அருந்ததியும் வசிஷ்டரும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த உடலில் இருக்கப்படும் போது இரு மனமும் ஒன்றாகி ஒரு மனதுடன் உணர்வின் ஒளியாகி என்றும் நிலையான சரீரத்தைப் பெற்றுள்ளார்கள்.
நாம் தியானம் இருப்பது போன்றே தான் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளியை அவர்கள் இருவருமே பெற்று ஒருவருக்கொருவர் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வை வளர்த்து அதன் வழிகளிலே இரு சரீரமும் ஒரு சரீரமாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
1.அருந்ததி வசிஷ்டர் என்ற இந்த இரு நட்சத்திரங்கள்
2.ஒன்றின் பிணைப்புடன் ஒன்று சுழன்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
கணவன் மனைவி என்ற இரு சரீரங்களாக இருந்தாலும் இந்த உணர்வை ஒத்த அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளை நாம் எண்ணி ஏங்கும்போது இரு உடலும் ஒரே உணர்வாகக் கலந்து என்றும் நிலையான நிலைகளைப் பெறும்.
கணவனும் மனைவியும் இருவரும் சேரும் பொழுது குழந்தை எப்படிப் பிறக்கின்றதோ அதைப்போல
1.இரு மனமும் ஒன்றாகும் போது ஒரு சரீரமாகி
2.விண்ணிலிருந்து வரக்கூடிய சக்தியை சிவ சக்தியாகக் கவர்ந்து
3.தீய வினைகளை நீக்கி விஷத்தை ஒடுக்கி ஒளியின் சரீரமாக அந்த உருவின் தன்மையை கருவாக உருப் பெற செய்து
4.மெய் வழியில் என்றுமே ஒளி சுடராகத் திகழ்ந்திருக்கும்.
இந்த மனித வாழ்க்கையில் எவ்வளவு மகிழ்ந்து இருந்தோமோ அந்த மகிழ்ச்சி என்றும் அழியாத நிலைகளில் என்றும் பதினாறு என்ற நிலைகள் கொண்டு
1.இனி ஒரு சரீரம் எடுக்காது
2.ஒளி சரீரத்தையே நிலையான சரீரமாக பெற்றுச் செல்லும் நிலை வருகின்றது.
இந்த மனித உடலில் இருக்கும் போதே கணவன் மனைவி இருவரும் இந்தத் தியானத்தின் மூலமாக அந்த இணை பிரியாத நிலைகளைக் கொண்டு வர வேண்டும்.
கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும். மனைவிக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்.
ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் நூறு முறையாவது இது போன்று கணவனும் மனைவியும் எண்ணினால் அந்த உணர்வுகள் ஓங்கி வளர இது ஏதுவாகும்.
1.எந்த உண்மைகளைக் காண வேண்டும் என்றாலும்
2.எந்த வழிகளில் நன்மை பெற வேண்டும் என்றாலும்
3.எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்றாலும்
4.கணவன் மனைவி இருவரும் ஒருமித்த நிலைகள் கொண்டு எண்ணிச் செயல்படுத்திடல் வேண்டும்.
எங்கள் (கணவன் மனைவி) பார்வை அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். எங்களைப் பார்போருக்கு நல்ல மனம் வர வேண்டும்… நல்ல எண்ணங்கள் வர வேண்டும்… என்று எண்ணி வலு ஏற்றிக் கொண்டால்
1.நமக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எத்தகைய நிலைகள் இருந்தாலும்
2.அந்த உணர்வுகள் நமக்குள் புகுந்து நம்மைச் சோர்வடையச் செய்யாத வண்ணம் தடுக்கும்.
இப்படி அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்த்து நமக்குள் அந்த மெய் ஒளியை வளர்க்கும் நிலை வரப்படும் பொழுது நம்மைப் பார்போர் நம் மீது கொண்ட வெறுப்பு சிறுகச் சிறுகத் தணிந்து நம்முடன் அணுகும் நிலையும்… அவர்களை அறியாத இருள்களை நீக்கும் நிலையும் பெறும்….!
ஆகவே உங்களை நீங்கள் நம்ப வேண்டும். ஏனென்றால் நீங்கள் எண்ணிய உணர்வுகளை
1.இந்த உடலிலே உயிர் தான் அணைக்கின்றது… இயக்குகின்றது… வளர்க்கின்றது…!
2.வளர்ந்த நிலையைத் தன்னுடன் அணைத்துக் கொள்கின்றது.
3.உடலை விட்டுச் சென்ற பின் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மைக்கொப்ப அடுத்த உடலாக மாற்றுகின்றது.
ஆகையினால் இந்த உண்மையை அறிந்த நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள். உடலைக் கோவிலாக மதித்துப் பழகுங்கள்.
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நுகர்ந்து அறியாது சேர்ந்த இருளைப் போக்கி மெய் வழி செல்ல வேண்டும்… மெய் ஒளியை அடைய வேண்டும் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றேன்.
உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களுக்கு மந்திரத்தைச் சொல்லிச் சாங்கியங்கள் செய்தால் மீண்டும் ஒரு உடலுக்குள் வந்து இயக்கத்தான் செய்யும் – விண்ணுலகம் செல்வதில்லை
மந்திரங்களைச் சொல்லி அதனின் துணை கொண்டு உடலை விட்டுப் பிரிந்தவர்களை மோட்சத்திற்கு அனுப்புகிறோம் என்பார்கள். எந்த மந்திரத்தைக் கேட்டுப் பதிவு செய்து கொண்டமோ இறந்த பின் இதே மந்திரத்தைச் சொன்னால் அவர்கள் நம் ஆன்மாவைக் கைவல்யம் செய்வதற்குத்தான் உதவியாக இருக்கும்.
கைவல்யம் செய்த பின் ஏவலின் தன்மையாக அடுத்தடுத்த உடல்களிலே பாய்ச்சச் செய்து அங்கேயும் நஞ்சின் தன்மை கவரச் செய்து நம்மை விஷப் பூச்சியாக மாற்றும் நிலை தான் வருமே தவிர விண்ணுக்குச் செல்ல முடியாது.
உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை நாம் அனைவரும் சேர்ந்து நஞ்சினை வென்ற அந்த அருள் மகரிஷியின் அருள் வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்தில் இணைத்தால் தான் அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய முடியும்.
எந்த நஞ்சின் உணர்வு கொண்டு இன்று எந்த ஒலிகளை நாம் கேட்டோமோ உடலை விட்டுச் சென்ற பின் அதே ஒலியை எழுப்பினால் போதும். இன்று பார்க்கலாம் நீங்கள்…
1.மாடசாமி அந்தச்சாமி இந்தச் சாமி என்று அருளாடும் போது
2.டுவிங்.. டுவிங்… என்று வாத்தியத்தை வாசிப்பார்கள்.
3.கொல…கொல… என்று குழவை இட்டு ஆட்டை வெட்டிப் பலி இடுவார்கள்.
இப்படிச் செய்து இந்தத் தெய்வம் காக்கும் என்று உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்ட பின் இதனின் உணர்வின் தன்மை கொண்டு அடுத்து இறந்து விட்டால்
1.இதே குழவை இட்டதும்
2.இதே வாத்தியத்தை இசைத்த பின் பற்றுள்ளோர் உடல்களில் இருந்து
3.“நான் வந்துவிட்டேன்டா…! எனக்கு ஏன்டா… போன வாரம் ஆட்டைக் கொடுக்கவில்லை…?
4.ஆடு கொடுக்கவில்லை என்றால் “உன் குடும்பம் என்னாகும்…?” என்று சொல்வார்கள்.
5.மடிந்த மனிதனின் ஆன்மா உடலுக்குள் வந்த பின் இப்படிச் செய்கின்றார்.
எதை இரக்கமற்றுக் கொன்றமோ அதே உணர்வின் தன்மை அருளாடப்படும் போது அவனுக்குள் வந்தால் அவன் உடலையும் இம்சிக்கும் தன்மையே வருகின்றது.
அப்படி ஆடுவோரைப் பாருங்கள். கட்டி உருளும் நிலையும் கடுமையான வேதனையும் படுவார்கள். மற்ற உயிர்களைக் கொல்லும் நிலைகள் வருகின்றது.
என் குடும்பத்தில் கஷ்டம் வந்து விட்டது… உன்னையே நான் அடைகிறேன் என்று பக்தியும் நல்ல ஒழுக்கங்களையும் கொண்ட இந்த ஆன்மாக்கள் உடலை விட்டுச் சென்ற பின் சாந்தம் கொண்ட உணர்வு கொண்ட ஒருவர் உடலுக்குள் வந்து விட்டால் அது ஆடத் தொடங்குகிறது.
முனியப்பன் கோயிலிலே சென்று ஆட்டை வெட்டினால் இதை ஓட்டி விடலாம் என்று அந்த அசுர உணர்வுகள் கொண்ட உணர்வின் தன்மையை அங்கே ஊட்டியபின் அதை அடக்குகின்றது ஒடுக்குகின்றது.
