நோய்களையும் வேதனைகளையும் நம் அருகே வரவிடாமல் தடுக்கச் செய்யும் பயிற்சி

POLARIS

நோய்களையும் வேதனைகளையும் நம் அருகே வரவிடாமல் தடுக்கச் செய்யும் பயிற்சி 

நாம் மனிதரான பிற்பாடு பிறர் சொல்லும் கவலைகளையும் சங்கடங்களையும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தால் நமக்குள் கவலையையும் சஞ்சலத்தையும் வேதனையையும் உண்டாக்கும் சந்தர்ப்பம் தன்னாலேயே வந்து விடுகின்றது.

ஆகவே கவலை வேதனை போன்ற உணர்வுகளை நீங்கள் கேட்க நேர்ந்தால் உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.“நீங்கள் நன்றாக இருப்பீர்கள்
2.உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்கும்
3.உங்களுடைய தொழில் நன்றாக இருக்கும்”
என்ற இது போன்ற வார்த்தைகளைத்தான் நீங்கள் சொல்ல வேண்டும்.

இது போன்ற வார்த்தைகளை அந்தக் கவலையாகச் சொன்னவர்களிடம்… “நீங்கள் கோபமாகச் சொன்னாலும் சரி”.

“இந்த உணர்வின் அழுத்தம்..,” நஞ்சான உணர்வுகள் உங்களிடம் வராது தடுத்துவிடும்.

நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்கும், நீங்கள் நலமாக இருப்பீர்கள், உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்கும் என்று எண்ணி அவர்களைப் பார்த்துக் கோபமான உணர்வுடன் “அழுத்தத்துடன் சொன்னால்” நஞ்சான உணர்வுகள் அவர்களிடமிருந்து விலகும்.

“நம்மிடம் அது வராது…!”

இல்லையென்றால் அவர்களுடைய கவலைகளை சஞ்சலங்களை “உம்… ம்…” என்று நீங்கள் காது கொடுத்துக் கேட்டால் உங்களிடம் சோர்வு வந்துவிடும். சிந்தனைத் திறனும் குறையும்.

ஒரு நண்பர் மேல் பாசமாக இருக்கிறோம். திடீரென்று… அந்த நண்பர் விபத்தில் சிக்கிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம்.

“நேற்று வரை நன்மைகள் செய்தாரே…! இன்று விபத்தில் சிக்கி இப்படி ஆகிவிட்டாரே..!” என்று எண்ணுவோம்.

“ஆத்ம சுத்தி செய்வதை மறந்துவிடுவோம்…” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று எண்ணுவதை மறந்துவிடுவோம்.

அடிபட்ட நண்பரை ஆஸ்பத்திரியில் பார்த்து எப்படி இருந்தவர் “இப்படி இருக்கின்றாரே…” என்று எண்ணினால் இதன் உணர்வுகள்தான் வரும். நமக்குள் அது வளரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று எண்ணி உடனே நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதலில் இருளான உணர்வுகள் நம்மை “இயக்கவிடாதபடி…” தடுத்துவிட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நண்பரின் உடல் முழுவதும் படர்ந்து அவருடைய வேதனைகள் நீங்கி நல் உணர்வைப் பெறக்கூடிய சக்தி பெறவேண்டும்.

அவர் பூரண குணமடைய வேண்டும்…! என்று எண்ண வேண்டும்.

“இது சாதாரணமானதல்ல…” நீங்கள் இதன் உணர்வுகளைச் சொல்வதை.. “நண்பர் தம் காதால் கேட்டால்.. அவர் நுகர நேர்ந்தால்..” நீங்கள் எண்ணிய உணர்வுகள் நண்பரிடத்தில் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

சீக்கிரமே நண்பர் நலம் பெறுவார். இது போன்று நீங்கள் செய்து பாருங்கள்.

ஒருவர் எவ்வளவு கடிமான நோயில் இருந்தாலும் கூட நீங்கள் கூடுதலாகச் சில நிமிடம் அவருக்காகத் தியானம் செய்யும்போது அவர் சீக்கிரமே நோயிலிருந்து விடுபட்டு நலம் பெறுவார்.

