரும் பயன்படுத்தவில்லை.

ஞானிகள் காண்பித்த அருள்\வழிப்படி வானை நோக்கச் சொல்கின்றான், அதோ… வருகிறான்…, “ரிஷியின் மகன் நாரதன்…,” சூரியனின் அபிமானபுத்திரன் என்கிறான் கண்ணன்.

மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை வென்று தமக்குள் தீமையை வென்றிடும் நிலைகளை சிருஷ்டித்துக் கொண்டவன் துருவ மகரிஷி.

தீமைகளை வெல்லும் உணர்வின் தன்மை துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவருவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால் ரிஷியால் உருவாக்கப்பட்ட குழந்தைதான் “நாராயணனின் அபிமான புத்திரன்” ஆகின்றது.

சூரியன் தான் ஒளியின் சிகரமாக இருந்து ஒன்றைத் தான் கவர்ந்து மற்றொன்றை எப்படி இயக்குகின்றதோ இதைப்போன்று மனிதனானபின்

1.துருவ நட்சத்திர உணர்வின் ஒளிகளை எவர் நுகர்கின்றாரோ

2அவரின் உணர்வுகள் தீமைகளைப் பிளந்து

3.உண்மைகளைத் தனக்குள் உணர்த்தும்

4.என்று இந்தக் கண்கள் அதைக் காட்டிக் கூறுகின்றது.

அப்போது பிரம்மாவும் சிவனும் விஷ்ணுவும் ‘’ஐயோ..! அவன் கலகப்பிரியன் ஆயிற்றே.., கலகங்கள் இனி என்ன நடக்கப் போகின்றதோ…!’’ என்று அஞ்சுகின்றனர்.

அப்போது கண்ணன் சொல்கின்றான்..,  ‘’கலகங்கள் நன்மையில் தானே முடிகின்றது தீமையல்லவே..,!” இதையெல்லாம் உணர்த்துகின்றனர் ஞானிகள்.

நம்மிடத்தில் சேர்ந்துள்ள வேதனையின் உணர்வுகள் நமக்குள் அணுக்களாக விளைந்திருக்கும் நிலையில் “கண்ணன் காட்டும் வழியில்” துருவ மகரிஷிகளின் அருளுணர்வுகளைக் கவர்ந்து நம்முள் இணைக்க வேண்டும்.

அப்படி இணைக்கும் பொழுது  நம்முள் விளைந்துள்ள  வேதனையின் உணர்வுகளுக்கும் துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளுக்கும் போராகிக் கலகப்பிரியனாகி விடுகின்றது.

இதெல்லாம் ஞானிகள் நமக்கு உணர்த்திய நிலைகள்.

3.தீமை செய்யும் உணர்வுகளை வகுந்தால் “நரசிம்மா”

கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு மகாஞானிகளின் அருளுணர்வுகளை நம்முள் செலுத்தும் பொழுது “நம்முள் ஞானியின் உணர்வுகள் பிராணாயாமம்”.

நாம் பிறருடைய துயரமான உணர்வுகளை எண்ணி நம் உடலுக்குள் சேர்க்கும் முன்.., “நம் ஆன்மாவாக.., மணமாக மாறுகின்றது”.

ஆன்மாவாக இருந்தாலும் வரும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கண்ணின் நினைவு கொண்டு உயிருடன் ஒன்றி

1.‘’மகரிஷிகளின் அருள்சக்தி என் உடல் முழுவதும் படர வேண்டும்

2.என் ஜீவான்மா பெற வேண்டும்’ என்று

கண்ணான கண்களின் நினைவலைகளை உட்புறமாகச் செலுத்தப்படும் போது நாம் எண்ணிய உணர்வுகள் பிராணாயாமம்.

1.நாம் ஒரு பானைக்குள் போட்டு வேக வைக்கும்போது

2.அதனின் சத்து கொதித்து அதனின் மணம் வெளி வருவதைப் போன்று

3.நாம் எண்ணி எடுக்கும் அருள் ஞானிகளின் உணர்வுகள் ஜீவன் பெற்று

4.அந்த மணத்தின் வீரியத்தின் தன்மை உள் நின்று வெளிவருவது

5.நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையைப் “பிளக்கின்றது”.