ஆனால் சாந்த நிலையிலிருந்த ஆன்மாவோ அடுத்து ஆட்டையும் மற்றதையும் பலி கேட்கும். இப்படி அந்த வலுவான நிலை கொண்டு இயக்கும் தன்மையாகத்தான் மாறுகின்றது.
கொலைகாரனாக மாற்றி மிருக நிலைகளாக மாற்றும் உணர்வின் தன்மையைத் தான் வளர்த்துக் கொள்ள முடியுமே தவிர ஏனென்றால் இன்னொரு ஆன்மா நமக்குள் இயக்குகின்றது என்ற நிலையை மறந்து விட்டோம்.
குல வழியில் எதை எதைச் செய்தோமோ அதன் உணர்வின் தன்மை கொண்டு இன்னொரு உடலுக்குள் சென்று அருளாடுகின்றது. மீண்டும் அங்கே தேய்பிறையாகின்றது. மீண்டும் மனிதனல்லாத நிலைகள் உருபெறுகின்றது. இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம் விடுபட வேண்டுமா இல்லையா…?
இன்றைய விஞ்ஞான உலகில் ஒவ்வொரு அணு செல்கள் எதனுடன் இணைகின்றது. எதன் நிலைகள் உருமாறுகின்றது என்று தான் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு மெய்ப்பிக்கின்றார்கள்… உணர்த்துகின்றார்கள். ஆனாலும்
1.விஞ்ஞான அறிவு கொண்டு மனித உடலில் உள்ள அங்கங்களைத் தான் மாற்ற மடிகிறது.
2.மனித உணர்வின் தன்மையைப் பிறவியில்லா நிலை அடையச் செய்யும் நிலை விஞ்ஞானத்தில் இல்லை.
3.ஆனால் மெய் ஞானத்தில் உண்டு.
மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்த்து உணர்வின் ஒளிக்கதிராக மாற்றிப் பிறவியில்லா நிலையை நாம் ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.
உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை நாம் அனைவரும் சேர்ந்து நஞ்சினை வென்ற அந்த அருள் மகரிஷியின் அருள் வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்தில் இணைத்து அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.
நம் எல்லை சப்தரிஷி மண்டலம் தான்…! நம்முடைய பாசம் அதன் மீது தான் இருக்க வேண்டும்…!
உதாரணமாக நம் நண்பர் தன் குடும்பத்திற்குள் சண்டையிட்டு அவர்கள் அறியாதபடி மருந்து குடித்தோ அல்லது வேறு ஏதோ ஒரு வகையில் “தற்கொலை செய்து கொள்கிறார்…!” என்று வைத்து கொள்வோம்.
அந்த நண்பரிடத்தில் பாசமாகப் பழகி இருக்கும் போது அந்த நண்பனின் எண்ணம் ஓங்கி இருந்தால் அந்த உயிராத்மா நம் உடலுக்குள் வந்துவிடும். (பிறிதொரு ஆன்மா இல்லாத மனிதரே கூட இல்லை என்று சொல்லலாம்… தெரிந்து கொள்ளுங்கள்..!)
அவர் உயிரோடு இருக்கும் போது என்ன செய்தாரோ அந்த உணர்வின் தன்மை இந்த உடலுக்குள் வந்து அதே நிலையைச் செய்யச் செய்யும். நம்முடைய செயல்களில் தடுமாற்றம் ஆகும்.
நாம் செய்த உதவியின் தன்மையிலே அந்த நண்பன் தன் குடும்பத்தில் தனக்கு இடைஞ்சலாகும் போது
1.“என்னுடைய நண்பன் எனக்கு நன்மை செய்தான்..! என்ற எண்ணத்தில்
2.அவன் மரணமடைவானேயானால் அந்த உயிராத்மா இங்கே வந்து
3,நமக்குப் பல தொல்லைகள் கொடுக்கத் தொடங்குகின்றது.
அதைப் போன்ற நிலைகளில் பிறிதொரு ஆன்மா உடலுக்குள் வந்துவிட்டால் அது வெளியிலே செல்வது மிகக் கடினம். இதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்..?
அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடலில் உள்ள அனைத்து ஜீவாத்மாக்களும் பெற வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது அதிகமாக இந்த எண்ணத்தை நாம் எடுத்துக் கொண்டோம் என்றால் நம் உடலுக்குள் இன்னொரு ஆத்மா இருந்தாலும் அதனின் செயலை அடக்க முடியும்.
விருப்பு வெறுப்பு என்ற நிலைகளில் அன்பின் காரணமாகவும் வெறுப்பின் காரணமாகவும் எல்லோருடனும் தான் நாம் பழகி இருக்கிறோம்.
இதை போல ஆத்மாக்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின்
1.கோபக்காரர் இரண்டு பேர் இருந்தால் கோபமான உணர்வு இரண்டும் ஒன்று சேரும் போது
2.இதைப் பிரித்துக் காண முடியாது.
முதலில் கொஞ்சக் கோபக்காரராக இருப்பார். ஆனால் அந்த வெறுப்பின் தன்மை ஓங்கி வளர்ந்து இன்னொரு ஆத்மாவின் நிலைகள் வந்த பின் “மிகுந்த கோபக்காரராக” மாறிச் செயல்படத் தொடங்குவார்.
நம்மை அறியாமலேயே நம்மை ஆட்டிப் படைக்கும் இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீட்டுக் கொள்ள ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1.தவறு செய்யாமலேயே பிறிதொரு ஆத்மா நமக்குள் வந்துவிடுகிறது.
2.நல்ல ஆத்மா உடலுக்குள் வந்தாலும் வேதனையாகின்றது.
3.ஏனென்றால் அவர்களும் வேதனையோடு தான் இறக்கின்றார்கள்.
சரியான வளர்ச்சி இல்லாமல் இறந்த ஆத்மாக்கள் நம் உடலுக்குள் வந்தால் அவர்கள் உடலில் எந்தக் குணங்களை விளைவித்துக் கொண்டார்களோ அதன் நிலைகளில் நம் உடல்களில் செயல்படுத்தி விடுகின்றது.
அதற்காக வேண்டித்தான் பௌர்ணமி தியானத்தை ஏற்படுத்தி உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கும் பழக்கத்தை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.
அதன் மூலம் நீங்கள் சப்தரிஷி மண்டலத்துடன் உங்களுக்கு நேரடித் தொடர்பு ஏற்படுகின்றது. அந்தத் தொடர்பின் மூலம் மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்தி நீங்கள் இந்தத் தியானம் செய்யச் செய்யச் செய்ய….
1.நமக்குள் இன்னொரு ஆத்மா இருந்தாலும் (அல்லது வந்தாலும்)
2.நம்முடைய சக்தி ஓங்கி வளர்ந்து
3.உடலில் இருக்கக்கூடிய இன்னொரு ஆத்மாவுடைய செயல்களைத் தடைபடுத்திவிடும்.
எந்தச் சப்தரிஷி மண்டலத்தை எண்ணி நாம் மகரிஷிகளின் அருள் சக்திகளை இந்த உடலுக்குள் சேர்த்துச் சேர்த்து விளைய வைத்துக் கொண்டோமோ இறந்த பின் நம் உயிராத்மா விண்ணை நோக்கிச் சென்று நேரடியாக அந்தச் சப்தரிஷி மண்டல ஒளிக் கடலில் கலக்கின்றோம்.
நம்முடைய குலதெய்வங்களின் உயிராத்மாக்களை “விண்ணின் திருக்கடலான… ஒளிக் கடலிலே.. இணைக்கச் செய்ய வேண்டும்…!”
நம்முடைய குலதெய்வங்களைப் பக்தி கொண்டு பூஜித்தாலும் அந்த உயிராத்மாக்கள் நமக்குள் ஈர்க்கப்பட்டு நம் உடலுக்குள் செலுத்தப்பட்டு அவர்களை “அருளாடச் செய்து விடுகின்றோம்….!”
அதைப் போன்று இல்லாதபடி
1.குலதெய்வங்களாக இருக்கும் குடும்பப் பற்று கொண்ட அந்த உயிராத்மாக்களை
2.நாம் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்கச் செய்து
3.அங்கே அழியாத ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.
குலதெய்வங்கள் அனைவரும் அங்கே அந்த ஒளிக் கடலில் இணைந்து விட்டால் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நாம் ஏங்கும் பொழுது அந்த அருளாற்றல் நமக்கு எளிதில் கிடைக்கும்.
மனித வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்கள் அனைத்தையும் போக்கும் சக்தியைப் பெறுவதற்கு நாம் விண் செலுத்திய மூதாதையர்களின் உயிராத்மாக்கள் பெரும் உதவியாக இருப்பார்கள்.
குலதெய்வங்களின் உணர்வுகள் நமக்குள் இருப்பதால் அதனின் துனை கொண்டு அவரவர் குடும்பத்தைச் சார்ந்த உயிராத்மாக்களை எளிதில் விண் செலுத்தலாம்.