“உங்களுக்கு… அந்தச் சக்தி உண்டு…!” என்று யாம் கூறுகின்றோம்.

மற்றவர்களுடைய வேதனைகளை நோய்களை உங்களால் நீக்க முடியும். ஆனால், தவறிப் போய் நோயாளியின் வேதனை உணர்வுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது.

நீங்கள் ஆத்ம சுத்தி செய்துவிட்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நண்பருடைய உடல் முழுவதும் படரவேண்டும், நண்பருடைய இரத்த நாளங்களில் கலக்க வேண்டும், அவர் வேதனையிலிருந்து விடுபட வேண்டும். அருள் சக்தி அவர் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

உங்கள் நண்பரையும்.., “இது போன்று எண்ணச் சொல்லுங்கள்”. இதை உங்கள் பழக்கத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

ஏனென்றால், மற்றவர்கள் சொல்கிற கஷ்டங்களை நாம் கேட்கிறோம். கேட்டவுடன் நாம் சோர்வடைகின்றோம்.

ஆத்ம சுத்தியையும் அருள் உணர்வுகளையும் சொல்லும்போது சோர்வை நீக்குகின்றோம்.

“அந்த அருள் சக்தியைத்தான்” யாம் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இருக்கும் இடத்திலிருந்தே அண்டசராசரத்தின் ஆற்றல்களைப் பெறமுடியும்… உங்களால் முடியும்…!

Trust your will

இருக்கும் இடத்திலிருந்தே அண்டசராசரத்தின் ஆற்றல்களைப் பெறமுடியும்… உங்களால் முடியும்…! 

ஒரு துளி விஷம் பாலில் பட்டால் அதைக் குடித்தால் என்ன ஆகின்றது? நம்மை மயங்கச் செய்கின்றது. சிறிது விஷம் அதிகமானால் மரணமடையும் நிலையே வந்துவிடுகின்றது.

இதைப் போன்று தான் சந்தர்ப்பத்தால் நாம் வேதனைப்படுகின்றோம். வேதனை என்பதே விஷம்.

வேதனை உணர்வுகள் இரத்தத்தில் கலந்ததென்றால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களில் இது பட்டபின் நம்மை “மயங்கச் செய்துவிடுகின்றது”.

அப்பொழுது சிந்தனை என்ற நிலைகளை இங்கே இழக்கச் செய்கின்றது. தன்னை அறியாமலே வெறுப்பும் வேதனைப்படும் நிலைகளைச் செயல்படத் தொடங்கிவிடுகின்றது.

இதிலிருந்து நாம் மீள வேண்டும் அல்லவா…! அதற்கு என்ன உபாயம் இருக்கின்றது…?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்த அந்த வழிப்படி உங்களுக்குள் விஷத்தை அடக்கிடும் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்குதல் வேண்டும்.

பின் கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் என்று “உள்முகமாகப் பாய்ச்சுதல் வேண்டும்”.

இப்படி எண்ணினால் அந்தத் தீமைகளை மறைத்துவிடுகின்றது. அப்பொழுது அந்த வேதனை என்ற உணர்வுகள் “இழுக்காது.., தடைப்படுத்தப்படுகின்றது”.

இது வலுப் பெறும் பொழுது நம் ஆன்மா மீது சுருண்டு கிடக்கும் வேதனைப்படச் செய்யும் தீமைகள் நீக்கப்படுகின்றது.

எத்தகையை நிலைகள் வந்தாலும் இதைப் போல நம்மைப் பாதுகாக்கும் வலுவான உணர்வுகள் வருதல் வேண்டும்.

