“ஒ…..ம்” நாம் எதை நமக்குள் பிரணவமாக்க (ஜீவன் பெறச்செய்ய) வேண்டும்? ஞானிகளின் விளக்கம்

Image

http://omeswara.blogspot.com/2016/09/blog-post_9.html

நமக்குள் இதற்கு முன் அறியாது சேர்ந்த எத்தனையோ உணர்வுகளால் கேன்சர், டி.பி., ஆஸ்த்மா போன்ற நோய்கள் வருகின்றது. அந்த உணர்வுக்கொப்ப அணுக்கள் தூண்டுகின்றது. அந்த உணர்வின் தன்மையை நுகர்கின்றோம்.

அதனால் நம்மை அறியாமலே உடலில் வேதனைப்படுகின்றோம். வேதனை என்ற உணர்ச்சிகளை உந்துகின்றது.

வேதனைப்படும் அணுக்கள் நம் உடலில் சேர்ந்தால் அந்த உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது நம் இரத்தத்தின் வழி உயிரின் சிறு மூளைக்கு எட்டுகின்றது. அணுக்களுக்குள் வேதனை என்ற உணர்வு வருகின்றது.

நம் உயிர் உடனே கண் காது மூக்கு இவைகளுக்கு ஆணையிடுகின்றது. அந்த உணர்வின் நினைவாற்றல் “வலிக்கும் இடத்தைக் காட்டுகின்றது”.

அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும் பொழுது அந்த வலி இருக்கும் இடங்களில் எந்த விஷத் தன்மையை அந்த அணுக்கள் பெற்றதோ அதற்கு நேரடியாகவே உணவைச் செலுத்தச் செய்கின்றது.

நமக்குள் தீமையை விளைவிக்கும் அல்லது நம் உடலுக்குள் வேதனையை உருவாக்கும் நம் உடலைச் சிதையச் செய்யும் அணுக்கள் உருவாகியிருந்தால் அத்தகையை சிதைவின் நேரத்தில் நமக்குள் வேதனையின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது,

ஆக, இந்த உணர்வின் தன்மை உயிருக்கு எட்டுகின்றது. ஆனால் எட்டும் பொழுது வேதனை உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனையான அணுக்களைத் தான் பெருக்க உதவுகின்றது.

அதை மாற்ற வேண்டுமா வேண்டாமா..,?

ஆகவே, நாம் எதைப் பெருக்க வேண்டும்?

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நம் உடலில் எங்கே வேதனை உருவாகி இருக்கின்றதோ அந்த அணுக்கள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும், அவை மகிழச் செய்யும் அணுக்களாக மாற வேண்டும் இந்த உடலில் நாம் நலம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால், வேதனைப்படுவதற்கு மாறாக, வேதனையை உருவாக்கும் அணுக்கள் உருவாக விடாமல் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெறவேண்டும், மகிழ்விக்கும் உணர்வின் அணுவாக விளைய வேண்டும் என்று நாம் நம் நினைவாற்றலைச் செலுத்தப் பழகிக் கொள்தல் வேண்டும்.

இராமாயணத்தில் காட்டுகின்றார்கள். இராமன் எப்பொழுது கல்யாணராமனாகின்றான்? (சீதா என்ற) மகிழ்ச்சி என்ற உணர்வைச் சேர்க்கும் பொழுதுதான் கல்யாணராமன் ஆகின்றான்.

எல்லோருடைய எண்ணங்களை ஒன்றாக இணைத்து எல்லோரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வை ஒன்றாக்கிப் பாருங்கள். மகிழ்ந்து வாழும் சக்தி அனைவரும் பெற்று நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

உங்களுக்குள் “ஆனந்தக் கண்ணீர்” வரும். ஆக, அன்புடன் அரவணைக்கும் அணுவின் தன்மை உருவாகும். இதைப் போன்ற உணர்வுகளைத் தான் ஜீவ அணுவாக நம் உடலாக மாற்ற வேண்டும் என்று ஞானிகள் காட்டினார்கள்.

ஏனென்றால் நம் உயிர் “ஓ.., ம்” என்று ஜீவ அணுவாக நம் உடலாக மாற்றுகின்றது. நாம் எண்ணும் உணர்வே ஓம் என்று ஜீவ அணுவாக மாறுகின்றது. ஆகவே, நாம் எதை எண்ண வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

இதைத்தான் அன்று ஞானிகள் செய்தார்கள்.

வெறுமனே “ஓம் ஓம்” என்று சொன்னால் அர்த்தமற்றது. நாம் “ஓம்.., ஓம்.., ஓம்..,” என்று சொல்வதில் பொருள் இல்லை.