‘’உயிரான அவன்.., வாசற்படி மீது அமர்ந்து இரண்யனை மடி மீது அமர்த்திப் பிளந்தான்’’ என்று எடுத்துரைக்கப்பட்டது. “தீமைகளை வகுந்தான்..,” என்று காட்டப்பட்டது.

இதுதான்,  கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எண்ணும்போது உயிரான நிலைகள் ‘’ஓ…’’ என்று பிரணவமாகி நுகர்ந்த உணர்வின் சக்தி பிரம்மாவாகி உடலுக்குள் அனைத்து நிலையும் இணைத்துச் சிருஷ்டிக்கின்றது.

அதனின் ஜீவனாகி ஓங்கி விண்ணின் வீரிய சத்தாக உள் நின்று வெளிப்படும் உணர்வின் துணை கொண்டு வளர்ந்திருக்கும் தீமையைப் பிளக்கின்றது.

நாம் மகாஞானியின் உணர்வை நேர்முகமாக உள் சுவாசித்துத் தீமையை அகற்றிடும் நிலையாக அருள் உணர்வின் தன்மையை சேர்க்கும் நிலைதான் ‘’நரசிம்ம அவதாரம்..,’’ என்கிறோம்.

துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வெளிப்படும் உணர்வின் ஒளியலைகளை நமக்குள் கவர்ந்து ஆன்மாவாக மாற்றி நம்மில் வந்து மோதும் தீய உணர்வுகளைப் பிளந்து உயிரில் இணையும் உணர்வினை ஒளியின் உணர்வாக இணைக்கவேண்டும்.

தீமைகள் “என்றும் நம்முள் நுழையாதபடி..,” தடைப்படுத்திடல் வேண்டும். இவ்வாறு தீமையின் தன்மை நம்முள் நுழையாதபடி தடை செய்வதைத்தான் ‘’நரசிம்மன்’’ என்றார்கள் ஞானியர்கள்.

கூட்டுத் தியானத்தின் சிறப்பு என்ன…?

Combined meditaion

கூட்டுத் தியானத்தின் சிறப்பு என்ன…?

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் தியானமிருக்கும் அனைவரது குடும்பங்களிலும் படர்ந்து அவர்கள் இரத்தநாளங்களில் கலந்து அவர்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

அவர்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் பாப வினைகள் அனைத்தும் அகன்று அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

தியானமிருக்கும் குடும்பங்களில் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மன நோய் நீங்கி மன பலம் பெற்று உடல் நோய் நீங்கி உடல் நலம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

தியானமிருக்கும் குடும்பங்களில் வாழ்ந்து வரும் கணவனும் மனைவியும்
1.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து
2.நளாயினியைப் போன்று கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதித்து நடந்து
3.சாவித்திரியைப் போன்று கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றி வாழ்ந்து
4.இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து
5.இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி
6.நஞ்சினை வென்று பேரருள் பெற்று பேரொளி என ஆகிட அருள்வாய் ஈஸ்வரா

தியானமிருக்கும் குடும்பங்களில் வளர்ந்து வரும் குழந்தைகள் அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற்று அருள் ஞானக் குழந்தைகளாக வளர்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

எங்கள் குழந்தைகள் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
1.கல்வியில் ஞானம் பெற்று
2.கருத்தறிந்து செயல்படும் திறன் பெற்று
3.உலக ஞானம் பெற்று
4.உலகைக் காத்திடும் உத்தம ஞானிகளாக
வளர்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

இதை எல்லோரும் ஒன்று போலச் சொல்லி “உணர்வின் ஒலிகளை எழுப்பும் பொழுது..,
1.எல்லோருடைய செவிகளிலும் படுகின்றது.
2.இந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டுகின்றது.
3.கண்களுக்கு வருகின்றது.
4.சொன்ன உணர்வுகள் எல்லாம் இந்த பூமி முழுவதும் படர்கின்றது.
5.நம்முடைய கண்களில் உள்ள கருமணிகள் பதிவாக்குகின்றது.
6.கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் இந்த அருள் உணர்வுகளைக் கவர்ந்து இழுக்கின்றது.
7.நம்மைச் சுவாசிக்கச் செய்கின்றது.
8.நம் உயிரிலே மோதுகின்றது.
9.இந்த உணர்ச்சிகள் இரத்தநாளங்களில் கலக்கின்றது.