இன்று இருக்கும் இந்த விஷமான உலகில் “நம்முடைய சிந்தனைகள் சிதறாது” அருள் உணர்வை நமக்குள் சேர்த்துப் பழக்குவதற்குத்தான் அடிக்கடி உங்களுக்குள் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

மெய் ஞானிகள் பெற்ற அருள் உணர்வுகளை உங்களுக்குள் அடிக்கடி உந்தச் செய்கின்றோம். உங்கள் “மனம் மாறும் நிலைகளில்” எல்லா உணர்வுகளுடன் இதைக் கலக்கச் செய்து உணர்வைப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

பதிவாக்கியதை நினைவு கொண்டு நீங்கள் மீண்டும் ஏங்கினால்  தீமைகளை அகற்றிட முடியும். அந்தத் தன்னம்பிக்கை வர வேண்டும்.., உங்களை நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்கே இதைச் செய்கின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படித் “தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வினைப் பாய்ச்சி… அதைச் செய்தாரோ…!” அதே போல உங்களுக்குள்ளும் பாய்ச்சுகின்றோம்.

பல இன்னல்களைச் செயற்கையாக ஊட்டினார். அதன் செயலாக்கங்களையும் அதிலிருந்து விடுபடும் மார்க்கங்களையும் தெளிவாகக் காட்டினார்.
1.என்னைக் காட்டுக்குள்ளும் மேட்டிற்குள்ளும் அழைத்துச் சென்று அத்தகைய நிலைகளைக் காட்டினார்.
2.நீங்கள் வீட்டிற்குள் இருந்தே இதைப் பெறமுடியும்.

தீமையை வென்ற உணர்வின் தன்மை “உணர்ச்சிகளாகக் கொடுத்து” நீங்கள் எல்லோரும் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

இது உலகைச் சுற்றி ஊரைச் சுற்றிக் காட்டைச் சுற்றி உணவில்லாதபடி நான் அலைந்தேன். அகண்ட அண்டத்தின் நிலைகளையும் உலக அனுபவத்தையும் குருநாதர் கொடுத்தார்.

நீங்கள் உங்கள் வீட்டிற்குள் இருந்தே அந்த அனுபவத்தைப் பெற முடியும்.

அதைப் பெற.., “உங்கள் நினைவு ஒன்றுதான்” தேவை.

தீமை என்று நீங்கள் காணும் பொழுதெல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
2.தீமையிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும்.
3.தீமை செய்வோர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வினைப் பாய்ச்சினால்
4.“தீமையை நுகரும் சக்திகள்” அங்கே மாறிவிடுகின்றது.

இதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பத்திலேயும் கணவனும் மனைவியும் இதைச் செய்தே ஆக வேண்டும்.

இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்கள் உங்களுக்குள் வளர்ந்து வரும் நிலையில் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது இந்த உயிர் எதை வலுவாக எடுத்ததோ அங்கே அழைத்துச் செல்கின்றது.

நாம் “பிறவியில்லா நிலை” அடைகின்றோம்.

உலக யுத்தத்திலிருந்து “உங்களைக் காக்கும் பாதுகாப்புக் கவசம்”

divine-oneness-people-circle

உலக யுத்தத்திலிருந்து “உங்களைக் காக்கும் பாதுகாப்புக் கவசம்” 

இன்றைய விஞ்ஞான அறிவு மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்குப் பயன்படுகிறது.

ஆனாலும், இதே விஞ்ஞான அறிவு மாற்று மத இன மொழி கொண்ட மக்களை அழிப்பதையும் பகைவர்களின் உணர்வுகளைச் செயலற்றதாக ஆக்குவதையும் அதிகப்படியான நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதே சமயத்தில் இது போன்ற தீமையான நிலைகள் “தம்மையும் பாதிக்கும்” என்ற நிலையில் எண்ணுவது இல்லை.

இன்று இங்கே ஒவ்வொருவரும் கொடி பிடித்துக் கொண்டு தனக்குப் பிடித்தது என்றால் “வாழ்க.., என்றும் பிடிக்கவில்லை என்றால் ஒழிக..,” என்று கோஷம் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், அவன் அங்கிருந்து ஒரு அணுகுண்டைப் போட்டால் இவர்கள் தப்புவார்களா…? எல்லோரையும் பாதிக்கத்தான் செய்யும்.