ஆகவே, இதைப் போன்று நீங்கள் உங்கள் உடலில் வேதனை என்ற உணர்வுகள் வந்தால் இப்பொழுது யாம் கூறிய தியான முறைப்படி அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் அணுவாகின்றது.

அந்த உணர்வின் வலுவை நமக்குள் உருவாக்கும் அணுக்கள் உருவாகின்றது. இதன் வழி கொண்டு மகரிஷிகளின் ஆற்றல் நாங்கள் பெறவேண்டும் என்று அந்த உணர்வை வளர்த்து உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குச் செலுத்துங்கள்.

இந்த உணர்வைச் செலுத்தப்படும் பொழுது “நம்முடைய நினைவாற்றல்” அங்கே பெருகுகின்றது. அவ்வாறு பெருகும் நிலைகள் கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அங்கே மகரிஷிகள் அருள் வட்டத்திற்குச் செல்கின்றோம்.

சப்தரிஷி மண்டலம் அடைகின்றோம், மனிதனின் கடைசி எல்லை அதுவே.

உயிர் உடலை விட்டு எதனால் பிரிகின்றது…?

Image

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உடலில் எல்லா அணுக்களிலும் இணைகின்றது

நாம் சுவாசித்த அந்த அணுக்களின் தன்மை நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் போய்விட்டுத்தான் வரும்.

ஆக, நாம் எந்தெந்த குணங்களைச் சுவாசிக்கின்றோமோ, இவை அனைத்தும் நம் உடலுக்குள் அது உருவாகின்றது.

தீய உணர்வுகளை நாம் சுவாசிக்க நேர்ந்தால், அவை நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுடன் மோதும் பொழுது, அதற்கு பதட்டமும் பயமும் ஏற்படுகின்றது.

நாம் அடிக்கடி கெட்டதையே சுவாசித்துக் கொண்டிருந்தால் உடலில் நோய் வருகின்றது.

சலிப்படையும் பொழுது நாம் மனம் சோர்வடைந்து பேசுகிறோம். ஒரு நெடியான வாசனையைக் கண்டவுடன் உடலுக்குள் அந்த நெடியின் தன்மை வருகின்றது.

இதைப் போலத்தான், நாம் சுவாசிப்பது ஒவ்வொன்றும் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்குள் அது இணைந்தவுடன் அது நம் உடலுடன் சேர்ந்து இயக்கப்படும் பொழுது, சிறுகச் சிறுக மாசுபடும் நிலை வருகின்றது.

நாம் வாழ்க்கையிலே பல அசிங்கமான நிலைகளைச் சந்திக்கிறோம், அடித்தவனைப் பார்க்கிறோ, அடி வாங்கியவனைப் பார்க்கிறோம். அடிக்கடி சண்டை போடுபவர்களைப் பார்த்தால், நாமும் சண்டை போடுவதற்குத் தயாராகின்றோம்.

ஒருவன் பயத்தினுடைய நிலைகளில் இருப்பதை நாம் அடிக்கடி பார்த்தால் அந்த உணர்வுகள் நமக்குள் பய அலைகளைத் தோற்றுவித்துவிடும்..

குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் குழம்பை நாம் வெறுக்கின்றோம். அதே போன்று காரம் அதிகமாகிவிட்டால் அதையும் நாம் வெறுக்கின்றோம். இதைப் போல, நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஆயிரம் கோடி நமக்குள் இருக்கின்றது.

நாம் தவறு செய்யவில்லை என்றாலும். பிறர் செய்யும் தவறின் நிலைகளை நாம் பார்க்காமல் இருக்கமுடியாது. நாம் நல்லது கெட்டது என்று பார்த்தாலும் அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் வந்துசேர்ந்துவிடும்.

அவ்வாறு நம் உடலுக்குள் சேரும் பொழுது, அன்றைய தினத்தில் எதையெல்லாம் பார்த்தோமோ அதற்குத் தகுந்த மாதிரித்தான் அன்றைய தினம் நமது செயலும் இருக்கும்.

உயிர் உடலை விட்டு எதனால் பிரிகின்றது?

இரவிலே கண் வலி, காதில் வலி போன்ற நிலைகள் வரக் காரணமாகின்றது. ஒரு மோட்டாரில் கரண்ட் அதிகமாகிவிட்டால் அது சூடாகின்றது.