ஆகவே ஏக காலத்தில் எண்ணி… ஒளி அலைகளாக ஒளி வெள்ளங்களாக நாம் அனைவரும் திரண்டு…! உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிராத்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.
சப்தரிஷி மண்டலங்களின் சக்தியை நாம் தியானித்து அந்த ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு
1.அந்த எடையற்ற உயிராத்மாக்களை
2.விண்ணின் திருக்கடலான அந்த ஒளிக் கடலிலே கலக்கச் செய்ய வேண்டும்.
சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்மிக்க சக்தி அவர்களுக்கு உணவாகி அந்த உணர்வின் ஆற்றல் பெருக அவர்கள் ஒளிச் சரீரம் பெற ஏதுவாகும்.
குலதெய்வங்களை விண்ணிலே செலுத்திய பின் நாம் இந்த உடலை விட்டுச் சென்றாலும் அந்த உணர்வின் அலைத் தொடரிலேயே நம் எண்ணங்கள் இருந்து அந்த நிலைகளை நாமும் பெற முடியும். இது தான் விஜய தசமி.
அதாவது உயிர் என்று விண்ணிலே ஒளியாகத் தோன்றியதோ பூமிக்குள் விஜயம் செய்த பின் அந்த உணர்வாலே பல உடல்கள் பெற்று இன்று மனிதனாக வளர்ந்துள்ளோம்.
மனிதனான பின் நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி சிருஷ்டிக்கும் தன்மையாக அழியா ஒளிச் சரீரம் பெறுவதற்கே இந்தத் தவமும் தியானமும்.
மனிதனாக வாழும் நிலையில் இந்த வாழ்க்கைக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்று இதைத்தான் “தியானம்” என்று சொல்கிறோம்.
ஒவ்வொரு நிமிடமும் அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து என்றும் பதினாறு என்ற நிலை அடைதல் வேண்டும்
இந்த உடலில் இருக்கும் பொழுது நாம் எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றோமோ இந்த மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்து நின்று விண்ணிலிருந்து வரக்கூடிய விஷத்தின் ஆற்றல்கள் அனைத்தையும் புசித்து மகிழ்ச்சி கொள்ளும் நிலையாக நாம் பெறுதல் வேண்டும்.
கருணைக் கிழங்கில் உள்ள விஷத்தை நீக்கி அதனுடன் உப்பு புளி காரம் என்று பல பொருள்களைச் சேர்த்து நாம் இரசித்துச் சாப்பிடுகின்றோம் அல்லவா…!
இதைப் போல உணர்வின் ஒளிச் சரீரமாக ஆன பின் விண்ணிலே தோன்றும் எத்தகைய விஷத் தன்மையான உணர்வாக இருந்தாலும் அதை உணவாக எடுத்து நமக்குகந்த சக்தியாக்கி உணர்வின் ஒளிச் சரீரமாகப் பெறும் தகுதியை நம்மால் பெற முடியும்.
1.மனிதனின் கடைசி நிலை இது தான்.
2.அழியா நிலை இது தான்.
3.அழியாச் சரீரமாக என்றுமே ஒளியாக வாழும் நிலையை இந்த மனித உடலிலிருந்து தான் பெறவேண்டும்.
இந்த மனித உடலுக்குப் பின்… நாம் யாருடன்… “எங்கே செல்ல வேண்டும்…?” என்ற எண்ணமே யாருக்கும் வருவதில்லை…!
ஐயப்பா…! எனக்குக் கஷ்டமாக இருக்கின்றதே எனக்கு இப்படி எல்லாம் சிரமமாக வருகிறதே..! என்று சொல்லித் தான் ஐயப்பனை வணங்கி வருகின்றார்கள்.
மக்களைக் காக்க அவர் பல நன்மைகளைச் செய்தாலும் ஐயப்பனை எண்ணித் தன் கஷ்டத்தை எல்லாம் சொல்லி இன்னும் கொஞ்சம் வேதனையை அவரிடம் கொட்டி அவரைக் கீழே இழுக்கும் நிலை தான் அது…
எந்த ஞானிகளை எண்ணினாலும் இப்படித்தான் சாதாரணமாக நம் கஷ்டங்களையும் குறைகளையும் வேதனைகளையும் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் பெற்ற ஆற்றல்களை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.
திருமூலரைப் பற்றி எடுத்துக் கொண்டாலும் பதஞ்சலி முனிவராக இருக்கப்படும் பொழுது மந்திரம் யந்திரம் என்று பல நிலைகளில் அவர் செயல்பட்டவர் தான்.
பின்னாடி… மந்திரம் யந்திரம் எல்லாம் “தவறு…!” என்று உணர்ந்து இன்னொரு (மாடு மேய்ப்பவன்) உடலுக்குள் வந்தாலும் உண்மையின் நிலையைத் “திருமூலம்…!” என்று கண்டுணர்ந்தார்.
திருமூலம் என்பது இயற்கையின் உணர்வின் அலையை அன்று அகஸ்தியன் கண்டுணர்ந்ததைத் தனக்குள் உணர்ந்து… உணர்ந்த நிலைகளைத் திருமூலராக நின்று வெளிப்படுத்திக் காட்டினார்.
1.ஒவ்வொரு நிலைகளிலும் உள்ள இயக்கச் சக்தியை உணர்ந்து
2.(நாம்) மனிதனாவதற்கு முன் உயிர் எப்படி ஒளியானதோ
3.அந்த ஒளியின் தன்மையை (நம்மை உருவாக்கிய சக்தியை) அதைத் தான் திருமூலம் என்பது.
4.அணுவிற்குள் இருக்கும் இந்த உணர்வின் தன்மையைத்தான் திருமூலர் இயக்கினார்… உணர்ந்தார்…!
உயிரின் இயக்கத்தையும் அணுவிற்குள் இருக்கும் ஆற்றலையும் அந்த மூலத்தையும் அவர் உணர்ந்து வெளிப்படுத்தியிருந்தாலும்
1.அவர் சொன்னதைத் “திருமூல மந்திரம்…” என்று நாம் சொல்லி
2.அவன் அருள் பெறவேண்டும் என்று ஏங்கினாலும்
3.இந்த உடலின் சுகபோகத்திற்குத்தான் பயன்படுத்துகின்றோம்
4.விண் செலுத்தும் மார்க்கமோ… விண் செல்லும் மார்க்கமோ… இல்லாதபடி ஆகிவிட்டது.
அதே போல 5300 ஆண்டுகளுக்கு முன் அணுவின் ஆற்றலின் இயக்கத்தின் தன்மையைக் கண்டறிந்த போகனோ அவன் உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி அவன் விண் சென்றாலும் கூட போகன் மந்திரம் என்று “சம்போ மகாதேவா…!” என்று மாற்றிவிட்டார்கள்.
தாவர இனச் சத்தின் போதையை மாற்றி அதனின் உணர்வு கொண்டு இன்றைய உடலின் சுகத்திற்கும் தன்னுடைய பெருமைக்கும் தான் இன்று அதைச் செயல்படுத்துகின்றனரே தவிர
1.அந்தப் போகமாமகரிஷி சொன்ன உணர்வின் தன்மை கொண்டு
2.விண் செல்ல வேண்டும்…! என்று யாரும் எண்ணவில்லை.
தனது உடலின் ஈர்ப்புக்குத் தனது சுகத்திற்கு அவனுடைய சக்தியை நாம் உணர்ந்து அவனின் சக்தியின் துணை கொண்டு இந்த உடலே பிரதானம் என்ற நிலைகளில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சதமற்ற இந்த உடலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.
1.இந்தச் சதமற்ற உடலை விட்டுப் பிரிந்து
2.என்றும் ஒளியின் சரீரமாக உயிருடன் ஒன்றி
3.அவனுடன் அவனாக (உயிருடன்) அவனாக வாழ வேண்டும் என்று விரும்பிய
4.அந்த மகரிஷிகளின் நிலையை நாம் காணவில்லை.
5.அந்த நிலைகளை இப்பொழுது யாரும் எண்ணுவதில்லை.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி ஒளியின் சிகரமாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.
அவன் உணர்வை வளர்த்துக் கொண்ட அக்கால மக்களும் அவன் ஈர்ப்பு வட்டத்தில் அவனைப் போன்றே ஒளிச் சரீரமாகிப் பேரின்ப வாழ்க்கையாக சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் சுழன்று கொண்டுள்ளார்கள்.
அக்காலங்களில் அவர்கள் சென்றிருந்தாலும் அவர்களுக்குப் பின் அழியா ஒளிச் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்லும் நிலை படிப்படியாகக் குறைந்து குறைந்து அந்தப் பாதையே தெரியாத நிலை உருவாகிவிட்டது.
யார் அதைப் பெறுகின்றனர்…? அதனில் யார் போய் இணைகின்றனர்…!