ஆக மொத்தம்.., தான் பிறந்த மண் என்ற நிலைகளை மறந்து மதம் இனம் மொழி என்ற நிலைகளில் செயல்பட்டோம் என்றால் நம்மை “ஆண்டவன் காப்பாற்றுவான்” என்று எண்ணுகின்றனர்.

மாற்று மதத்தினர் “பிசாசை வணங்கக்கூடியவர்கள்” என்றும் பிசாசு ஒழிந்துவிட்டால் ஆண்டவனுக்கு நல்லதாகிறது என்கிறார்கள்.

இதனால் பிசாசுத் தன்மை கொண்ட நூறு பேரை அழித்தான் என்றால் ஆண்டவன் அவனுக்கென்று தனி இடத்தைச் சொர்க்கத்தைத் தருகிறான் எனறும் கூறுகின்றனர்.

தீவிரவாதிகள் என்ற நிலையில் ஒரு இனத்தில் மட்டுமல்ல இன்று எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருப்பது இதுதான்.

இந்தத் தீவிரவாதத்தின் தன்மையை ஆண்டவனுக்குச் செய்யும் சேவையாகச் செய்கின்றார்கள்.

ஒருவன் நூறு பேரைக் கொல்வதனால் தவறில்லை. வயிற்றுக்கு உணவோ மற்றவைகளுக்கோ நீ என்ன சுகம் வேண்டுமோ அனுபவித்துக்கொள்.

உனது குடும்பத்திற்குத் தேவையான வசதி வாய்ப்பைக் கொடுத்துவிடுகின்றோம் என்று இப்படித்தான் மூளைச் சலவை செய்துள்ளார்கள்.

எல்லோரும் தீயவர்கள். சந்தர்ப்பம் வாய்க்கும்போது அவர்களைக் கொன்றுவிடு. உனக்கு ஆண்டவன் சொர்க்கத்தில் இடம் தருவான் என்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

ஒரு மதத்திற்குள் இன்னொரு மதம், இன்னொரு இனம் என்று இருந்தால் அவன் ஆண்டவனுக்கு விரோதமாகச் செய்கிறான். அதனால் அவனைக் கொல்வதனால் தவறில்லை என்ற நிலை உலகம் முழுவதற்கும் பரவியுள்ளது.

இது வளர்ந்து வளர்ந்து இன்று பழிதீர்க்கும் உணர்வுகள் தான் சாதாரண மனிதன் உடலிலும் உருவாகிவிட்டது. எதிரி என்ற நிலைகளில் அவனை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வுகள்தான் வருகின்றது.

யானை புலி போன்ற மிருகங்களிடமிருந்து தப்பிப்பதற்குச் சில உபாயங்கள் உண்டு. ஆனால், நாட்டிற்குள் இது போன்ற மோசமான நிலைகள் இருக்கின்றன.

இதிலிருந்து தப்புவது எப்படி?

காட்டிற்குள் உள்ளவைகளைக் கட்டுப்படுத்த முடியும். நாட்டிற்குள் உள்ளவைகளைக் கட்டுப்படுத்த முடியுமா என்றால் முடியாது. நீங்கள் நன்மையே செய்தாலும் உங்களுக்கு என்ன இடைஞ்சல் செய்ய வேண்டுமோ அதைச் செய்தேதான் ஆகும்.

நீங்கள் ஒருவருக்கு உதவி செய்து பாருங்கள். அவர்.., “சிறிது நிமிர்ந்தவுடனே (முன்னேறியவுடன்).., நீங்கள் அவரிடம் தாழ்ந்துதான் போகவேண்டும்”.

இத்தகைய நிலைகள்தான் காற்று மண்டலத்தில் அதிகமாகப் படர்ந்து பரவி இருக்கின்றது என்ற நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

உலகில் அனைத்து நிலைகளிலும் அது வளர்ந்து வந்திருக்கின்றது. இதிலிருந்தெல்லாம் தப்ப நீங்கள் வாழும் இடத்தில் கூட்டுத் தியானத்தை வலுப்படுத்துங்கள்.

