வேதனை தீரவில்லையே என்று எண்ணக் கூடாது…! வேதனைகளிலிருந்து முழுவதும் விடுபட வேண்டும் என்ற எண்ணத்தை முன்னணியில் வைத்துத் தியானிக்க வேண்டும்

%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d

வேதனை தீரவில்லையே என்று எண்ணக் கூடாது…! வேதனைகளிலிருந்து முழுவதும் விடுபட வேண்டும் என்ற எண்ணத்தை முன்னணியில் வைத்துத் தியானிக்க வேண்டும்

 

பல காலம் எண்ணி பல காலத்திற்குப் பின் தான் மனிதருக்குள் நோய் என்ற விளைவே சாதாரணமாக வருகின்றது. ஏனென்றால்
1.நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாமல் தீமையான நிலைகளைப் பார்க்க நேருகின்றது.
2,அதனால் தீமை செய்யும் உணர்வுகளின் அணுக்கள் நம்முள் பெருகிவிடுகின்றது.

அந்த அணுக்கள் வளர்ச்சியான பின் அதனின் மலங்கள் நமக்குள் நல்ல அணுக்களில் உள்ள மலங்களில் படப்படும் பொழுதுதான் இந்தத் தசைகள் கரைகின்றது.

அப்பொழுது நம் உடலில் வலிகள் வருகின்றது… வேதனையாகின்றது… நோயாகின்றது.

வலித்தவுடன் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி அந்த உணர்வை வலுக்கொண்டு நமக்குள் கவர்தல் வேண்டும்.

இப்படி நம் உடலில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்கச் செய்ய வேண்டும். ஆனால் சிலர் என்ன சொல்வார்கள்…?
1.இப்படித்தான் நான் எண்ணினேன்.
2.,இன்னும் வலி குறையவில்லை… வலி நிற்கவில்லையே…! என்பார்கள்.
3.வலி நிற்கவில்லையே…! என்ற உணர்வைச் சேர்த்தால் என்ன நடக்கும்…?

ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்போது ஒரு இடத்தில் (நிறுத்திய பின்)
1.“FULL STOP” என்று புரோகிராம் செய்து வைத்தால்
2.அந்த இடம் வந்தவுடன் தன்னாலே நின்றுவிடும்.

அதைப் போன்றுதான் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்… வலி நீங்க வேண்டும்… என்ற நிலைக்கு வந்தால் நாம் தொடர்ந்து இதைக் கூட்டும்போது அதனுடைய பருவம் வரும் பொழுது “நிச்சயம் வலி நிற்கும்”.

அதற்குள் நான் “ஐய்யய்யோ… அம்மம்மா… இன்னும் நிற்கவில்லையே…!” என்று எண்ணிக் கொண்டு என்ன செய்வார்கள்…?
1.அந்த மகரிஷிகளை எண்ணி “வலி நிற்கவில்லையே…
2.வலி நிற்கவில்லையே…” என்று இப்படித்தான் மாற்றுகின்றார்கள்.

அருள் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும், அந்தத் தசைப் பாகம் உள்ள அணுக்களில் அருள் ஞானம் விளைய வேண்டும் என்று இப்படித்தான் அதைக் கலக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் நாம் தீமையைப் பார்த்த உணர்வுகள் அதன் உணர்வு கொண்டு கருவாகி சுழன்று வரப்படும் பொழுது தேங்கிய இடத்தில் வெடித்த உணர்வுகள் அணுவாக உருவாகின்றது.

உருவான அந்த அணு தன் உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி அது உணவுக்காக ஏங்கும் நிலைகளில் அது தன் இனத்தைப் பெருக்குகின்றது. தன் இனத்தைப் பெருக்கும் போது நம் உடலில் ஏற்கனவே உருவான அணுக்களுக்கு எதிர்நிலை ஆகின்றது.