இப்போது நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த மெய் வழி செல்லும் மார்க்கத்தைக் காட்டிய பின் அதைச் செயலாக்குகின்றோம். ஏனென்றால் இனம் இனத்தைச் சேர்க்கும்.
ஒளியின் சுடர் கொண்டு எந்த ஒளியின் சரீரத்தை நாம் எடுக்கின்றோமோ அந்த ஒளியின் தன்மையை வளர்க்கப்படும் போது இனம் இனத்தைச் சேர்க்கும்…!
இப்போது நான் கோபிக்கின்றேன் என்றால் அதே மாதிரியே இன்னொருத்தரும் கோபப்பட்டார் என்றால் கோபப்பட்ட இரண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்து விடுவார்கள்.
ஒருவர் வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கிறார் என்றால் வாழ்க்கையில் கஷ்டம் என்றால்.. “வேதனையைத்தானே பட வேண்டும்” என்று இந்த இரண்டு உணர்வும் ஒன்றாகச் சேரும்.
இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள். நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கணவனை இழந்தவர்கள் என்ற நிலையில் யாரும் எண்ண வேண்டாம். அவர்களினுடைய உணர்வுகள் உங்களுடன் ஒன்றியே உண்டு.
அவர்கள் உங்களிடமிருந்து என்றும் பிரியவில்லை. அவர்கள் உணர்வு உங்களுடன் வாழ்கின்றது. அவருடன் வாழ்ந்த காலங்கள் நினைவுக்கு வரும்போது அந்த இயக்கங்களும் வருகின்றது.
உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்யும்போது உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைகின்றது. அதனால் அவர்கள் இன்னொரு உடலுக்குள் போவதில்லை. ஆனால்…,
1.இன்னொரு உடலுக்குள் போய்விட்டால் (மனவிக்கு) தனக்குக் கணவன் ஏது….!
2.உடலை விட்டுச் சென்று விட்டால் எப்போது கணவனும் மனைவியும் இணைவது…?
ஆகவே உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மா (கணவனோ அல்லது மனைவியோ) “பேயாகச் சென்று… நோயாகச் சென்று… இன்னொரு உடலுக்குள் போகாமல் தடுக்கும் நிலையைத்தான் “எமனிடமிருந்து… சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…!” என்று சாஸ்திரங்களில் ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.
உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாவைத் தனக்குள் ஒன்றிய நிலைகள் கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ளுதல் எண்ணுதல் வேண்டும்.
தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் மீண்டும் இன்னொரு உடல் பெறாதபடி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று அந்த ஆன்மாக்களை விண்ணிலே செலுத்துதல் வேண்டும்.
ஒரு குடும்பப் பற்றுடன் வரப்படும் போது இதனைப் பார்க்கலாம். “வசிஷ்டரும் அருந்ததியும்” என்று சொல்வார்கள். அதாவது
1.தாய் தந்தையர்கள் இணைந்து ஒரு நட்சத்திரமானாலும்
2.திருமணமாகாத குழந்தையின் உயிரான்மாக்களும் அவர்களுடன் சேர்ந்தே
3.அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும்.
வசிஷ்டரும் அருந்ததி என்ற நட்சத்திரத்தில் ஒன்று மட்டுமல்ல நான்கு நட்சத்திரங்கள் உண்டு. அதாவது இரண்டு நட்சத்திரத்தின் (வசிஷ்டர் நட்சத்திரத்தின்) அருகிலே ஒன்று வரும்.. மற்றொன்றும் வரும். ஆக நான்கு நிலைகள் அங்கே வருகின்றது.
இன்று விஞ்ஞான அறிவினால் டெலஸ்கோப்பின் துணை கொண்டு சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்கின்றார்கள். வசிஷ்டர் அருந்ததி என்று இரண்டைத் தான் பார்ப்பார்கள். ஒன்று மற்றொன்று பின்னாடி செல்லும் போது மறைந்து விடும்.
1.மறைந்து விட்டால் முதலில் “ஒன்று” என்பார்கள்
2.அப்புறம் திடீரென்று…. “அபூர்வமாக இன்னொன்றும் தெரிகிறது…!” என்பார்கள்.
தாய் தந்தையின் மீது பற்று கொண்டவர்கள் தன் உடலை விட்டுச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம் சென்ற பின் அதன் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் பிறவியில்லா நிலைகளாக
1.இப்போது தன் குடும்பத்தில் எப்படிக் குழந்தைகளுடன் வாழ்கின்றாரோ அதே போல்
2.ஒளியின் சுடராக அன்னை தந்தையின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சுழன்று கொண்டுள்ளார்கள்.
இவைகளை நீங்கள் எப்படி விஞ்ஞானக் கருவி கொண்டு பார்க்கின்றீர்களோ இதைப்போல மெய் ஞானிகளின் உணர்வை எமக்குள் (ஞானகுரு) செலுத்தி இந்த உணர்வின் தன்மை கொண்டு விண்ணுலக ஆற்றல் எவ்வாறு இருக்கிறது என்ற நிலையைத் தெளிவாக்கிக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
குருநாதர் சொன்னபடி விளையச் செய்த அந்த உணர்வின் ஞானத்தைத்தான் “சொல் வடிவில்” உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
இதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தால் உங்கள் எலும்புக்குள் ஊழ்வினையாக இது பதிவாகின்றது. பதிவானதை மீண்டும் மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த அருள் ஞானி அகஸ்தியன் சென்ற வழிகளில் நீங்களும் செல்லலாம்.
கணவன் மனைவி குழந்தைகள் சகிதம் குடும்பமாக எளிதில் பெறலாம். இதில் ஒன்றும் கஷ்டமில்லை….!
1.நான் குண்டலினியைத் தட்டியெழுப்ப வேண்டும்.
2.கீழிருந்து மேலே ஏற்ற வேண்டும்.
3.காட்டுக்குள் போய் தவமிருக்க வேண்டும் என்று
4.காட்டிலே தவம் இருந்து பெறக் கூடியது அல்ல இது….!
நம்மை உருவாக்கிய தாய் தந்தையருக்கு நாம் செய்ய வேண்டியது – “மோட்ச தீபம்”
நாம் குழந்தைப் பருவத்தில் வளர்ந்து வரும் சமயம் நம் அம்மா அப்பா “என் பிள்ளைக்கு என்ன செய்கிறதோ… ஏது செய்கிறதோ…?” என்று அடிக்கடி வேதனைப்பட்டு இருப்பார்கள்.
பிள்ளை பள்ளிக்கூடம் போகும் பொழுது “ரோட்டில் எங்கேயும் அடிபட்டு விடுமோ… இங்கே அடிபட்டு விடுமோ…! என்பது போன்ற வேதனைகளை எல்லாம் எண்ணி இருப்பார்கள்.
பிறந்த குழந்தையை நாம் பார்க்கிறோம் இல்லையா…! இரவெல்லாம் “நச் நச்சென்று” அழுது கொண்டிருக்கும்.
குழந்தையின் தாயும் “தன் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டுமே…” என்று தூங்காமல் முழித்துக் கொண்டு அந்த வேதனையைத் தாங்கி தாய் பிள்ளையைக் காப்பாற்றி இருக்கும்.
நம்மை வளர்ப்பதற்காக வேண்டி இதைப் போன்று சந்தர்ப்பத்தால் எடுத்த வேதனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தனக்குள் வளர்த்து கடைசியில் தாயின் உடல் நலிவடைந்து நோயாகி விடுகின்றது.
நோயாக ஆனபின் அவர்கள் எழுந்திருக்க முடியாமல் ஆகி விட்டால்… நாம் என்ன சொல்கிறோம்…?
1.“சனியன் எப்பொழுது தொலையுமோ”ஒரே தொல்லையாக இருக்கிறது
2.“சீக்கிரம் போய்த் தொலைந்தால் பரவாயில்லை…
3.காலா காலத்தில் நாம் நம் வேலையைப் பார்க்கலாம்
4.எங்கே நம் வேலை நின்று விடுமோ தான் நாம் நினைக்கிறோம்.
ஆனால் நம்மைக் காப்பாற்றுவதற்காக நம் தாய் தகப்பனார் எத்தனைப் பாடு பட்டார்கள்… என்று அந்த நேரத்தில் ஒரு நிமிடமாவது நினைத்துப் பார்க்கிறோமா…? இல்லை…!
அந்த நல்ல உணர்வுகள் எல்லாம் சிறு குழந்தையில் நம்மிடம் இருந்தாலும் வளர்ந்த பின் காணாமல் போய் விடுகிறது.
சிறு குழந்தையாக இருக்கும்போது “நாம் கஷ்டப்படுகிறோமே…” என்று நம்மை எண்ணி எண்ணி தாய் தந்தையர் வேதனையுடன் வளர்த்திருக்கின்றார்கள்.
அதைப் போன்று அந்தத் தாய் வேதனை உணர்வு கொண்டதால் நம்மை எண்ணும் போது நம்மைப் பார்க்கும் போது வெறுப்பு வந்து விடுகிறது.