“அனைவரும் ஒன்று சேர்ந்து” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சுவாசித்து அந்த அருள் ஒளியின் சுடரை உங்கள் உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீங்கள் வசிக்கும்
1.வீடு முழுவதும் படரவேண்டும்,
2.தெரு முழுவதும் படரவேண்டும்,
3.ஊர் முழுவதும் படரவேண்டும்,
4.இந்த உலகம் முழுவதும் படரவேண்டும் என்று நீங்கள் ஏகோபித்த நிலையில் அந்த மூச்சலைகளைப் பரப்புங்கள்.

“கூட்டமைப்பாகப் பரவச் செய்யும்” அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக அமையும்.

அதன் வழியில் நாம் வாழும் இடங்களில் இத்தகையை தீமைகள் வராமல் தடுத்துக் கொள்ள முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

 

1.”உங்கள் எண்ணம்” உங்களைக் காக்கட்டும்.
2.”உங்கள் மூச்சலைகள்” இந்த உலகை அமைதி பெறச் செய்யும் சக்தியாக மலரட்டும்.

விஷ்ணு தத்துவம் – 5

Image

Lord-Rama and goddess Sita

விஷ்ணு தத்துவம் – 5

கடவுளின் அவதாரம் பத்து – 3. இராமன்

கடவுளின் அவதாரத்தில் மூன்றாவது அவதாரம் இராமன்.

உயிரணு பெறும் சரீரத்தின் தோற்றமான விதத்தையும் “எண்ணங்களின் தோற்றத்தையும்” அதனின் இயக்கங்களை நமக்கு உணர்த்துவதற்காக அன்று ஞானிகள் இராமன் என்னும் கதாபாத்திரத்தைப் படைத்து இதிகாசம் மற்றும் புராணங்களை உருவாக்கினார்கள்.

  1. இராமன் – எண்ணம்

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் விஷம் காந்தம் புவியின் ஈர்ப்புக்குள் வரப்படும் பொழுது ஒரு செடியிலிருந்து வெளிப்படக்கூடிய சுவையான சத்தினைக் கவரப்படும்பொழுது அது “சீதாலக்ஷ்மியாக” மாறுகின்றது.

சீதா என்றால் சுவை. அதே உணர்வை ஒரு உயிரணு நுகர்ந்தால் அந்த உணர்வின் சத்து உடலாக மாறுகின்றது.

“சீதா” என்ற இந்தச் சுவை உயிருடன் ஒன்றி அதன் உணர்வின் உடலாக சிவமாக மாறுகின்றது. சிவத்துக்குள் சக்தியாக இயங்குகின்றது.

இதைத்தான், “திரேதாயுகத்தில்” நாராயணன் சீதாராமனாக அவதரித்தார் என்று தெளிவாக அன்று காவியங்களில் கூறப்பட்டது.

அதில் “திரேதா.., என்பது சரீரம்.., உயிரணு உடல் பெறும் நிலை”. இதற்குள் “சீதாராமன்” தான் எடுத்துக் கொண்ட சுவை எதுவோ.., “அந்த எண்ணமாக” இயக்குகின்றது.

ஒரு உயிரணு கடலைச் செடியின் மணத்தை நுகர்ந்து புழுவின் உடலைப் பெற்றபின் “கடலைச் செடியைச் சாப்பிடவேண்டும்” என்ற “எண்ணம்” அந்தப் புழுவிற்கு வருகின்றது.

அதாவது எந்தச் செடியின் சத்தைப் புழு நுகர்ந்ததோ அந்தச் சத்தின் தன்மைக்கொப்பத்தான் எண்ணம் வருகின்றது.

உயிரணு ஒரு செடியிலிருந்து சத்தினை நுகர்ந்து தன்னுள் இணைத்து உடலாக மாறும் பொழுது “சீதாராமா” எண்ணங்கள் தோன்றி.., இதைச் சாப்பிட வேண்டும்.., என்ற எண்ணம் உண்டாகின்றது.