அப்பொழுது நம் நல்ல அணுக்களின் செயலாக்கங்கள் குறைகின்றது. அதனால் அது சோர்வடைகின்றது. அதனால் நம் உடலில் வேதனையும் வலியும் ஏற்படுகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

இதையெல்லாம் அறிந்துணர்ந்த நீங்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் எதைச் செய்யவேண்டும் என்பதைச் சற்று சிந்தியுங்கள். “எதை நம்முள் முன்னிலைப்படுத்த வேண்டும்..?” என்ற நிலைக்கு வாருங்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை முன்னிலைப்படுத்தி
2.உடலுக்குள் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்குள்ளும் அதைச் சேர்த்தோம் என்றால்
3.வலியோ… வேதனையோ… நோயோ… எதுவாக இருந்தாலும் அதனின் வீரியத்தை அடக்கி அதைத் தணித்து நம்மை நலம் பெறச் செய்யும்.

தீமைகளை அகற்றிடும் வல்லமை நிச்சயம் நீங்கள் பெற முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!

நொச்சி இலையின் பயன்கள் (தபோவனம்)

நொச்சி மரத்தை உங்கள் வீடுகளிலேயும், அக்கம்பக்கம் உள்ள வீடுகளிலும் வளருங்கள்.

தபோவனத்திற்கு வரும் பொழுது நோச்சிக் குச்சியை எடுத்துக் கொண்டு போய் ஊன்றி உங்கள் வீடுகளில் வளருங்கள். ஏனென்றால், அந்த மரத்தில் தியானம் பண்ணி வைத்திருக்கின்றோம்.

அந்த நொச்சி இலையை நான்கு அல்லது ஐந்தைப் போட்டு, நன்றாகக் காய்ச்சி அந்தச் சாற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இரவு படுக்கப்போகும் பொழுது அரை டம்ளர் குடியுங்கள். இருதயத்தில் இருக்கக்கூடிய, நுரையீரலில் இருக்கக்கூடிய சளி எல்லாம் கட்டி கட்டியாக வெளியே வந்துவிடும்.

காய்ச்சல் வந்தால் நொச்சி இலையைச் சாப்பிட்டால் அந்த வைரஸ் கிருமிகள் அழிந்துவிடும் உஷ்ணம் அதிகம் இருப்பதால் நொச்சி இலையைச் சாப்பிட்டால் அடிக்கடி வரக்கூடிய காய்ச்சலைத் தடுக்கும்.

அதே போன்று தும்மலுக்கு, மூக்கில் தோடர்ந்து தண்ணீர் வருபவர்களுக்கு வேறு ஒன்றும் வேண்டியதில்லை. மஞ்சள், நொச்சி இலை, வேப்பிலை பச்சையாகப் போட்டு புகை போடுங்கள், அதை நுகருங்கள். சரியாகப் போகும்.

ஆஸ்த்மாவிற்கு, சரவாங்கி நோய்க்கு, வாத நோய் எல்லாவற்றுக்குமே இந்த நொச்சி இலையைச் சாப்பிட்டாலே சரியாகும்.
தபோவனத்திலிருந்து நொச்சி மரக்குச்சியை வீட்டில் நட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நொச்சி மரத்திலே சில சக்திகளைப் பாய்ச்சி வைத்திருக்கின்றேன். அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இறந்தவர்களின் ஆன்மாக்களைச் சாந்தி அடையச் செய்ய வேண்டிய முறை

இறந்தவர்களின் ஆன்மாக்களைச் சாந்தி அடையச் செய்ய வேண்டிய முறை…? 

பொதுவாக இன்று குடும்பத்தில் உடலை விட்டு ஒருவர் பிரிந்தால் என்ன செய்வார்கள்?

1.நேற்று வரை நன்றாக இருந்தீர்கள்.
2.நன்றாகப் பேசிக் கொண்டிருந்தீர்கள்
3.எங்களுக்கெல்லாம் சம்பாரித்துக் கொடுத்தீர்கள்,
4.”இன்று இப்படிப் போய்விட்டீர்கள்…!” என்று சொல்லி எண்ணி எண்ணி அழுவார்கள்.

அதாவது சொந்தம் அதிகமாக இருந்ததால் இப்படி அழுவார்கள். இப்படிச் செய்தால் அந்த உணர்வின் தன்மை என்ன ஆகும்?