பார்…! என் அம்மா ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைத்திருப்பது போல் தான் என்ன நடத்துகின்றது. என்னைத் திட்டிக் கொண்டே இருக்கின்றது… “இதெல்லாம் ஒரு தாயா…!” என்று நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஏனென்றால் நம்மைக் காக்க நல்ல உணர்வுகளை எடுத்தாலும் வேதனைப்படும் பொழுது நஞ்சாகி நம் மேலே வெறுப்பின் உணர்வாக அது மாறி விட்டது.
1.நம்மைக் காக்க வேண்டும் என்பதற்காக வெறுப்பையும் வேதனையையும் எடுத்த
2.அந்தத் தாயைக் காக்க வேண்டும் என்று எண்ணுவதற்கு நம்மிடம் நல்ல மனதில்லை.
எதையாவது பேசிக் கொண்டே இருக்கிறது. “சனியன்…! தொலைந்து போனால் பரவாயில்லை… அது முகத்தில் கூட நான் முழிக்க மாட்டேன் என்று நினைக்கிறோம்.
நம்மைக் காக்க வேண்டும் என்பதற்காக வந்தது தாய். அதை நாம் நினைத்துப் பார்க்கிறோமா..?
என் அம்மாவைப் பாருங்கள்… எப்பொழுது பார்த்தாலும் “நச்…நச்…” என்று பேசிக் கொண்டே இருக்கிறது.. என்று நிறைய பேர் சொல்வார்கள். இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா…?
“இல்லாத கொடுமை எல்லாம் எனக்குச் செய்கிறது”என்று சொல்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
அதே போல் “என் அப்பாவும் இப்படித்தான் செய்கிறார்” என்று நினைப்பார்கள்.
தந்தை அவர் ஆர்வத்தோடு அதை இதைக் கஷ்டப்பட்டு செய்து எதையாவது புரட்டிப் போட்டுத் தன் பிள்ளையைப் பசி பட்டினி இல்லாமல் சிரமமில்லாமல் வளர வேண்டும் படிக்க வேண்டும் என்பதற்காக
1.பலரிடம் திட்டு வாங்கி இருப்பார்கள்…
2.பல அவஸ்தைப்பட்டு இருப்பார்கள்.
3.இதெல்லாம் அப்பாவிடம் நோயாகி இருக்கும்.
பார்… எங்க அப்பனை…! எப்படி இருந்தார் இப்பொழுது இப்படி ஆகிவிட்டார்… இதெல்லாம் தேவையா…? என்போம்.
நல்ல சட்டையாக (குழந்தைக்குப் பிடித்த) நான் அணிந்து சென்றால் அப்பாவிற்குப் பிடிக்காது.
இந்தச் சட்டையெல்லாம் போடாதே என்று தந்தை சொல்வார்.
உடனே… பதிலுக்கு நாம் என்ன நினைப்போம்..? நீ சும்மா இரு…! எப்பொழுது பாத்தாலும் இப்படியே தான் சொல்லிக் கொண்டு இருப்பாய்… என்று என்று எதிர்த்துப் பேசத்தான் நாம் பழகி வைத்துள்ளோம்.
அவர்கள் அக்கறை கொண்டு நமக்காகச் சிரமப்பட்டார்கள்… நமக்கு நல்ல வழி காட்டுவதற்காக அவ்வாறு செய்தார்கள் என்று அதை நாம் நினைக்கின்றோமா…?
குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு எவ்வளவோ சிரமப்படுகிறார்கள் செலவழிக்கவும் செய்கிறர்கள். படிக்கச் சென்றால் ஐயாயிரம் பத்தாயிரம் இலட்சம் என்று கேட்கிறார்கள். அதற்காக வேண்டி எத்தனை அலைச்சல் அலைகிறார்கள்,
அப்பா அம்மா நமக்காக இலட்சக் கணக்கில் செலவு செய்து டாக்டருக்கோ இன்ஜினியருக்கோம் மற்ற படிப்பிற்கும் படிக்க வைத்தால் நாம் என்ன செய்கிறோம்..?
அங்கு படிக்கப் போகும் இடத்தில் “ஷோக்” பண்ணிக் கொண்டு “மைனர்” போல் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.
“அப்பா பேச்சைக் கேட்டு நட..” என்று கூறினால் அதைக் காது கொடுத்துக் கேட்பதில்லை. படிக்கும் இடத்தில் நான்கு சிநேகிதர்கள் சேர்ந்து விட்டால் உடனே புரட்சி.
இந்த விஷத்தின் தன்மை கொண்டு தான் நாம் இருக்கின்றோமே தவிர தாய் தந்தையை நினைத்தோ அவர்கள் நம்மை எந்த நிலைமைக்குக் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார்களோ அதைப் பற்றியெல்லாம் நாம் சிறிதறவும் எண்ணுவதில்லை.
ஏண்டா நீ இப்படியெல்லம் செய்கிறாய் ஏதாவது கேட்டு விட்டால் உடனே புரட்சி.
பார்…! என்னுடைய கௌரவத்தையே நீ குறைத்து விட்டாய். வரும் போதும் போகும் போதும் நீ இதைத்தான் கேட்டுக் கொண்டே இருக்கிறாய்.
1.நீ தொலைந்தால் பரவாயில்லை
2.இல்லை என்றால் நான் வீட்டை விட்டுப் போகிறேன் என்று சொல்கிறோம்.
பல இலட்சம் படிப்புக்காகச் செலவழித்தாலும் இப்படிப் பையன் பேசியவுடன் அடடே நீ வீட்டை விட்டுப் போகாதே என்று
1.தன் பையனுக்கு வேதனை வரக் கூடாது என்று
2.அவர்கள் தான் வேதனையைத் தனக்குள் எடுத்து வளர்த்துக் கொள்க்கின்றார்கள்.
ஒவ்வொரு நிலைகளிலும் இப்படி நமக்காகப் பாடுபட்ட அந்த அன்னை தந்தையை நாம் எப்படி மதிக்க வேண்டும். விநாயகரைக் கும்பிடும் போது நாம் எப்படி வணங்க வேண்டும்..?
மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று நம் அழுக்கைத் துடைத்து விட்டு
1.நம் தாய் தந்தையரை நினைவுக்குக் கொண்டு வந்து
2.அம்மா அப்பாவின் உணர்வுகள் எல்லாம் என் உடலில் உள்ளது
3.என்னைக் காப்பதற்காகப் பட்ட விஷமான நஞ்சுகள் அவர்கள் உடலில் இருக்கின்றது
4.என்னைப் பாசமாக வளர்த்த உணர்வுகள் அங்கே இருக்கிறது.
உடலை விட்டுப் பிரிந்து சென்ற என் தாய் தந்தையரின் உயிராத்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து எனக்காகக் கஷ்டப் பட்ட அந்த நஞ்சின் வேதனைகள் மறைய வேண்டும்.
என் தாய் தந்தையர் அந்த மெய் ஒளியின் சுடருடன் சுழன்று என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அவர்களை சப்தரிஷி மண்டலத்திற்குள் உந்தித் தள்ள வேண்டும்.
1.அவர்களின் நினைவு கொண்டு
2.இந்த நினைவின் தன்மையை உந்தித் தள்ள வேண்டும்.
சூரியன் தனக்குள் வந்து மோதும் அல்ட்ரா வயலட் விஷத்தைப் பிரித்து இந்தப் பிரபஞ்சத்தையே ஒளி மயமாக மாற்றுகின்றது
அதைப் போன்று உடலை விட்டுப் பிரிந்து சென்ற தாய் தந்தையரின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டல ஒளிக் கடலில் இணைத்தால் உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து உயிருடன் ஒன்றிய நிலைத்த அறிவாக பேரொளியாக அங்கே வாழத் தொடங்குவார்கள்.
அதாவது சூரியன் எப்படி நஞ்சைப் பிரிக்கின்றதோ அதைப் போல மனித வாழ்க்கையில் நம்மைக் காத்திட்ட
1.தாய் தந்தையரின் உடலுடன் கலந்த நஞ்சினை
2.சரீரமற்ற நிலைகளில் அந்த நஞ்சைப் பிரித்து விட்டு
3.சூரியன் ஒளிச் சுடராக இருப்பது போல்
4.அன்னை தந்தையருடைய உயிராத்மாக்கள் ஒளிச் சுடராக அங்கே மாறும்.
நம்மை உருவாக்கி வளர்த்த தாய் தந்தை முன்னோருக்குச் செய்ய வேண்டிய தலையாயக் கடமையாகும். இப்படிச் செய்தால் தான் நாம் வாழும் இந்தப் பூமியும் பரிசுத்தமாகும்.
அகஸ்தியன் கொடுத்த விநாயகர் தத்துவப் பிரகாரம் “மோட்ச தீபம்…!” என்பதும் இதுவே ஆகும்.