அதைப் போல கோபம், ஆத்திரம், பயம் போன்ற இந்த உணர்வுகளை நாம் அடிக்கடி இழுக்கும் பொழுது, ஒலிகளை சமமாக ஊட்டக் கூடிய அந்தக் காதுகளும் சூடாகி தேய்மானமாகி விடுகின்றது. அதனுடைய காந்தசக்தி குறைந்துவிடுகின்றது.

இதைப் போல சோர்வு, சஞ்சலம் போன்ற உணர்வுகளை அதிகமாக எடுக்கும் பொழுது கண்களில் இருக்கக்கூடிய கருவிழிகள் பலவீனமாகி, அதனுடைய இயக்கச் சக்தியினுடைய நிலைகள் குறைவாகும்.

நம் உடலில் நாம் சுவாசிக்கும் உணர்வின் நிலைகள் நம் உடலைச் சுற்றி இருக்கும் மேக்னட், அதாவது எலும்புக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளில் நம் உடலுக்குள் கரண்டை உற்பத்தி செய்யக்கூடிய காந்தம் இருந்தால்தான் அந்த உயிரே துடிக்கும்.

காந்தம் குறைவாகிவிட்டால், இந்த உயிருக்குள் இருக்கக்கூடிய துடிப்பு கொண்டு உடலை விட்டு வெளியிலே இருக்கக்கூடிய காந்தத்தை இழுத்துக் கொள்ளும். இந்த உடலிலே விளைய. வைத்துவிடும். அதுதான் மரணம் என்பது.

உடலில் அந்தத் துடிப்பின் நிலைகள் காந்தம் என்று குறைவாகின்றதோ அன்று உயிராத்மா வெளியிலே சென்றுவிடும்.

“எல்லாமே அவன் செயல் தான்”

God exists

1.கோவிலுனுடைய தத்துவம் என்ன?

1.வெளிச்சத்தைக் காட்டும் பொழுதுதான் பொருள் தெரிகின்றது. ஆகவே, தெரிந்து உணர்வது வெளிச்சம். அதுதான் தீப ஆராதனை.
2.அந்த மணத்தை நுகரவேண்டும் என்பது துவைதம்.
3.சுவாசிப்பது அத்வைதம்.
4.பார்ப்பது சிவம்.
5.நாம் அதிலிருந்து எடுப்பது சக்தி.
6.சுவாசிக்கும் பொழுது சக்தியின் இயக்கம்.
7.என் உடலுடன் சேர்க்கும் பொழுது சிவம். இதுதான் “ஓம் நமசிவாய, சிவாய நம் ஓம்”.

ஓ…ம் என்பது சக்தி

சக்தியின் உணர்வின் வேகம் எதுவோ, அந்த உணர்வின் தன்மை எனக்குள் ஆகும் பொழுது, அந்த சக்தியின் நிலைகள் எனக்குள் உடலாக மாறுகின்றது – சிவம், “ஓம் நமச் சிவாய” நமதாக மாறுகின்றது.

நாம் எந்த குணத்தை எண்ணுகின்றோமோ, அது உயிரிலே பட்டவுடன் “ஓங்காரம்” இயக்கம். அந்த உணர்வின் அலைகள் நமக்குள் சேர்ந்து, அது உமிழ்நீராக மாறி, நம் உடலுடன் சேர்க்கப்படும் பொழுது, “ஐக்கிய சிவம்” என்று இவ்வாறு பொருள்பட, அன்று சிவ சக்தியின் தன்மையை மெய்ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

துவைதம் என்பது, பொருள் எதுவோ அந்த உணர்வின் தன்மையை நமக்குள் கூட்ட வேண்டும். கோவிலிலே, அந்த மலரின் மணத்தை நாம் நுகரும் .பொழுது, அந்த மலரின் உணர்வின் மணம் “ஈசன்”.

அந்த மலரின் உணர்வின் சத்து உடலுடன் சேர்க்கப்படும் பொழுது, சிவனுக்கு “அமுது”. ஆக, ஈசனுக்கு மணம், இங்கே சிவனுக்கு அமுது.

கண் புலனறிவுக்கு, உடல், மற்றவைகளுக்கும் அந்த உணர்வின் இயக்கமே, நாம் அறிந்துணர்ந்து செயல்படும் தன்மைகள்.

இதைத்தான் ஒவ்வொரு பாகமாகப் பிரிக்கப்பட்டு உடலின் உறுப்பின் தன்மை செயலாக்கும் பொழுது அதற்கு தெய்வ வடிவைக் கொடுத்துஆற்றல்மிக்க பெயரைக் கொடுத்து வைத்தான் ஞானி.