இப்படி “எல்லோரும்.., நன்றாக வேண்டும்” என்று நாம் சொல்லும் உணர்வுகள் வலுப்பெறுகின்றது. அடிக்கடி இந்த மாதிரிச் சொன்னோம் என்றால் “நோயுள்ளவர்கள் கேட்டால் கூட.., அந்த நோயெல்லாம் நீங்கிவிடும்”.

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் குடுமபத்தில் உள்ள சிரமங்களெல்லாம் நீங்கள் வேண்டும் என்று நீங்கள் ஒன்று சேர்ந்து கூட்டாகத் தியானித்துப் பரிசுத்தப்படுத்துங்கள்.., நீங்கிவிடும்.

இது ஒரு “பழக்கத்திற்கு..,” வரவேண்டும்.

ஒருவர் மிகக் கொடுமையான நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதனின் வீரியத்தைக் குறைக்க முடியும். ஆனால், அதே சமயத்தில் “இறப்பதை…, யாரும் தடுக்க முடியாது”.

அவர் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அவர் உயிரான்மா வெளியிலே சென்றாலும்.., இந்தக் கூட்டுத் தியானத்தின் அமைப்பு கொண்டு அவரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்திற்கு உந்தித் தள்ளுதல் வேண்டும்.

அங்கே இணைத்து அவரைப் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.

ஆனால், முழுமையாக ஆயுள் காலம் முழுவதும் தியானம் செய்து “தியானத்தால்.., நோயெல்லாம் நீக்கிவிடுவேன்” என்று சொன்னால் யாரும் முழுமையாக இருக்கப் போவதில்லை. “இருக்கவும் முடியாது”.

1.சிறிது காலம் இந்த உடலிலிருந்து “நல்லதை எண்ணுவதற்காக வேண்டியாவது..,” வாழ வைக்கலாம்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை “அவரைப் பெறச் செய்வதற்காக வேண்டி” வாழ வைக்கலாம்.

முழுமையாக யாரையும் நாம் காப்பாற்ற முடியாது. நம்மையே.., நாம் காப்பாற்ற முடியாது. பிறகு.., யாரை நாம் காப்பாற்ற முடியும்…!

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து முழுமை பெறுவதற்காகத்தான் இதை மீண்டும் மீண்டும் உபதேச வாயிலாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

எல்லோரும் நல்லதாக வேண்டும் என்று சொல்லும் பொழுது எல்லா உணர்வுகளும் நமக்குள் நல்லதாகின்றது. நாம் கூட்டமைப்பு கொண்டு எல்லோரும் சேர்ந்து சொல்லப்படும் பொழுது மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும்.

வெள்ளம் வந்தால் குப்பை கூளங்களை ஒட்டு மொத்தமாக அடித்துச் செல்வது போல் அந்த அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து எண்ணும்போது ஒவ்வொருவருக்குள்ளும் அதீத அளவில் சக்திகள் கூடும்.

தீமைகள் விலகும். வாழ்க்கையில் வேதனையின்றி வாழ முடியும். மன மகிழ்ச்சி கிடைக்கும். ஆகவே, வாரத்தில் ஒரு நாளாவது கூட்டாகத் தியானியுங்கள்.

கூட்டமைப்பாகத் தியானித்து “அதீத சக்திகளைப் பெறுங்கள்” – சக்தி வாய்ந்தவர்களாக நீங்கள் ஆவீர்கள். உங்கள் அனுபவம் பேசும்.