“உணர்ச்சியை வைத்து.., உணர்வை இயக்கி” அதற்கு வேண்டிய உறுப்புகளை இயக்கத் தொடங்குகின்றது.

“எண்ணம்” இல்லை என்றால் “இயங்காமல்தான்” இருக்கும்.

எந்த நினைவினை எண்ணுகின்றோமோ அது இராமனின் “அம்பு போன்று பாய்ந்து..,” உணர்வின் அணுக்கள் ஒவ்வொன்றையும் இயக்கி அதன் தொடர் கொண்டு நமது உடலை இயக்கும்.

எண்ணம் உருவாகவில்லை என்றால் உடலை இயக்காது.

இதைத்தான் நாராயணன் திரேதாயுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான் என்று தெளிவாக அன்று காவியங்களில் கூறப்பட்டுள்ளது.

  1. கல்யாணராமன்

மனிதரிடத்திலும், உணர்வின் எண்ணங்களின் இயக்கத்தை உணர்ந்த இராமாயணத்தில், “கல்யாணராமா” என்று பாடினார்கள்.

கல்யாணராமனாக எப்பொழுது ஆகின்றான்?

சீதையை மணக்க வேண்டுமென்றால் அரசன் வைத்திருக்கும் வில்லைத் தூக்கி நிறுத்தி வளைத்து முறிக்க வேண்டும்.

அவ்வாறு வில்லை வளைத்து முறிப்பவர் எவரோ அவரே சீதையை மணக்கும் தகுதியுடையவர் என்ற நிலையைக் காண்பித்தனர்.

ஏனெனில், வில்லிலே பொருத்தி எய்யப்படும் அம்பு “பிறரைத் துன்புறுத்தும்” தன்மை கொண்டது.

துன்புறுத்தும் உணர்வை வென்றவர் எவரோ அவரே சீதாவைத் திருமணம் செய்து கொள்ளும் தகுதி உடையவர் எனும் நிலையைக் காண்பித்தனர்.

வீர தீரம் காட்டிய பலரும் வில்லின் வலிமையை உணர்ந்தனரே தவிர வில்லைத் தூக்கக்கூட அவர்களால் முடியவில்லை.

ஆனால் இராமனோ.., “தீமை விளைவிக்கும் நிலைகளிலிருந்து.., தீமையில்லாத நிலையை உருவாக்குகின்றான்” என்பதை உணர்த்தும் பொருட்டு இராமன் வில்லைத் தூக்கி நிறுத்தி வளைத்து முறித்துவிடுகின்றான்.

அதன்பின் சீதையை மணந்து கொள்கின்றான் என்று காண்பித்து “தீமையை அடக்கும் சக்தியினை” தன்னுடன் இணைத்துக் கொண்ட நிலையைத்தான் “கல்யாணராமன்” என்று எடுத்துரைத்தனர்.

மனித வாழ்க்கையில் தீமையை அகற்றி அந்தத் தீமையைச் செயல்படவிடாது தம்முடன் அரவணைத்து ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவர்கள் தான் “மகரிஷிகள்”.

துருவ மகரிஷியைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷிகள் என்னும் நிலையை அடைந்தார்கள்.

பல கோடித் தீமைகளைக் கேட்டுப் பார்த்து உணர்ந்தாலும் மகரிஷிகள் அதனைத் தமது அரவணைப்பாக தமக்குள் சுவையாக ஒளியாக மாற்றிக்கொண்டவர்கள்.

துருவ மகரிஷியும் சப்தரிஷிகளும் தங்களுடைய உயர்ந்த எண்ணங்களின் துணை கொண்டு மற்றவர்களுடைய எண்ணங்களை தம்முள் வளர்த்திடாது ஒளி பெறும் உணர்வினை தம்முடன் இணைத்து “ஒளியின் சரீரமாக மாறியவர்கள்”.

இதுதான் ‘’கல்யாணராமா” என்பது.