இறந்தவர்களுக்குப் பிண்டம் செய்து வைத்து அமாவாசை நாள் அன்று அழைக்காதீர்கள்…!
நம் முன்னோர்கள் (குலதெய்வங்கள்) குடும்பத்தில் எத்தனையோ இன்னல்களைத் தாங்கி நம்மை வளர்த்திட வாழ்ந்திட அவர்கள் எத்தனையோ வேதனைகள் பட்டுள்ளார்கள்.
அந்த வேதனையான உணர்வுகள் அவர்களுக்குள் உடலில் நோயாகி உடலை விட்டு வந்த பின் மீண்டும் புழுவிலிருந்து மனிதனாக வந்து கீழ் இறங்கி (மறு பிறவியில்) வேறொரு சரீரங்களைப் பெறுகின்றனர்.
1.அவர்கள் இன்னோரு உடல் பெறாத வண்ணம்
2.நாம் அனைவரும் கூட்டுத் தியானம் செய்து
3.முன்னோர்களின் உயிரான்மாக்களை உந்தித் தள்ளி விண்ணிலே செலுத்தி
4.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்தால் அங்கே உடல் பெறும் உணர்வுகள் அழிந்து ஒளி பெறும் உணர்வுகள் உயிருடன் ஒன்றி மகரிஷிகள் உமிழ்த்தும் ஒளியான உணர்வை உணவாக எடுத்து ஒளியாக அங்கே வாழத் தொடங்குகின்றனர்.
அவர்கள் முன் சென்றால் பின் அதே வலுக்கொண்டு நாமும் அங்கே அழியாச் சரீரமாக விண் செல்லலாம்.
ஆனால் அமாவாசை அன்று இப்பொழுது வழக்கப்படி சாங்கியங்கள் செய்து மந்திரங்களைச் சொல்லி பெரியவர்களுக்கு வைத்துப் படைத்து நாம் இழுத்தோம் என்றால் அவர்களைப் பூமிக்குள் இழுப்பதாகத்தான் அர்த்தம். அதே போல்
1.இறந்தவர்கள் கனவில் வந்து விட்டார்கள் என்றால்
2“நாமும் சீக்கிரம் போய்விடுவோம்…” போலத் தெரிகின்றது என்று
3.இப்படிப் பேசுவோரும் உண்டு.
இவைகளை எல்லாம் மறந்து மெய்ஞானியின் அருள் வழியில் நாம் சென்று நம்முடைய மூதாதயர்களை அங்கே பிறவா நிலை என்ற நிலை அடையச் செய்ய வேண்டும்.
இங்கே கேட்டுணர்ந்தோர் இனிமேல் அமாவாசை நாள் கொண்டாடும் போது அங்கு பிண்டம் வைத்து உணவு வைத்து உங்கம் முன்னோர்களை அழைக்காதீர்கள்.
அதற்குப் பதில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குள் செருகேற்றி முன்னோர்களின் உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்தோடு இணையச் செய்யுங்கள்.
1.ஒரு உயிரான்மா உடலை விட்டு வெளியே சென்றால்
2.யார் மேல் பற்று இருக்கின்றதோ
3.48 நாட்களுக்குள் அந்த உடலின் ஈர்ப்பு வட்டத்திலே செல்லும்.
4.உணர்வின் தன்மை சிறுகச் சிறுக சேர்ந்து அந்த உடலுக்குள் செல்லும்.
ஆகவே அதற்கு முன் நாம் விண் செலுத்து தல் அவசியம். தற்சமயத்தில் இறந்தவர்களை அந்த 48 நாட்களுக்குள் சுலபமாக விண் செலுத்த முடியும்.
இதற்கு முன் அறியாத நிலைகள் இருந்து மூதாதையர்கள் உடலை விட்டுச் சென்றிருந்தால் அவர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றாலும் இருளுக்குள் தான் அமிழ்ந்துள்ளார்கள்.
அவர்கள் உணர்வுகள் தான் நம் உடலாக உருவாகியுள்ளோம். அவர்கள் எண்ணங்கள் நமக்குள் ஆழப் பதிந்து இருக்கும் நிலை கொண்டு நாம் அடிக்கடி “அவர்கள் விண் செல்ல வேண்டும்…” என்று உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்க வேண்டும்.
இன்னொரு உடலை விட்டு எப்பொழுது வெளியே வந்தாலும் இதைப் போல நாம் சொல்லிக் கொண்டிருந்தால் இன்னொரு பிறவிக்குப் போகாதவாறு நம் முன்னோர்களை விண் உலகம் சேர்த்து ஒளியின் சரீரம் பெறச் செய்ய முடியும்.
கடந்த காலத்தில் நாம் இந்த முறைப்படி செய்யவில்லை. அந்த உயிரான்மாக்கள் மாறிய நிலையில் இருந்து இப்பொழுதாவது நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் செய்வோம்.
இதற்காக வேண்டித்தான் பௌர்ணமி தியானத்தையே அமைத்துள்ளோம். 48 நாளுக்குள் உங்கள் வீட்டில் குடும்ப சகிதமாக கூட்டு தியானம் இருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களை விண் செலுத்துங்கள்.
அவர்கள் 100 வருடத்திற்குள் உடலை விட்டுப் பிரிந்திருந்தார்கள் என்றால் அந்த ஆன்மாக்களை நாம் விண் செலுத்த முடியும்.
100ஐக் கடந்து விட்டால் இன்னொரு உடலுக்குள் சென்று விடுவார்கள். உணர்வின் தன்மை கொண்டு மாறுபட்ட நிலைகள் மற்ற உடலுக்குள் புகுந்து உடல் பெறும் நிலையைப் பெற்று விடுவார்கள்.
இதைப் போன்ற நிலைகள் இல்லாது பௌர்ணமி நாளன்று நம் மூதாதையர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்தல் வேண்டும்.
1.அவர்கள் முதலில் விண் சென்றால் பின் நாம் அங்கே செல்கின்றோம்.
2.அந்தச் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை பெறுகின்றோம்.
நம் மூதாதையர்கள் முதலில் மனிதர்கள் ஆனார்கள். அவர்கள் நம்மை மனிதனாக உருவாக்கினார்கள்.
ஒரு மரம் கெடாது இருப்பதற்கு அதனின் விழுதுகள் மிகவும் முக்கியம். மூதாதையர்களின் விழுதுகளாகத்தான் நாம் இருக்கின்றோம்.
நம் முன்னோர்கள் உடலை விட்டு பிரிந்து சென்றாலும் விழுதாக இருக்கும் நாம் அருள் ஞானிகள் காட்டிய உணர்வை சத்தாக நாம் எடுத்து ஞானிகளின் உணர்வின் துணை கொண்டு விண் செலுத்துதல் நம் தலையாயக் கடமையாகும்.
பின் நாமும் அவர்கள் சென்றடைந்த சப்தரிஷி மண்டல வட்டத்தில் இணைந்திட முடியும். அதைச் செய்வதற்கே குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் இதை செய்கின்றோம்.
இது தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டிய “விண் செல்லும் மார்க்கம்.”
நம் குடும்பத்தில் “உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்கள் விண் செல்வது மிகவும் அவசியம்” ஏன்…?
பௌர்ணமி தியானம் மிகவும் முக்கியம்…!
இதை எதற்காக வேண்டி வைக்கிறோம் என்றால் உங்கள் புலனறிவின் எண்ணங்களை விண்ணை நோக்கச் செய்து உங்கள் நினைவலைகளை விண்ணை எட்டும்படிச் செய்கின்றோம்.
1.எந்த ஊரில் நீங்கள் இருந்தாலும் அனைவருமே சேர்த்து,
2.இந்த எண்ண அலைகளைக் குவிக்கப்படும் பொழுது,
3.நமது எண்ண அலைகள் வெகு தூரத்தில் பாய்கின்றது
நமது குருநாதர் அவர் ஆரம்பத்தில் விண் சென்றவர்.
அப்பொழுது நம் எண்ண அலைகள் ஒன்றாகச் சேர்த்து குவிக்கப்படும் பொழுது மனித உடலிலிருந்து ஒளியின் உணர்வுகளைப் பெற்று நமது குருநாதர் அவர் “ஆரம்பத்தில் விண் சென்ற உணர்வுகளை” நாம் அனைவரும் எளிதில் பெற முடிகின்றது.
அந்த ஒளியின் உடலில் இருந்து வந்த ஒளி அலைகள்தாம்
1.நம் பூமியில் படரப்பட்டு
2.மற்ற உடல்களிலே பாய்ச்சப்பட்டு,
3.அந்த உணர்ச்சிகள் தூண்டி மீண்டும் இங்கே எழுகின்றது.
4.எழுந்த நிலைகளில் அந்த வித்தின் சத்துதான் எமக்கும் அது கிடைத்தது.
குருநாதர் அருள் வழி கொண்டு அவர் கொடுத்த வித்தினை அவர் காட்டிய வழிகளில் வளர்த்து அதை உங்களுக்குள்ளும் நல்ல வித்தாக விளையச் செய்கின்றோம்.