1.இவ்வளவு நாள் நீ கஷ்டப்பட்டாய்… இன்னும் நீ கஷ்டப்படு…!
2.என் உடலுக்குள் வந்து என்னையும் கஷ்டப்படுத்து…!
ஆக மீண்டும் இந்த நரகத்துக்குத்தான் அழைக்கிறார்கள்.

பாசத்தால் அவர்களை எண்ணி ஏங்கினால் உடலைவிட்டுப் பிரிந்த அந்த ஆன்மா – நாம் உடலுடன் இருப்பதல் நம் ஈர்ப்புக்குள் வந்துவிடும். நம் இரத்தத்தில் இரத்த நாளங்களில் அந்த ஆன்மா சுழலத் தொடங்கும்.

சிறிது நாள்களுக்குப் பின் உங்களுக்குக் கை கால குடைச்சல் வரும் அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் பட்ட துன்பங்களையும் நோய்களையும் இரத்தத்திலிருக்கும் அந்த ஆன்மா நம் உடலுக்குள் பெருக்கத் தொடங்கும்.

கடைசியில் நாமும் கடுமையான வேதனைப்பட்டுத் தான் உடலை விட்டுப் பிரிய நேரும். இதைத் தான் நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் நமக்கு ஞானிகள் காட்டிய அருள் வழி… அந்த மெய் வழி எது…?

நல்ல வழியில் வாழ்ந்து எங்களுக்காகப் பல துன்பங்களையும் பட்டு எங்களுக்கு வாழ வழி செய்தீர்கள்.
1.இனிமேல் நீங்கள் என்றுமே துன்பமே இல்லாத
2.பேரின்ப பேருவாழ்வு என்ற பேரானந்த நிலை அடைய வேண்டும்.
3.ஏகாந்த நிலை என்ற உயிருடன் ஒன்றி அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும் என்று அவர்களை உந்தித் தள்ள வேண்டும்.

எங்கே…?

துருவ நட்சத்திரத்தின் ஈர்பபு வட்டத்திற்குள் உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மாக்களைச் செலுத்த வேண்டும். இதுதான் ஞானிகள் சொன்ன முறை.

யாராவது நாம் இப்படிச் செய்கிறோமா…? சிந்தித்துப் பாருங்கள்.

ஆனால் இதெல்லாம் மாறி இன்று மந்திரங்களைச் சொல்லி சாங்கிய சாஸ்திரங்களைச் செய்து மீண்டும் ஒரு உடல் பெறும் நிலைக்குத்தான் செயல்படுத்துகிறோம்.

இப்படிச் செய்யவில்லை என்றால் தோஷம் என்று சொல்லி ஞானிகள் காட்டிய அந்த மெய் வழிகளையே பெறவிடாதபடி செய்துவிட்டார்கள் அன்று ஆண்ட அரசர்கள்.

இன்றும் நாம் அதையே பிடித்துக் கொண்டு நல்லதை தேடிக் கொண்டேயுள்ளோம். அதைப் பெறும் தகுதியையும் இழந்திருக்கின்றோம்.

நீங்கள் இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடவேண்டும்.

குடும்பத்தில் ஒருவர் உடலை விட்டுப் பிரிந்தால் எல்லோரும் ஒன்று சேர்த்து காலை துருவ தியானத்தில் அவர்களை நம் குருநாதர் காட்டிய அருள்வழியில் விண் செலுத்திப் பழக வேண்டும்.

அவர்களை விண் செலுத்தினால் பரம்பரை நோய் என்ற நிலைகள் நமக்குள் வராது. அதே சமயத்தில் அந்த ஆன்மாவும் ஒளியின் சரீரம் பெறுகிறது.

ஒரு 48 நாள்கள் குடும்பத்திலுள்ளோர் வேறு வேறு ஊர்களிலிருந்தாலும் ஒரே நேரத்தில் எல்லோரும் அமர்ந்து ஒரு 10 நிமிடமாவது தியானம் செய்து அந்த ஆன்மாக்களை விண் செலுத்தினால் நீங்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழமுடியும்.

உங்கள் குடும்பத்தில் அறியாது வரும் சாப வினைகள் தீய வினைகளிலிருந்து எளிதில் விடுபட முடியும். இந்த உடலுக்குப் பின் நாமும் நம் முன்னோர்கள் சென்ற அந்த எல்லையை எளிதில் அடைய முடியும்.

“சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்” என்ற எண்ணமே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக இருத்தல் வேண்டும்.

மனிதனுடய கடைசி எல்லை அது தான்.

அதைத்தான் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.

நினைவு நாள் என்றால் என்ன…? – விளக்கம்

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு நினைவு நாள் எப்படிக் கொண்டாட வேண்டும்…?

பிசாசைக் கண்டு பயந்த “குடுகுடுப்பைக்காரனின் உண்மை நிலை”

Image

Beware of Black Magic

பிசாசைக் கண்டு பயந்த “குடுகுடுப்பைக்காரனின் உண்மை நிலை”

 

“நல்ல காலம் வருகின்றது, நல்ல காலம் வருகின்றது” என்று சொல்லி குடுகுடுப்பையை அடித்துக் கொண்டு நடு இரவு வருவார்கள்

அப்படி வரும் பொழுது, உங்களுக்குச் செய்வினை செய்திருக்கிறார்கள், தோஷம் இருக்கிறது என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வருவான்.

ஒரு சமயம் குருநாதர் என்ன செய்தார்? ஒரு கம்பளித் துணியை என் உடலில் சுற்றிக் கொள்ளச் செய்தார். மரத்தின் மேல் ஏறி நின்று கொள் என்றார்.

“குடுகுடுப்பைக்காரன் வரும் பொழுது, அப்படியே மரத்திலிருந்து குதிடா” என்றார்.

குடுகுடுப்பைக்காரன் வரும் பொழுது அதே மாதிரி சொல்லிக் கொண்டு நான் குதித்தேன்.

அவன் என்ன செய்தான்?

“கத்துகின்றான்.., சீ பிசாசு, சீ பிசாசு போ.., போ..,” என்று ஓடுகின்றான். கையிலிருந்த பொருளை எல்லாம் போட்டுவிட்டு

அப்படியே கிடு கிடு என்று நடுக்கமாகி, கீழே மயக்கம் போட்டு விழுந்துவிட்டான்.

அப்புறம் மறுநாள் அதே இடத்திற்குச் செல்லச் சொன்னார் குருநாதர். ஒன்றும் தெரியாத மாதிரி குடுகுடுப்பைக்காரனிடம் “என்னப்பா..,” என்று கேட்டேன்.

“இந்த ஊரில் பெரிய பிசாசு இருக்கின்றது” என்று பிசாசு ஓட்டுபவன் சொல்கின்றான். அதனால், இந்த ஊருக்குள் வருவது மிகவும் ஆபத்தானது. இந்த ஊருக்குள் நான் இனிமேல் வரவே மாட்டேன் என்றான்.

ஆக, குடுகுடுப்பைக்காரனிடம் என்ன இருக்கிறது? அவனுக்கு முன்னால் குதிக்கும் பொழுது எதெல்லாம் அவனுக்குள் இயக்குகின்றது? என்ற இந்த உண்மைகளை அறிவதற்காக வேண்டி குருநாதர் எம்மை இந்த வேஷம் போடச் சொன்னார்.

குருநாதர் பிறகு என்ன செய்தார்? இந்த விபூதியைக் கொடுத்து இந்த மாதிரிச் செய்து குடுகுடுப்பைக்காரனைக் காப்பாற்றிவிடு, இதே பயம் வந்தது என்றால் செத்துப் போவான், இந்தப் பாவத்தை நீ ஏற்றுக் கொள்ளாதே, கொண்டு போய் கொடுத்து வா என்று எம்மிடம் சொன்னார்.

அதே மாதிரி அவனிடம் சொன்னவுடன், சாமி என்னைக் காப்பாற்றினீர்கள். இப்பொழுதுதான் எனக்குத் தெளிவாகின்றது என்றான்.

இதெல்லாம் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஒவ்வொரு நிமிடமும் மனிதர்கள் எப்படியெல்லாம் செய்கின்றார்கள்? மனித உடலிலிருந்து மந்திரத்தால் கவர்ந்து என்னென்ன வேலையெல்லாம் செய்கின்றார்கள் என்று உணர்த்துகின்றார்.