ஒரு இயந்திரத்தை நாம் பார்க்கும் பொழுது, இது பல் சக்கரம், (gear, pinion, sprocket, chain) இது இன்னென்ன என்று பெயர் வைக்கிறோம். இதைப் போன்று, நம் உடலின் உறுப்பின் தன்மையின் செயலாக்கத்திற்கு, சக்தியின் நிலையும், ஒவ்வொரு குணத்தின் ஆற்றலினுடைய நிலைகளுக்கு அன்று மெய்ஞானிகள் பெயர் வைத்தார்கள்.

2. ஆண்டவன் காணிக்கை கேட்கின்றானா?

ஆனால், இதை விடுத்துவிட்டு தெய்வம் எங்கேயோ இருக்கிறது என்ற நிலைகளில், மொட்டை போடுகின்றேன், அதைக் கொடுக்கின்றேன், இதைக் கொடுக்கின்றேன் என்று நமக்குள் வேண்டி வருத்தி, நம்மையறியாத நிலைகளில் நம்மைத் தாழ்த்திக் கொள்கின்றோம்.

முடிகொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, முடி கொடுக்கப் போக முடியவில்லை என்றால், ஜோசியக்காரனிடம் செல்கிறார்கள்.
1.“ஆண்டவனுக்கு நீ வேண்டியிருக்கின்றாய்… காணிக்கையைச் செலுத்தவில்லை,
2.அதனால்தான் துன்பம்” என்பார்.
3.ஆண்டவனுக்குக் காணிக்கை செலுத்தாதினால், துன்பத்தை உண்டாக்கி உன்னை வரவழைக்கின்றார் என்பார்.

இவைகளெல்லாம், நமக்கு வேண்டாத வேலைகள். ஆக, ஆண்டவன் என்பது யார்?

3.“எல்லாமே அவன் செயல் தான்” என்றால் என்ன அர்த்தம்?

நம் உயிர்தான் நம்மை ஆண்டுகொண்டிருக்கின்றது. ஆனால், அவனன்றி ஒரு அணுவும் அசையாது. இந்த உயிர்” உடலில் இல்லையென்றால் எது அசையும்?

நாம் என்ன செய்கின்றோம்? அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்று விண்ணைக் காட்டுகின்றோம்.

“அவனன்றி அணுவும் அசையாது” என்று சுருக்கமாகச் சொற்றொடர்களைச் சொன்னால், நாம் வானத்தைக் காட்டி, “எல்லாமே அவன்தான்” என்கிறோம்.

அவன் உடலுக்குள் இருக்கின்றான். இங்கே உடலை இயக்குகின்றான் என்ற நிலையை, அன்று ஞானிகள் உணர்த்தினார்கள்.

அன்று அண்டத்தினுடைய நிலைகள் செயலாக்கினாலும், அண்டத்தினுடைய நிலைகள் பிண்டத்திலிருந்து உணர்வின் இயக்கமாக இயங்குகின்றது. நினைவு கொண்டு அது இயக்குகின்றது.

அந்த உணர்வு சந்தர்ப்பத்தாலே இயங்குகின்றது. அதைச் சந்தர்ப்பத்தாலேதான் இயக்க முடியும். அதே சமயத்தில், சந்தர்ப்பத்தை ஊட்டும் தன்மை மனிதனுக்கு உண்டு. சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், அது (அண்டம்) சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது. அது போகும் பாதையில் சந்தர்ப்பங்கள், சந்திக்கும் நிலையில்தான் உருமாற்றம், இன மாற்றம், மற்ற மாற்றம் எல்லாமே.

நம்முடைய ஆறாவது அறிவின் தன்மை கொண்டு, எந்த சந்தர்ப்பத்திலும் நமக்கு வேண்டியதை நம் உடலுக்குள் மாற்றிக் கொள்ள முடியும். ஆக, இத்தகைய ஆற்றல், இந்தப் பிண்டத்திற்குள் (நம் உடலுக்குள்) இருக்கின்றது.

அன்று மெய்ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மையை, தெய்வச் சிலையாகக் காட்டி, அந்த மணத்தை எடு என்று, அந்த குணத்தைக் கதையாகக் காட்டி உன் உணர்வுக்குள் சேர்த்துக் கொள் என்றார்கள். இந்தத் தெய்வம் நல்லது செய்கிறதென்றால், அந்த குணத்தை நுகர்ந்து, நல்லது செய்யக்கூடிய நிலைகளை எடு என்றார்கள்.

ஆகவே, அந்த ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி, நாம் அனைவருமே அந்த தெய்வ குணத்தைப் பெறுவோம், தெய்வ சக்தியை வளர்ப்போம்,