ஒரு நெல் பசியை போக்காது. பல நெல்கள் ஒன்று சேர்ந்து ஆக்கப் பணிகளுக்கு பயன்பட்டு அதை எப்படி உணவாக உட்கொள்கின்றோமோ அதைப் போன்று நாமெல்லம் இந்த நிலைகளைச் செய்தால் அதன் வழியில் துரித நிலைகளில் பெறமுடியும்.
பல ஆண்டுகள் யாம் தனித்து எடுத்தாலும் அந்த உணர்வின் தன்மையில் பல ஆயிரங்கள் வந்தாலும் சத்து சேர்ப்பது மிகக் கடினம்.
நாம் எல்லோரும் சேர்ந்து அந்த மெய் ஒளியின் தன்மையை நம் குருநாதர் காட்டிய நிலைகளில் கொண்டு ஒவ்வொரு உடலிலும் சேரும் இந்தத் துன்பத்தை நீக்கி அந்த இன்பத்தின் நிலைகளைப் பெருக்கிட வேண்டும்.
அதைப் பெருக்குவதற்கு யாம் சொல்லும் இந்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடித்து ஆத்ம சுத்தி செய்து அந்த மெய்ஞானியின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கும் பொழுது அனைவருக்குள்ளும் அந்த சத்து விளைகின்றது.
ஆக நமக்குள் ஒருவருக்கொருவர் கலந்து அந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்றால் தான் முடியுமே தவிர “தனித்து ஒருவர் செல்வோம்… என்பது முடியாது”.
நாம் அனைவரையும் ஒன்று சேர்க்கும் பொழுது எவர் ஒருவர் முந்திச் செல்கின்றாரோ, அவர் பலன் பெறுகின்றார். இப்படி நாம் இந்த வழிகளில் சென்று நமக்குள் உறுதுணையான நிலைகளை ஏற்படுத்திக் கொண்டால்தான் நாம் உருப்பெற முடியும்.
கூட்டு தியானங்களில் உங்கள் ஒவ்வொருவரையும் ஐக்கியப்படுத்தி பௌர்ணமி தியானங்களில் எண்ணங்களைக் குவிக்கச் செய்கின்றோம்.
நாம் நண்பர்கள் என்ற நிலைகளில் சென்றாலும் அடுத்து நாம் இந்த உடலைவிட்டுப் பூமியை விட்டு இந்த உயிராத்மா செல்லும்பொழுது முறைப்படி நாம் சப்தரிஷி மண்டலங்களில் அந்த உயிராத்மாவை உந்தித் தள்ள வேண்டும்.
எந்த குடும்பத்திலிருந்து அந்த உயிராத்மா செல்லுகின்றதோ அந்தக் குடும்பத்தில் உள்ளோரிடம் அந்த உடலின் உணர்வலைகள் இருக்கின்றது
1.அதை எண்ணி விண்வெளியின் ஆற்றலை எண்ணும் பொழுது,
2.அந்த உணர்வின் தன்மை அவர்கள் பெறுவது சுலபமாகின்றது.
அதைப் போன்று உறவினர்கள், நண்பர்கள் நம்முடைய நிலைகளில் நம் குடும்பத்தாருக்கு ஒத்துழைக்கப்படும் பொழுது அதன் நிலைகளில் விண் செலுத்துகின்றோம்.
நம் குடும்பத்தினுடைய நிலைகளில் ஒரு உயிராத்மா விண் சென்றது என்றால் அதனால் பெரும் லாபம் அடைகின்றோம். “சப்தரிஷி மண்டல அலைத் தொடர்பு” நமக்கு எளிதில் கிடைக்கின்றது.
அபிராமிபட்டராக இருந்தவர்… இப்பொழுது ஈஸ்வரபட்டராக இருக்கிறார்…!
(1) தன் ஆன்மாவை ஒளிப்படுத்தும் மார்க்கத்தைக் காட்டினார் ஈஸ்வராய குருதேவர்
அகஸ்தியன் 27 நட்சத்திரங்களின் தன்மை எடுத்டு உயிரை ஒளியாக மாற்றி முதலில் விண் சென்றவன். துருவனாகி துருவ நட்சத்திரமானான் அதன்பின் இன்னொரு உடலுக்குள் போகாதபடி வந்தது.
நம் குருநாதர் ஈஸ்வராய குருதேவர் கூட உடல் விட்டு உடல் தாவி வந்தவர்தான். கூடு விட்டு கூடு பாய்ந்து
1.முதலில் அபிராமி பட்டராக இருந்தார்.
2.இப்பொழுது இங்கே ஈஸ்வரபட்டராக இருக்கிறார்.
3.இதைப்போல ஏனைய இன்னும் ஒரு ஐந்தாறு உடல்கள் எடுத்து வந்தவர்தான்.
இந்த உடலுக்கும் சேர்த்து அதிலேயும் பைத்தியக்காரராகத்தான் இருக்கிறார். இதிலேயும் பைத்தியக்காரர்தான்.
ஆனால் தன்னுடைய காரியம் எதுவோ அதைச் சாதித்து வந்தவர் நமது குருநாதர்.
இந்த உடலில் மாற்றங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது…? என்கின்ற வகையில் அதை எண்ணித்தான் இனி இந்த உடலில் கடைசியாகத் தான் சேமித்த பிற்பாடுதான்
1.சில ரகசியங்களைச் சொல்லி
2.எப்படி எடுக்க வேண்டும் என்பதை எமக்குச் சொன்னார்.
அதைச் சொல்லிவிட்டு அவர் உடலை விட்டுச் சென்ற பிற்பாடு அந்த ஆன்மாவை எப்படி ஒளியாக வேண்டும் என்று அதற்குண்டான மார்க்கத்தைக் காட்டினார்.
ஏனென்றால் எதுவும் உந்துவிசை வேண்டுமல்லவா. அந்த மார்க்கங்களைக் கொடுத்தார்
(2) ஆயிரம் வருடம் தவமிருந்த ஆன்மாவை விண் செலுத்தச் செய்தார் குருநாதர்
அவர் விண் சென்ற பிற்பாடுதான் இன்று மற்றவர்களை நாம் செலுத்துகின்றோம். அவரை விண் செலுத்துவதற்கு முதலில் ஆயிரம் வருடம் தவமிருந்த ஆன்மாவை விண் செலுத்தும்படி செய்தார்.
இமயமலைக்குப் போய் ஹரித்வாரில் “ஓ…ம் ஓ…ம்..” என்று ஆயிரம் வருடம் “ஓ…ம் நமச்சிவாய…. ஓ…ம் நமச்சிவாய…” என்று தவமிருந்த ஒரு ஆன்மா இந்தச் சிறைக்குள் (உடலுக்குள்ளே) அடைப்பட்டிருந்தது.
அந்த நிலையில் அதையே ஜெபமாக எடுக்கிறவர்கள் அந்த உணர்வுடன் சேர்த்து அவர்கள் ஆயிரம் வருடம் வாழ்ந்தவர்கள்.
இனியும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
அப்பொழுது அவர்களுக்கு இந்த விண் செல்லும் மார்க்கத்தைக் காட்டி,
1.என்னை அங்கே ஹரித்வாருக்குச் செல்லச் செய்து
2.வெள்ளத்தை வரவழைக்கச்செய்து அதைக் கடக்கச் செய்து,
2.அந்தச் சப்தத்தை “எதிரொலியாக்கி”
4.மீண்டும் அந்த எண்ணத்தை அவர்களுக்குச் சொல்லப்படும் போது,
5.சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய குருநாதர் எம்மைச் செயல்படுத்தினார்.
ஏனென்றால் சப்தரிஷி மண்டலத்தின் சக்தியைப் பெறவேண்டும் என்கின்ற உணர்வு அவர்களுக்குத் தெரியாது.
அன்றைக்கு ஒரு அரசனாக இருந்தவன் இந்த நிலையைப் பெற்றவன் இங்கே அடைபட்டிருக்கின்றான் இதற்கு, நீ ஏதாவது செய்து கலைத்து விட்டாய் என்றால் அவன் உன்னை நினைத்தானென்றால் உன்னைச் சுட்டுப் பொசுக்கக்கூடிய சக்தி இருக்கின்றது.
ஆகவே சப்தரிஷி மண்டல ஒளிகளை எடுத்து அந்த விண்ணுலகை எடுத்துக் காட்டு என்றார் குருநாதர்.
அவ்வாறு செய்தவுடன் அது வந்த பிற்பாடு இந்த ஆன்மா அது கூட்டைவிட்டு வெளியில் வருகின்றது.
1.அப்பொழுது சப்தரிஷி மண்டல ஒளிகளை இணைக்கப்படும்போது
2.அந்த நட்சத்திர அலைகளை நுகரும் ஆற்றல் கொடுத்தவுடனேதான்
3.இந்த ஆன்மா விண்ணுக்குச் செல்கின்றது
4.அந்த முகப்பின் உணர்வு வரப்படும்பொழுது அது சப்தரிஷி மண்டலத்திற்குள் இணைகின்றது.
(3) உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களை எப்படி விண் செலுத்துவது…? என்று பழக்கப்படுத்தினார் குருநாதர்
குருநாதர் முதலில் எமக்கு அந்த பழக்கத்தைக் கொடுத்து அடுத்து மற்ற ஆன்மாக்களை எப்படி விண் செலுத்துவது என்று சொன்னார். பிறகு இப்பொழுது நாம் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அதைச் செய்கிறோம்.
சொல்வது அர்த்தமாகின்றதல்லவா.
இல்லையென்றால் “அந்த வழி…” தெரியவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்? சும்மா சொல்லி வறட்டுத்தனமாகச் சப்தம் போட்டுக் கொண்டு இருப்பதில் பிரயோஜனம் இல்லை.
குருநாதர் அதற்கப்புறம் என்ன செய்தார். இப்பொழுது நான் இருக்கின்றேன். இந்த உடலை மாற்றி இதற்குச் சரியான நேரத்திற்குத் தேட முடியவில்லை.
நீ இன்னென்னது செய்ய வேண்டும் இப்படி, இப்படிச் செய்ய வேண்டும் என்று எம்மைப் பக்குவப்படுத்தி அவருடைய ஆன்மா உடலை விட்டுப் போகும் போது, அதற்கு என்ன செய்யவேண்டும்? என்றுதான் சில நிலைகளைச் செய்யச் சொன்னார்.
யாருக்கு…?
அவரை (குருநாதரை) விண் செலுத்துவதற்கு, அதற்கே ஒரு துணை தேவைப்படுகின்றது. நேரடியாக எங்கேயும் போக முடியாது. “உந்து விசை வேண்டும்”.
அந்தச் சப்தரிஷி மண்டல முகப்பை எடுத்து எண்ணத்தை திசை மாறாது கொண்டு போக வேண்டும். ஏதாவது திசை மாறிப் போனது என்றால் வான் வெளியிலே மிதந்துவிடும் அணுவின் தன்மை அடைந்தால் மற்ற கோளின் ஈர்ப்புக்குத்தான் போகும்.
சப்தரிஷி மண்டலத்துடன் இணையாது. இப்பொழுது இங்கிருந்து போய்விட்டது என்றால் மற்ற கோள்கள் அதாவது சந்திரன் இருக்கிறதென்றால் அங்கே போகும். ஆனால், அங்கே வளர்ச்சியற்ற அணுவாகத்தான் இருக்கும்.
(4) குரு இல்லாதபடி எந்த நிலையும் இருக்க முடியாது…!
ஏனென்றால் இங்கே எடுத்துக்கொண்ட உணர்வின் தன்மையில், மீண்டும் அதைக் கடந்து செல்லக்கூடிய திறன் இருக்காது அதற்குள்ளே அடைபட்டுப்போகும்.
அதில் எத்தனையோ வகைகள் அவர் சொல்லித்தான் இப்பொழுது நாம் இதைச்செய்கின்றோம்.
அதுதான் குரு இல்லாதபடி எந்த நிலையும் இருக்க முடியாது, குரு காட்டிய அந்த நிலைகளை நமக்குள் பதிவாக்கினால்தான் செல்ல முடியும்.
சும்மா அந்த கிணற்றுத்தவளை மாதிரி சுற்றிக் கொண்டு இருந்து எடுப்பதென்றால் இது முடியாது. ஏனென்றால் எமக்கு இருபது வருடம் இந்த அனுபவத்தைக் கொடுத்துத்தான இதைப் பெறச் செய்கிறார். அதனால்தான்
1.உங்களுக்கு அடிக்கடி இந்த உணர்வுகளைப் பதியச் செய்து பதியச் செய்து,
2.உங்கள் நினைவுகளை அங்கே கொண்டுபோய்
3.ஒவ்வொன்றாகக் கொண்டு வருகிறோம்.
அதற்குக் கணவன் மனைவி நீங்கள் இருவரும் இணைந்து, தியானத்தை இப்படி எடுத்தே ஆக வேண்டும். எதற்கு? உணர்வு வெளியில் போய்விட்டதென்றால் கருவை உருவாக்க வேண்டும்.
ஆகையினால் காலையில் துருவ தியானத்தை எடுத்து, அந்த மகரிஷியின் அருள்சக்தி நான் பெறவேண்டும் என் உடல் முழுவதும் படரவேண்டும் தன் கணவனுக்கு இந்தச் சக்தி கிடைக்க வேண்டும், என்று மனைவி எண்ணவேண்டும்.
அதே போன்று கணவன் தன் மனைவிக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.இந்த இரண்டு உணர்வும் ஒன்றாக்க வேண்டும்.
2.அதை நாம் உருவாக்கி அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளைப் பெற்று,
3.சப்தரிஷி மண்டலம் சென்றடையலாம்.
(5) ஒவ்வொரு உயிரான்மாவிலும் “சப்தரிஷி மண்டல முகப்பை” இணைக்க வேண்டும்
இங்கே துருவ நட்சத்திரத்தில் இருக்க முடியாது. அதனுடைய வட்டப்பாதையில் தான் போய்ச் சேரமுடியும். அப்பொழுது அதற்குண்டான முகப்பை எடுத்து இந்த உணர்வை எடுத்த பிற்பாடுதான் அங்கு போய்ச் சேரும்.
1.ராக்கெட்டை இங்கே செய்கிறார்கள்
2.கம்ப்யூட்டரில் அந்தப் படங்களை எடுக்கிறார்கள்.
3.அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்த்துக் கொண்டபின், “முகப்பில்” வைக்கிறான்.
4.ராக்கெட்டில் விண்ணில் சேர்த்த பிற்பாடு அந்த முகப்பைப் பார்த்து,
5.அந்த ஈர்ப்புக்குத்தான் (செயற்கைக் கோள்) அங்கே கொண்டு போகும்.
அதில் கொஞ்சம் திசைமாறிப் போனதென்றால் எங்கேயாவது இழுத்துக் கொண்டு போய்விடும். எந்தெந்தக் கோள்களை எடுக்கின்றானோ அந்த “முகப்பை” இதில் இணைக்க வேண்டும்.
அதே மாதிரித்தான் ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் அந்த சப்தரிஷி மண்டலங்களின் முகப்பை இணைக்கச் சொல்வது. அப்படி இணைக்காதபடி அந்த இடம் போய்ச்சேர முடியாது.
விலகிப் போனதென்றால் எங்கேயோ போய்விடுவோம். நாம் நினைக்கின்றோம். ஆனால் இதில் “கரணம் தப்பினால் மரணம்” என்கிற மாதிரிப் பல வித்தியாசமான நிலைகள் இருக்கின்றது.
(6) எம்மைப் பழக்கப்படுத்தி… குருநாதரை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்தார்
அதனால்தான் என்ன செய்கின்றோம்? குருநாதர் போகிறார் என்றால் அவரைச் சரியான எல்லை வைத்து அனுப்புவதற்குத்தான் எம்மை இப்படிப் பழக்கப்படுத்தினார்.
ஏனென்றால் மற்றவர்கள் எல்லாம், இந்த உடல் ஆசைக்குத்தான் குருநாதரிடம் வந்தார்கள்.
வந்தவுடனே அதைச் செய்வேன், பூனையைச் செய்வேன், யானையைச் செய்வேன், என்று சொல்லிக் கொண்டு ஆசையில்தான் போனார்கள்.
அப்புறம், இவர்கள் எங்கே? அவர்களால் அவரை விண் செலுத்த முடியாது
ஆனால் எம்மைச் சரியான முறையில் பக்குவப்படுத்தித்தான் தன்னை அதனுடன் இணைப்பதற்கு நீ எதை எதைச் செய்ய வேண்டும்? என்று முதலில் அதை ஏற்றச் சொல்கிறார்.
அது சரியாக வந்த பிற்பாடுதான் உடலை விட்டே குருநாதர் பிரிகின்றார். ஆன்மா போகும் போது இந்த உணர்வை வளர்த்தபின் இது எப்படிச் சரியான முகப்பில் கொண்டுபோய் இணைகின்றது.
இப்படி உதாரணம் தெரிந்து கொண்ட பிற்பாடுதான் அங்கே கொண்டு போகின்றார்.
சொல்வது அர்த்தமாகின்றது அல்லவா? சரியாக இங்கே இருந்து அந்த முகப்பு இல்லையென்றால் கொண்டுபோக முடியாது.
அப்புறம் உந்தி குருநாதருடைய ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்த பிற்பாடுதான் அந்தச் சக்தியை யாம் அதிகமாகப் பெற முடிந்தது
முதலில் என் அம்மா அப்பாவின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்திற்குக் கொண்டு போகச் சொன்னார் குருநாதர். அது கொண்டு போனால் அங்கே இரண்டு பேரும் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றார்கள்.